மீண்டும் நிரூபித்த டிராவிட்


ICC-Champions-Trophy-2009

மிகப்பொலிவுடன் ஆரம்பமான தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக சேம்பியன் கப்புக்குக்கான போட்டிகள் பல அதிர்ச்சி முடிவுகளை தந்தாலும் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றது தப்பே இல்லை என்ற  முடிவுக்குத்தான் என்னால் வரமுடிந்தது. (உள்ளுக்குள் அப்படி ஒரு கோபம்)

கோட்டைவிடுவதில் வல்லவர்கள்

முதலில் பேட் செய்ய இறங்கிய பாகிஸ்தான் கண்டிப்பாக நல்ல துவக்கத்துடன் தான் துவங்கும் என்பது எல்லாரும் அறிந்ததே அதை சரிகட்டும் நிலையில் நமது பந்து வீச்சாளர்கள் செயல்பட்டதும் முதல் பத்து ஓவருக்குள் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய நம்மவர்கள் என்னை நம்பிக்கை பெறச்செய்தார்கள் அதன்பின் அடுத்த ஐந்து ஓவருக்குள் மீண்டும் ஒரு விக்கெட் விழுந்ததும் மகிழ்ச்சி இன்னும் கூடிற்று . .

அதன்பின் நடந்து எல்லாம் வேதனையின் உச்சகட்டம் . .நமது அணி வீரர்கள் தடுப்பாட்டம்(பீல்டிங்)  ஆடும் போது   பந்துவீச்சாளருக்கும் விக்கெட் கீப்பருக்கும் மட்டுமே வேலை என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் இதை யாராவது சுட்டிகாட்டினால் தேவலாம் . . . அணிவீரர்கள் பாகிஸ்தானின் பந்துகளை கோட்டைவிட்டதை பார்க்கும்போது எனக்கு வேறு ஏதோ நியாபகத்து வந்து தொலைத்து (அது சத்தியமாக பம்பாய் ராஜ் ஹோட்டல் அல்ல) இப்படி அநிநியாயத்திற்கு உழைத்ததில் பாகிஸ்தான் நல்ல ஸ்கோரை எட்டிபிடித்தது . .

சூப்பர் ஒற்றுமை

எதிரியை எதிர்கொள்ளும் போது அந்த அணியினர் கண்டிப்பாக ஒன்றாக இருக்க வேண்டும் நமது அணியினருக்கு அது பலநேரங்களில் மறந்து விடுவது வாடிக்கை என்றாகி விட்டது. அதற்காக இப்படியா . . அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் துவக்கத்தில் ஆட்டம் இழந்தது இன்னும் அதிர்ச்சி என்றால் அடுத்து டிராவிட் உள்ளே வரும்போதே எனக்கு பக்கென்று இருந்தது  காரணம் அவரின் தொடர் ஆட்டம்தான் . .அதிலும் இன்று நமக்கு முன் நின்றதோ மிகப்பெரிய ஸ்கோர் என்ன செய்வாரோ என்ற பயத்தில் இருந்த எனக்கு அவரின் துவக்கம் சற்று மகிழ்ச்சி தந்தது.. காரணம் தனிப்பட்ட விரோத காரணங்களுக்காக ஒதுக்கியே வைக்கபட்ட காம்பீர் தனக்கு கிடைத்த வாய்ப்பை (பழையவற்றை மறந்து) நன்றாக பயன்படுத்தி பாகிஸ்தானை ஒரு வழி ஆக்கி கொண்டிருந்தார் அதற்கு ஏற்றார்போல் டிராவிட் கம்பெனி கொடுப்பதாக நான் நினைத்தேன் . .அந்த நினைப்பில் வைத்தார் பாருங்கள் ஒரு ஆப்பு . . அந்த நேரத்தில் அந்த ரன் அவுட் அவசியமே இல்லை. நிச்சயமாக சொல்ல முடியும்  அதுவும் டிராவிட்டின் கடமையில் ஒன்றாக அதை செய்து முடித்திருப்பதாகவே நினைக்கிறேன். .  .

108732

ஆனாலும் காம்பீர் அடித்த இரண்டு சிக்ஸர்களையும் அந்த வேகத்தையும் மறக்க முடியாது அவர் 50ஐ கடந்த போது பாகிஸ்தானுக்கே வேர்த்தது உண்மை நமது டிராவிட்டால் அவர்கள் பயம் விலக்கப்பட்டது

அடுத்த வந்தார்   வீராட் கோலி பாவம் டிராவிட்டின் திறமைக்கு முன்பாக இவரால் என்ன செய்ய முடியும் அவரும் போக  வந்தார் இந்தியாவில் உள்ள ஸ்போட்ஸ்மேன்களிலே அதிகமாக சம்பாதிக்கும் நமது கேப்டன் என்ன ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . ( முன்பு அவர் ஜொலித்த காலத்தில் எப்படி இப்படி உங்களால் பல சிக்ஸர்களை பறக்கவிட முடிகிறது எனகேட்ட போது அவர் தந்த பதில் தினமும் அதிக அளவில் பால் குடிப்பேன் என்பதே . . . அதிகம் சம்பாதிக்கும் அவருக்கு இப்போ பால் வாங்க காசில்லையா இல்லை . . வேண்டாம் சென்சார்)  . . . அதன்பின் தளர்ந்திருந்த நம்பிக்கை மீண்டும் தூக்கி நிறுத்திய ரைனாவை கண்டிப்பாக ஆஸ்திரேலியா அணிக்காக நான் பரிந்துரை செய்கிறேன் . . அந்த பொஸிசனிலும் என்ன நம்பிக்கையான ஆட்டம் அவரின் நம்பிக்கையில் நம்மையும் நம்பிக்கை பெறச்செய்தார் ஆனாலும் விதி . .சாரி விதி என்பதை விட சனி டிராவிட் வடிவிலே இருக்க ரைனாவும் அவுட் . . இருந்தாலும் அவர் அடித்த அந்த இரண்டு சிக்ஸர்களும் சூப்பர் . . .

அதன்பின் பாவம் நமது வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாமல் வந்து போனார்கள் . . இறுதியாக நேற்றும் ஒன்று கற்றுத்தரப்பட்டது . . வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்பதே  அது . . இயற்கையோ செயற்கையோ காம்பீர் அவுட்டுக்கும் இந்தியாவின் தோல்விக்கும் காரணமாக இருந்த டிராவிட் ரன் அவுட்டாகி ஸ்டெக்சரில் (பின்ன முழு சக்தியும் இழந்து ஒரு பிரேதத்தை போல் நடந்ததை டிவியில் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றியது) போகும்போது ஒரு சின்ன சந்தோசம் வந்தது பாருங்கள் அது மட்டுமே மிச்சம் . . .

108740

தோல்விகள் வரலாம் இன்னும் சொல்லப்போனால் தோல்விகள்தான் நம்மை மேம்படுத்தும் ஆனால் தோல்விகள் நம்மால் வரக்கூடாது . . நேற்றைய தோல்வி நமது தோல்வி மட்டுமல்ல வெற்றியை வாரி வழங்கி முட்டாளான தோல்வி . . இதற்கான பதிலை யாரிடம் எதிர்பார்க்க முடியும் நமது இந்திய தேசத்தில்

டிராவிட்டுக்கு ஒரு கேள்வி:

உங்களை விட சூப்பர் பேட்ஸ்மேன் கங்குலி தன் நிலை அறிந்து  ஒதுங்கி விட்டாரே. .அதைக்கண்ட பின்னும் உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி? நீங்கள் நமது அணியின் மேல் கொஞ்சமேனும் அக்கரை கொண்டவராக இருந்தால் தயவு செய்து நீங்களே “நல்ல” முடிவை எடுங்கள் ப்ளீஸ் . . .

தோனிக்கு ஒரு கேள்வி:

உங்கள் தனிப்பட்ட வருத்தங்களுக்கும் சந்தோசங்களுக்கும் ஒரு நாட்டின் அணியை பயன்படுத்தாதீர்கள் . சேவக்குடனான பிரட்சனையை முடிவுக்கு கொண்டுவாருங்கள். . சேவாக்கும் யுவராஜ்ஜும் இல்லாத ஒரு அணி சற்று தரம் குறைந்ததுதான் என்பதே நாடே அறியும் போது ஏன் நீங்கள் அதை சரிகட்டும் விதமாக செயல்படாமல் ஏதோ என்று கடமைக்கு 11 பேருடன் களமிறங்கினீர்கள்?

மானமில்லாத இந்தியன்: ம் ம் சரி சரி அடுத்த இரண்டு மேட்சுகளில் வென்றால் அரைஇறுதிக்கு போகமுடியுமா? வெல்லுமா இந்தியா?

Advertisements

5 comments on “மீண்டும் நிரூபித்த டிராவிட்

 1. thabba ninaikkireenga,netru oru kevalamana tholviyil irundhu dravid than kappatri irukkirar.sewah,yava irundhirundhal vetri adaindhirukkum,
  sachin,dhoni,yusuf enna kilitharkal,antha aattathil gambir,dravid,raina mattume sirappaga seyalpattargal zakir.m

 2. டிராவிட் is a legend… oru match mudiva pathu muttal madhiri eludhahda da pudungi… sachin century adithu vittu put aana pala match kalil dravid team aai vetri pera seithu irukkirar… ne uyarthi pesiya raina matrum gambir ethanai aatam team aai vetri pera veithu irukirargal endru kanakkittu par… cricket theriya vittal pothi kondu iru… purigiradha…

  • நன்றி, டிராவிட்டுக்கு நானும் ரசிகன் தான் , ஆனா என்ன ஒரு வயசு வரைக்கும்தான் விளையாடணும் , ரசிகர்கள் அதையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போ இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரிலே விளையாடிய ஒரே ப்ளேயர் டிராவிட் மட்டுமேதான் , உடனே அடுத்து வருகின்ற ஒருநாள் போட்டிகளிலும் 20 20 போட்டிகளிலும் விளையாட விடமுடியுமா . . . என்ன , முரளியே பயப்படரார் நம்ம பஜ்ஜி யை பார்த்து அதுக்காக இந்த இங்கிலாந்து தொடரில் அவர் விளையாடியதை சரி என்று சொல்ல முடியுமா . . இல்லை இந்திய அணியின் பந்து வீச்சை என்ன சொல்வது . . அட்லீஸ்ட் எதிரணிக்கு ஒரு பயத்தையாவது உண்டு பண்ணாங்களா .. . இது விமர்சனமே தவிர ஒருவரை நோக்கி வீசப்படும் கருத்து அல்ல . . .

   • /ஒரு வயசு வரைக்கும்தான் விளையாடணும் /
    So Write About Sachin
    Dravid Playing Better than Sachin

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s