என்று திருந்துவார்களோ


கிருஷ்ணகிரி அருகே 13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயன்ற பெற்றோர்களின் முயற்சியை மாவட்ட கலெக்டர் சண்முகம் தடுத்து நிறுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே உள்ளது பெரிய மல்ல அள்ளி மலை கிராமம்.
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி நீலம்மாள். இவர்களுக்கு மாதம்மாள் (13) என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பூப்பெய்தியுள்ளார். இதனால் அவருக்கு கடந்த வாரம் அந்த சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் வீரணபள்ளி கிராமத்தில் வசிக்கும் நரசிம்மனின் சகோதரி குடும்பத்தினரும், பென்னாகரத்தில் வசிக்கும் நீலம்மாளின் சகோதரர் குடும்பத்தினரும் சகல சீர் வரிசைகளுடன் கலந்து கொண்டனர்.

அப்போது, மாதம்மாளை தனது மகன் முத்துராஜ் என்பவருக்கு கட்டி கொடுக்க வேண்டும் என்று நரசிம்மனிடம் அவரது சகோதரி கோரினார்.

அதேபோன்று, நீலம்மாளிடம் அவரது சகோதரர் தனக்குத்தான் மாதம்மாளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கோரினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், மாதம்மாளை நரசிம்மனின் சகோதரி மகனுக்கு 10 நாளில் திருமணம் செய்து கொடுப்பது என அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

இதனால் வெகுண்ட நீலம்மாளின் சகோதரர், பெண் கிடைக்காத ஆத்திரத்தில், பால்ய விவாகம் நடக்கப் போவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகத்துக்கு புகார் அனுப்பினார்.

இதையடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு தேன்கனிக்கோட்டை தாசில்தார் அனக்லைலாவுக்கு மாவட்ட கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, தாசில்தார் சிறுமி மாதம்மாளிடம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது, தான் படிக்க விரும்புவதாகவும், திருமணத்தில் நாட்டம் இல்லை என்றும் சிறுமி மாதம்மாள் கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் திருமண ஏற்பாடுகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் இது போன்ற பால்ய விவாகங்கள் நடக்காமல் இருக்க தன்னார்வ குழுவினர், தொண்டு நிறுவனத்தினர், வருவாய் துறையினர், யூனிசெப் அமைப்பு, கிராம மருத்துவ துறையினர் சார்பில் ஓர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணி்ப்பில் ஈடுபடும். யாராவது சிறுமிகளுக்கு கட்டாய திருமண ஏற்பாடு செய்வதாக தகவல் கிடைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செய்தி: தட்ஸ் தமிழ்

இப்படி பட்ட மிருகங்களை என்ன செய்ய வேண்டும், இன்று பெண்கள் பல துறைகளில் ஆண்களுக்கு சவால் விடும் விதத்தில் ஏன் ஆண்களையும் தாண்டி சாதனை புரியும் நிலையில் . இன்னும் பெண் என்ற உயிரையும் உணர்வையும் மதிக்காமல் நடமாடும் இவ்வகை மிருகங்களுக்கு என்ன தண்டனை தருவது.

ஒரு பெண் இன்று காப்பாற்றபட்டுள்ளாள். இனி அவளுடைய எதிர்காலம் குறித்த கவலை நமக்கு வேண்டாம் அவளால் இனி எதையும் சாதிக்க முடியும். இது போன்று சமூகத்தில் அவதிக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை எத்தனை அவர்களை எப்படி இந்த சாக்கடையிலிருந்து காப்பாற்ற போகிறோம்.

கொண்டாட விழாக்களை ஏற்ப்படுத்தி அநாகரிகமாக பெயர் பெற்று அலையும் ஒரு தட்டு மக்களுக்கு இத்தகை செய்திகள் வேண்டுமான கிளிக் செய்து குளோஸ் செய்து கடந்து போக முடியும். மனிதாபிமானம் படைத்த எந்த மனிதனுக்கு அது இயலாது.

நுனி நாக்கு ஆங்கிலமும் நிமிர்ந்த நடையும் கொண்ட பாரதி பெண்களை பார்க்கும் போது இவர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும். கோபமும் பொறாமையும் கொண்டு வாழும் சில ஆண் வர்க்கத்திடம் கேட்கிறேன். .

பாரதி கண்ட புதுமைப்பெண்களாய் வாழும் பெண்கள் உங்களுக்கு தப்பாய் தெரிகிறார்கள் என்றால் . இப்படி சிறுமியை மணமுடிக்க அலையும் சில “நாய்கள்” எப்படி தெரிகிறார்கள்.

நீங்களும் அப்படித்தான் என்றால் . . இந்த கேள்வி உங்களுக்கானது அல்ல.(காரணம் நாய்களுக்கு தமிழ் தெரியாது) .
கொஞ்சமேனும் மனிதனாக இருந்தால் இந்த கேள்வி உங்களுக்காகத்தான்.

என்ன பதில் தரப்போகிறீர்கள் . . .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s