மழை காப்பாற்றியதா? இல்லை கைவிட்டதா?


108508

கடந்த தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில்  வென்றே ஆகவேண்டும் என்ற நிலையில்  களமிறங்கிய இந்திய அணியின் துவக்கம் நன்றாகவே இருந்தாலும் அதன் பின் ஆஸ்திரேலியா அடித்து ஆட ஆரம்பித்ததும் இந்தியா சற்றே சோர்ந்து போனதை கண்கூடாக பார்த்தோம்.

வீக்கான பவுலிங்கில் என்னதான் செய்ய முடியும், இளம் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஏதோ கடனுக்கே என்று பந்து வீசுவதை பார்த்தால் பாவமாக இருக்கிறது , இளம் வயதுக்கே உரிய ஒரு வேகம் வேண்டாமா மனதில் . உற்சாகம் இல்லாத பவுலரால் எப்படி சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த முடியும்.

108843

இருந்தாலும் சேஸ் செய்யக்கூடிய ஒரு ஸ்கோரைத்தான் ஆஸ்திரேலியா அடையும் என்ற நம்பிக்கையை 40 ஓவர் வரை இந்தியா கொண்டு சென்றது ஒரு வகையில் சிறப்பானது

ஆனாலும் மழை வந்து நம் எல்லாருடைய நம்பிக்கையையும் கெடுத்துவிட்டது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வென்றாலும் நமது அரைஇறுதி வாய்ப்பு அத்தனை பிரகாசமானதாக இல்லை என்பது ஒரு புறமிருக்க ஆட்டம் மழையால் தடைபட்டு ஒரு பாயிண்ட் கிடைத்தது. எந்த வகையில் சேர்ப்பது.

மழைவந்ததால் தோற்காமல் இருந்தோம் என்ற ஒரு எண்ணத்திற்கு எதிரான பல கருத்துகள் வரும் இருந்தாலும் அதிலும் உண்மை உண்டோ. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை பார்த்தவர்கள் ஒரு வேளை இதை ஏற்க்கலாம். எனவே நமக்கும் ஒரு பாயிண்ட் வாங்கி தந்த மழைக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டுமோ

108856

இருந்தாலும் நம் நம்பிக்கை இன்னும் வீண் போகவில்லை (இந்த ஊரு இன்னுமா நம்மள் நம்பிகிட்டு இருக்கு) மூன்று பாயிண்டுடன் இருக்கும் ஆஸ்திரேலியா பாகிஸ்தானிடம் ஆடும் போட்டியில் எப்படி விளையாடப்போகிறது என்பதை பொறுத்தும். (ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் பெரும் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்குமானால் நமக்கு வாய்ப்பு சிலவேளை கிடைக்கலாம்) நாம் மேற்கிந்திய தீவுகள் அணியை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்பதை பொறுத்தும் அமையும்.

எப்படி இருந்தாலும் நம் நிலை பாகிஸ்தானை நம்பித்தான் இருக்கிறது.

நாளை நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளுமே நமக்கு முக்கியமனாவை காலை பாகிஸ்தானுடனான ஆஸ்திரேலியாவின் ஆட்டம் துவங்கிய 20 ஓவருக்குள் நமக்கு ரிசல்ட் கிடைத்து விடும். .அதன் பின் நாம் முடிவு செய்யலாம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக எப்படி ஆடவேண்டும் என்று.

ஏற்கனவே நமது அணித்தலைவர் கூறியது போல பெட்டி படுக்கையை தட்டி கட்டி புறப்பட ரெடியாகிவிட்ட நம்மை தடுத்த நிறுத்த போவது யார்? எப்படி?

காத்திருப்போம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s