இதுவும் நடக்கும் இனி . . . .


லண்டன்: காலம் கலிகாலம் ஆகிப் போச்சுய்யா என்று நம்ம ஊரில் சினிமாப் பாட்டு உண்டு. ஆனால் இங்கிலாந்தில் நடந்துள்ள கொடுமையைக் கேட்டால் கலி காலத்தையும் தாண்டிய கொடுமைக் காலமாகி விட்டதோ என்று பயப்படத் தோன்றும்.

சின்னப் பிள்ளைகளின் ‘பெரிய’ விளையாட்டு இன்று விபரீதமாக மாறி, இங்கிலாந்தின் கலாச்சாரத்தையே வெகுவாக ஆட்டிப் பார்த்துள்ளது.

தற்போது இங்கிலாந்தில் அதிகம் பேசப்படும் விஷயம் சசக்ஸ் கவுன்டியில் இருக்கும் ஈஸ்ட்போர்ன் நகரத்தை சேர்ந்த சான்ட்லி ஸ்டெட்மேன் என்ற சிறுமிக்கு பிறந்த குழந்தை தான்.

உலக பொருளாதார நெருக்கடியை விட இங்கிலாந்தில் சான்ட்லி குழந்தை பெற்றுக் கொண்ட நியூஸ்தான் பெரிய நியூசென்ஸாக மாறியுள்ளது. காரணம் சான்ட்லிக்கு வயது வெறும் 15 தான். அதைவிட பெரிய கூத்து குழந்தையின் தந்தை 13 வயது மட்டுமே ஆன அல்பி பாட்டன் என்ற சிறுவன் என்பது.

இதை விட பெரிய கொடுமை, இந்த குட்டித் தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைக்கு நான்தான் அப்பா என்று மேலும் இரண்டு சிறுவர்கள் உரிமை கோரியிருப்பது.

குழந்தை, குழந்தை பெற்றுக் கொண்ட செய்தியை விட, அந்தக் குழந்தைக்கு அப்பா யார் என்பது பெரும் சிக்கலாக மாறியுள்ளது இங்கிலாந்து மக்களை பெரும் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சான்ட்லிக்குப் பிறந்த குழந்தைக்கு நான்தான் அப்பா என்று ரிச்சர்டு குட்செல் என்ற 16 வயது சிறுவனும், 14 வயதான டைலர் பார்க்கர் என்ற சிறுவனும் உரிமை கோருகிறார்கள்.

சான்ட்லியின் 8 ஆண் நண்பர்களும், ஆளாளுக்கு ஒருவரின் பெயரைக் கூறி அவனாக இருக்கலாம், இவனாக இருக்கலாம் என குழப்பத்தையும், அதிர்ச்சியையும் மேலும் கூட்டியுள்ளனர்.

அப்பா உரிமை கோரும் ரிச்சர்டு குட்செல் கூறுகையில்,

சான்ட்லி கருவுறுவதற்கு 3 மாதங்கள் முன் வரை நான் அவளுடன் ஒரே அறையை பகிர்ந்து கொண்டேன். அவளது வீட்டில் வைத்து குறைந்தது மூன்று முறையாவது நாங்கள் இணைந்திருப்போம். நான் அவளின் குழந்தைக்கு தகப்பனாக இருக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.

அனைவரும் இதை தான் சொல்கிறார்கள். குழந்தையின் கண்கள் என்னைப் போல் இருப்பதாக எல்லாரும் சொல்கிறார்கள். என் அம்மாவும் இதையே சொல்கிறார்.

இப்பிரச்சினைக்கு முடிவு டிஎன்ஏ சோதனை தான். நான் குழந்தையின் தந்தையாக இருக்கும் பட்சத்தில் அது குறித்து அறிந்து கொள்ளும் உரிமை எனக்கு இருக்கிறது என்கிறான் குட்செல்.

டைலர் பார்க்கர் கூறுகையில்,

நான் சான்ட்லியுன் 9 மாதங்களுக்கு முன் ஒரே அறையில் தூங்கியுள்ளேன். அவளது குழந்தைக்கு நான தந்தையாக இருப்பேனோ என பயமாக இருக்கிறது. ஆனால் அது நானாக இருக்காது என நம்புகிறேன்.

எனது நண்பர்கள் அனைவரும் என்னை கேலி செய்கிறார்கள். ஆனால், நான் சொல்வது விளையாட்டு இல்லை என்கிறார்.

அல்பி தனது சான்ட்லி குறித்தும், குழந்தை குறித்தும் கூறுகையில், நான் மட்டுமே சான்ட்லியின் காதலன். நாங்கள் இருவரும் 2 வருடமாக பழகுகிறோம். நான்தான் அப்பா.

நான்தானே உனது குழந்தைக்கு அப்பா என்று அல்பியிடமும் கேட்டேன். அவளும் ஆமாம் என்று கூறினாள். நான் அவளை நம்புகிறேன் என்கிறார்.

குழப்பத்தின் மையப் புள்ளியான சான்ட்லி கூறுகையில்,

அல்பியும், நானும் ஒருவரை ஒருவர் விரும்பினோம். இதனால் நான் என்னை அல்பியிடம் கொடுத்து விட்டேன்.

அவனிடம் மட்டும்தான் நான் எனது கன்னித்தன்மையை இழந்தேன். எனவே வேறு யாருக்கும் இதில் தொடர்பில்லை.
எனது குழந்தை மேய்சி அவனுக்கு பிறந்தது தான்.

அன்றைய தினம் நான் கருத்தடை மாத்திரை உபயோகிக்க மறந்துவிட்டேன். அப்போது அவனுக்கு வயது 12 தான்.

அல்பிக்கு, நான் மற்ற தோழர்களிடம் பேசுவது குறித்து பொறாமை இருந்தது. எனது குழந்தைக்கு தந்தை தாங்கள்தான் என இருவர் கூறுவது பொய்யானது. அதுகுறித்து எனக்குக் கவலை இல்லை. நான் இப்போது எனது கவனத்தையெல்லாம் எனது குழந்தை மீதுதான் வைத்துள்ளேன்.

நான் அல்பியை எனது கணவராகத்தான் நினைக்கிறேன். அல்பியும் அப்படித்தான் கருதுகிறார். இருவரும் சேர்ந்து குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்கிறோம்

என்னை அல்பி நன்றாக பார்த்துக் கொள்கிறார். என்னையும், மேய்சியையும் பிரியும்போது அவருக்கு வருத்தமாகி விடுகிறது என்கிறார்.

சான்ட்லியும், அவருக்குப் பிறந்த குழந்தையும் தற்போது சான்ட்லியின் வீட்டில் தனி அறையில் விடப்பட்டுள்ளனர். தனது குழந்தைக்காக நிறைய பொம்மைகளை வாங்கி அறையை அலங்கரித்துள்ளார் சான்ட்லி.

இந்தப் பிரச்சினைக்கு என்ன முடிவு வரப் போகிறது என்பதை அறிவதில் ஒட்டுமொத்த இங்கிலாந்தும் காத்திருக்கிறது.

நன்றி : தட்ஸ் தமிழ்

 

 

என்ன செய்ய நண்பர்களே இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர்தான் நம் நாட்டில் அதுவும் தமிழகத்தில் நடந்த ஒரு பால்ய விவாகம் குறித்த கேவலமான மனிதர்களை பற்றி பதிவு ஒன்றை பதித்தேன் . .

 

அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பே இதோ அடுத்த இடி . இந்த முறை பரவாயில்லை காரணம் சம்பவம் நடந்தது நம் நாட்டில் அல்ல. ஆயினும் இதை படிக்கும் போது கொஞ்சம் அல்ல ரொம்பவே பயமாக இருக்கிறது.

 

இச்சம்பவம் ஏதேனும் அழிவின் அறிகுறியாக இருக்குமோ.

 

எப்படி இருந்தாலும் அந்த கூட்டத்தை என்ன செய்ய. . . .

 

அழிந்து வரும் கலாச்சாரம் பெருகி வரும் கண்ணி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களால் இன்னும் விரைவில் ஒரு முடிவு க்கு வரும்.

 

இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும்

 

இதை தவிர எனக்கு வேறு சொல்வதற்கு இல்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s