2 ஆஸ்கர் விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.. ‘ஜெய் ஹோ’!!!


  

லாஸ் ஏன்ஜெல்ஸ்: ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானு்ககு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

 

இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவி்ல் ஒரு விருதும், ‘ஜெய் ஹோபாடலுக்கு ஒரு விருதுமாக ரஹ்மான் இரு ஆஸ்கர் விருதுகளை வென்றார். ஜெய் ஹோ பாடலுக்கான விருதை ரஹ்மானுடன் சேர்த்து அதை எழுதிய பாடலாரிசியர் குல்சாரும் பெற்றுள்ளார்.

 

ஒரிஜினல் ஸ்கோருக்கான முதல் விருதை வென்ற ரஹ்மான் ஆஸ்கர் விருது விழா நடக்கும் கோடாக் தியேட்டரில் இந்தப் படத்தின் பாடலான ஜெய் ஹோபாடலை மேடையில் ஆடல் பாடலுடன் அரங்கேற்றி ஆஸ்கர் அரங்கையே அதிரச் செய்தார்.

 

இந் நிலையில் சிறந்த பாடலுக்கான விருதும் ஜெய் ஹோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரஹ்மானுக்கு இரண்டாவது விருதும் கிடைத்தது.

 

சவுண்ட் மி்க்சி்ங்-பூக்குட்டிக்கு:

 

இந்தப் படத்துக்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை தமிழகத்தைச் சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணர் பூக்குட்டி வென்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்கர் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பூக்குட்டி பெற்றுள்ளார்.

 

மேலும் சிறந்த இயக்குனர், எடிட்டிங் உள்பட ஸ்லம்டாக் மில்லியனர் மேலும் 5 விருதுகளையும் வென்றுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் 7 விருதுகளை வென்றுள்ளது.

 

ரஹ்மான் விருதை வென்றதையடுத்து சென்னையில் உள்ள ரஹ்மானின் வீட்டில் பெரும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அவரது வீட்டில் குவிந்துள்ள ரசிகர்களும் உறவினர்களும் நண்பர்களும் கேக் வெட்டி ஆடிப் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

அவரது வீட்டின் வெளியில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

 

ரஹ்மானின் தங்கை ரெஹனா கூறுகையில், இந்த விருதை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார்.

 

மேலும் நமது ரஹ்மான் இசையமைத்த வெற்றிபடமான ஸ்லம்டாக் மில்லியனருக்கு மேலும் பல விருதுகள் கிடைத்துள்ளன அவைற்றை பற்றிய செய்தி .

 

ஸ்லம்டாக் மில்லியனர் படம் சிறந்த படத்துக்கான ஆஸ்ரையும், அதன் இயக்குனர் டேனி போயலுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தப் படம் மொதமதம் 8 விருதுகளை வென்றுள்ளது.

 

இதில் பணியாற்றிய இந்தியர்களான ரஹ்மான் 2 விருதுகளையும், சவுண்ட் மிக்சிங்குக்கு பூக்குட்டி ஒரு விருதையும் வென்றுள்ளனர். இந்தப் படத்துக்கான மற்ற ஆஸ்கர் மற்ற விருதுகளை வென்றவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

 

சிறந்த திரைக்கதை தழுவல் விருது இந்தப் படத்தின் கதாசிரியர் சிமேன் பியேபோய்க்கும், சிறந்த சினிமாட்டோகிராபிக்கான விருது ஆண்டனி டாட் மாண்டலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்தப் படம் மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதில் இந்தப் படம் 8 விருதுகளை வென்றுள்ளது.

 

ஸ்லம்டாக் பெற்றுள்ள 8 ஆஸ்கர் விருதுகள்:

 

சிறந்த படம்

சிறந்த இயக்குனர்-டேனி போயல்

பெஸ்ட் ஒரிஜனல் ஸ்கோர் – ஏ.ஆர்.ரஹ்மான்

ஜெய் ஹோ…” பாடல் – ஏ.ஆர்.ரஹ்மான்

சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – ரிச்சர்ட் பிரைகே மற்றும் ரேசுல் பூகுட்டி

சிறந்த ஒளிப்பதிவு – ஆன்டனி டோட் மென்டில்

சிறந்த அடாப்டட் திரைக்கதை: சைமன் பியூஃபாய்

சிறந்த எடிட்டிங்: கிறிஸ் டிக்கன்ஸ்

 

டாகுமெண்டரி- இந்திய சிறுமியின் கதைக்கு ஆஸ்கர்:

 

அதே போல இந்தியாவைச் சேர்ந்த பிங்கு சோங்கர் என்ற 8 வயது சிறுமி குறித்த குறும்படமான ஸ்மைல் பிங்கி படத்துக்கு இநத ஆண்டுக்கான சிறந்த டாகுமெண்டரிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

 

மிர்ஸாபூரைச் சேர்ந்த இந்தச் சிறுமியின் உதடு பிளந்த தோற்த்தால் சமூகத்தால் ஒதுக்கப்படுகிறாள். அந்தச் சிறுமி படும்பாடு தான் இந்தப் படம். 40 நிமிடம் ஓடும் இந்தப் படம் இந்தி மற்றும் போஜ்பூரி மொழிகளில் தயாரிக்கப்பட்டதாகும். இதை இயக்கியவர் மேகன் மைலன்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s