பொன்விழா நாயகன் கமல்


கமல், தமிழ்திரைஉலகின் வரப்பிரசாதம்

தமிழ் சினிமா உலகத்தில் இதுவரை எத்தனையோ நடிகர் நடிகைகள் வந்து போய் இருக்கிறார்கள் ஆனால் 50 வருட சினிமா வாழ்க்கை என்பது ஆபூர்வம். அதிலும் இன்னும் சிறந்த கலைஞனாக திறமைவாய்ந்த ஸ்டாராக நிற்கும் போக்கு ஆச்சர்யபட வைக்கிறது.

இதற்க்குள் தான் எத்தனை தோல்விகள் எத்தனை எதிர்பார்ப்புகள் எத்தனை தடைகள் கடந்து வந்து ஜெயித்து விட்டீர்களே கமல் வாழ்த்த நினைத்தாலும் வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறேன் இன்னும் சொல்லப்போனால் வியக்கிறேன்.

சிறுவயதுக்கு பின் இளமைக்கால கமலுக்கு தோல்விகள் அதிகம் துவக்கம் கிடைக்கவே பல வருடங்கள் பிடித்தன. . துவக்க கால கமலை ரசித்தவர்கள் அதிகம் இல்லை அதன் பின்னர்தான் அவர் காதல் இளவரசனாக வலம் வந்தார் அந்த காதல் இளவரசனை ரசிக்க ரசிகைகளும் ரசிகர்களும் குவிந்தனர். இருந்த போதிலும் அந்த இளம் நடிகர் தனக்குள்ளான கடமையை உணர்ந்து தன் சினிமா வாழ்க்கையை நடிப்பு பக்கம் திருப்ப பல திருப்பங்கள் அரங்கேறின

எனக்கு பிடித்த படங்களாக வாழ்வே மாயம்,  நாயகன், நினைத்தாலே இனிக்கும், சிப்பிக்குள் முத்து, குணா, நம்மவர், சத்யா மற்றும் மகாநதி போன்ற படங்கள் சினிமா உலகத்தை புரட்டி போட்டது என்றால் யார் மறுக்கப்போகிறார்கள்

அதிலும் பொழுதுபோக்கு சினிமாவிலும் தனக்கென இடம் பிடித்தவர் கமல் அவ்வகையில் காக்கி சட்டை, காதல் பரிசு, சகலகலா வல்லவன்,  தேவர்மகன், சிங்காரவேலன், வசூல்ராசா எம் பி பி எஸ், பஞ்ச தந்திரம் மற்றும் சதிலீலாவதி என பொழுதுபோக்கு சினிமாவிலும் கருத்துக்களை ஆணித்தரமாக நிரூபித்தார் கமல்.

இதையெல்லாம் கடந்த அந்த மகா கலைஞன் ஆபூர்வ சகோதரர்கள், நாயகன், குணா, அவ்வை சண்முகி, குருதிப்புனல், இந்தியன் மற்றும் அன்பே சிவம் என தன் வித்தியாசமான சிந்தனை மற்றும் கெட்டப்களை தன் உருவத்தை கூட மாற்றி திரையில் பல அற்புதங்கள் காண்பித்த கலைஞன். (அன்பேசிவம் இன்னும் என் கண்களில் நடமாடும் ஒரு சினிமா. . மிகவும் பிரமித்து போனவன் நான். மேலும் இந்த வரிசையில் தசவதாரத்தை என்னால் சேர்க்க முடியவில்லை காரணம்  ம் ம் ம்  தெரியவில்லை)

தனது 50 வருடங்களை சினிமாவுக்கு தந்த கலைஞன் தன் வாழ்க்கையில் பெற்ற விருதுகளும் வாழ்த்துக்களும் அவனை இன்னும் இன்னும் வருடங்களை கடக்க செய்யும். .

சின்ன இடர்பாடுகள் வந்தாலே இடிந்து விடுகிற நமது மக்களுக்கு மத்தியில் திருமண முறிவு, திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்தல், குழந்தைகளுக்காக திருமணம், பின் அதிலும் முறிவு, நடிகைகளுடன் கிசு கிசு, மகள்களின் வாழ்க்கை, பகுத்தறிவின் விமர்சனம் என பல தடைக்கற்களையும் தாண்டி இன்றும் சிறந்த கலைஞனாக தன்னை நிரூபிக்கும் சகாலகலா வல்லவனும் என் அடக்கமான பதிவு இது . .

எங்கள் சூப்பர் ஸ்டார் கூறியது போல அவர் நிஜமாகவே சகலாகலா வல்லவன் தான்.

வேகமாக வளர்ந்து அழிந்து போகும் சினிமா உலகில் (இப்போது ஒரு நடிகர் படாதபாடு படுகிறார்) நிதானமாக வளர்ந்து இன்று வரைக்கு நிற்கின்ற அந்த கலைஞனுக்காக எல்லாரும் ஒரு நிமிடம் பிராத்திப்போம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s