மீனவர்களே நீங்களும் மனிதர்களா


சினிமா உலகத்தினர் கலைஞருக்கு விழா எடுப்பதும் கலைஞர் சினிமா உலகத்தினருக்கு உதவிகள் செய்வதும் காலம்காலமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு சதாரண தொலைக்காட்சி சீரியல் போன்றது. அதிலும் சமீபத்தில் நடந்தேறிய நாடகமான சினிமா நடிகைகளுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் நாக்கை அடக்காமல் எழுத்துலகை மிகவும் கேவலமாக விமர்ச்சித்த பல அறிவார்ந்த! நடிகர்களும் நடிகைகளும் ஒன்றை மறந்து விட்டார்கள்

செய்கின்ற செயல்கள் எல்லாம் சரியானது அதிலும் இந்த முட்டாள் தமிழ் சமூகம் எப்போதுமே சினிமாக்காரர்கள் தோள்களில் தூக்கி கொண்டே திரிபவர்கள் என்ற நினைப்பில் நடந்து கொண்ட அவர்கள் தமிழர்கள் பல நேரங்களில் மயக்கத்தில் இருந்தாலும் சில நேரங்களாவது மனிதர்களாக இருப்பார்கள் என்பதுதான் அது.

பத்திரிகை அப்படி எழுதிற்று இப்படி எழுதிற்று என்று வெகுண்டெழுந்த சினிமாக்காரர்கள் தங்களை பேட்டி எடுக்க வரும்போது அர்த்தமே இல்லாத அவசியமே இல்லாத கேள்விகளுக்கு அறிவே இல்லாமல் பதிலளித்து தங்கள் புகைப்படங்களை அட்டையில் போட்டு தங்களுக்கான விளம்பரத்தை அள்ளி தரும் சமயத்தில் மட்டும் என்ன செய்கிறார்கள்

ஒரு நடிகை தன் வளர்ச்சிக்கு வேண்டி மற்றொரு நடிகையை பற்றி பத்திரிகைக்கே தகவல் தரும் இந்த சினிமா உலகில் எழுதுகின்ற பத்திரிகைகாரர்கள் மட்டும் எப்படி ஈனப்பயல்கள் ஆனார்கள் தெரியவில்லை

இப்படி ஒரு சாதரண விசயத்தை இத்தனை வெளிச்சமாக்கியதும் மீடியாதான் என்றால் எப்படி. . தாங்கள் காட்டிய எதிர்ப்பை வெளிப்படுத்தவும் பத்திரிகை உலகம் உதவியதே . . அதற்கான பதில்

தவறு யார்பக்கம் என்ற கேள்விக்கு விடை தேட நான் முயலவில்லை. . தீர்மானங்கள் அதை குறித்த செயல்கள் எல்லாம் எண்ணப்படுகின்றனவே அதைத்தான் இங்கே சுட்டிகாட்ட விரும்புகிறேன் . .யாரோ பத்திரிக்கையாளர் எழுதிவிட்டார் என்றால் அதற்கு பதிலாக அதே முறையில் பதிலடி என்பது சரியா என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டியது.

பத்திரிகை படிக்கும் அனைத்து நண்பர்களும் வாசகர்களும் அதை அப்படியே நம்பி விடுகிறார்கள் என்று யாராவது சொல்லமுடியுமா. அப்படி இருக்கும்போது இதற்கான அவசியம் என்ன வந்தது. சரி அதில்லை நமக்கான கவலை.

இரண்டே நாளில் சினிமா உலகத்திற்காக மெனக்கெட்ட நமது அரசாங்கமும் கலைஞரும் இதே வேகத்தில் எடுக்க வேண்டிய எவ்வளவோ முடிவுகள் இருந்தபோதிலும் அதிலெல்லாம் ஏன் அக்கரை காட்டுவதில்லை தெரிந்தவர்கள் சொல்லலாமே. .

தென் தமிழகத்தின் கடலோறபகுதிகளில் தினமும் ஒரு வேளை சோத்துக்காக கடலுக்குள் சென்று மீன்பிடிக்க செல்லும் நம் சகோதரர்கள் தினமும் திரும்புவுமோ மாட்டோமா என்ற நிலையில் தான் சென்று வந்தார்கள் இப்போது இயற்க்கை தொந்தரவுக்கு நடுவே தாங்கமுடியாத தொந்தரவாக வரும் இலங்கை கடற்படையின் அத்துமீறிய செயல்களை கண்டிக்கவோ இல்லை அதற்கு எதிராக இல்லை மீனவர்களுக்கு ஆதரவாக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா அதுவும் இல்லை,

மீனவர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றிருக்கவில்லை என்றாலும் தங்களுக்காக குரல் கொடுக்க ஒரு அரசியல்வாதி உண்டு என்ற மனப்பான்மையை பெற்றிருக்கிறார் விஜய்காந்த( அவர் எப்படி என்பதை அடுத்தடுத்த நடவடிக்கைகள்தான் உறுதிபடுத்தும்)

இதற்கிடையே இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் மீனவர்களுக்கு எதிரான செயல்களை தடுக்கவோ இல்லை அதுகுறித்து வாதிக்கவோ இல்லை அதுகுறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி முடிவு எடுக்கவோ அரசுக்கு நேரமில்லை மாறாக

காரியமே இல்லாத காரியத்திற்கு ஆதரவாக செயல்பட்டு பத்திரிக்கைக்காரர்களுக்கும் சினிமா உலகத்திற்கும் புகைந்து கொண்டிருந்து புகையை நெருப்பாக்கி அதில் குளிர்காயும் அரசியல்வாதிகளுக்கு

தண்ணீரில் மிதந்து

கண்ணீரில் தவிக்கும்

மீனவர்களை

நினைத்து பார்க்க அட்லீஸ்ட் மீன் சாப்பிடும் நேரமாவது தோணட்டும்.

சினிமா பிரபலங்களை பற்றி எழுதி பத்திரிகை விற்க்கும் பத்திரிக்கைகாரர்கள் அவர்களை பற்றி எழுதி விளம்பரம் தேடுவது இன்று நேற்றல்ல நீண்ட காலம் நடப்பதுதான் இருந்த போதிலும் தங்கள் விளம்பரத்திற்காக மட்டும் இல்லாமல் சமூக அக்கறை கொண்டும் தங்கள் பேனாவை திறக்க வேண்டுமென பத்திரிக்கைகாரர்களை கேட்டு கொள்கிறேன்.

இலங்கை தமிழர்கள் மீது (அது என்ன இலங்கை தமிழர்கள்) தமிழர்கள் மீது மிகுந்தை அக்கறை காட்டும் அரசு என்று துவக்க கால முதலே நடித்து வரும் அரசின் ஒரு சில அரசியல்வாதிகள் இலங்கைக்கு சென்று அங்குள்ள சகோதர சகோதரிகளின் அவல நிலையை அறிந்து ஆய்வு செய்ய சென்றுள்ளார்கள். இவர்களை அங்கே யாழ்ப்பாண தமிழர்கள் பலர் புறக்கணித்த நிலையில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளுக்க முடியாமல் திணறும் நம் அரசியல்வாதிகள் இனியும் என்ன செய்து விடப்போகிறார்கள்.

இப்படி இனம் கண்டுகொண்டு புறக்கணித்த அத்தமிழனின் மனநிலை நமக்கு வரவேண்டும் அப்போதுதான் நம் நிலை என்னவென்றும் அதற்கு என்ன ஆவன செய்ய வேண்டும் என்றும் இந்த தலைவர்களுக்கு தெரியும்.

வாக்களித்தவன் கேள்விகேட்க முடியும் என்ற காலம் இல்லை இப்போது காரணம்

நீ உனது வாக்கை விற்றுவிடுகிறாயே

வாக்குகள் விற்றவன்

வாழத்தகுதியற்றவன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s