இசையும் இசைப்புயலும்


 

எனக்கும் திரையிசைப்பாடலுக்கும் இடையே ஆன பந்தம் ஏற்ப்பட்டது எப்போது இருந்து என்று நானே தேடும் போது விடை எனக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம் அப்படி ஒரு பந்தம்.

என் அம்மா தன் வசீகரமான குரலில் பாடும் தாலாட்டு பாட்டு இன்னும் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையானது இல்லை. நான் குழந்தையாக இருந்தபோது மனதில் பதிந்ததாலோ என்னமோ என் மகனுக்கும் அதே பாடலை அவர்கள் வாயாலே பாடவைத்த போது நானும் குழந்தையாகிப்போனேன். அதன் பின் அதே பாடலை நான் எனது மகனுக்கு பாடுவதுண்டு இங்கே பஹ்ரைனில்.
அப்பாட்டு

சின்ன சிறு கண்மலர்
செம்பவள வாய் மலர்

சிந்திடும் அழகே நீ ஆராரோ

வண்ணத்தமிழ் சோலையே
மாணிக்க மாலையே

ஆரிரோ அன்பே ஆராரோ

இந்த பாடலில் துவங்கும் என் திரைஇசையுடனான பந்தம் என் வயதை நான் உணர்ந்த காலம் தொட்டு இன்னும் அதிகமானது எஸ் பி பி வழியாகத்தான். இன்னும் இன்னும் ஆயிரம் பாடகர்கள் வந்தாலும் அந்த பாடும் நிலா பாலு குரலின் இனிமையை என் இதயத்தில் இருந்து அகற்ற இன்னும் இயலாமல்தான் இருக்கின்றேன்

அவர் அழைத்த “ஆயிரம் நிலவாகட்டும்” இல்லை “காதல் ரோஜாவாகட்டும்” இன்றும் இனிமை அல்லவா.

main_spb_images

பாலு என்றால் அத்துடனே நினைவுக்கு வருபவர் ராகதேவன் இளையராஜா . . ராஜா இன்றும் ராஜாதான். அவரின் இசை திறமைக்கு இன்னும் சரியான தீனி கிடைக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களுமே அப்பாடல் துவங்கிய சில நொடிகளுக்குள் என்னால் கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு அவரின் இசை எனக்குள் நிரம்பி இருந்தது.

இன்றும் இசைகேட்க விரும்பினால் நான் கேட்கும் பாடல்கள் வரிசையில் “பிரியா” வும் “ ஜானி” யும் கண்டிப்பாக ஆயிரம் தாமரை மொட்டுகளாக விரியும்.

252

ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரம் ஆயிரம் பாடல்களால் தமிழினை கட்டிபோட்ட அந்த இசையரசனின் கூட்டில் ஏற்ப்பட்ட சிலபல மனத்தாங்கல்களுக்கு பிறகு நிச்சயமாக அந்த இசையரசனின் இசை மீது எனக்கு ஆர்வம் குறைந்தது எனலாம். நிச்சயமாக அதற்கு காரணம் வைரமுத்து தான். கவிதைகள் மீது ஆர்வம் அதிகமான காலகட்டத்தில் வைரமுத்துவின் கவிதைகள் தான் உயிராக இருந்தன.. அப்படி அவரின் கவிதைக்கு இசை இளையராஜா என்றால் அது பாலுவின் குரலில் தேனாமிர்தமாக கேட்டது (எனக்கு) .

பின்பு வைரமுத்து வும் இளையராஜாவும் சேராத காலம் பாட்டுக்கள் பலம் இழப்பது போல் இருந்தன. அந்த இடைப்பட்ட காலம்தான் புயலாக வந்த ரஹ்மானை ரசிக்க வைத்தது. ஒருவேளை காரணம் வைரமுத்துவின் வரிகளாகவும் பாலுவின் குரலாக இருக்கலாம். (காதல் ரோஜாவே).

அப்படியே இளைஞர்களின் நாடித்துடிப்பை தன்வசப்படுத்திய அந்த இளைஞன் அமைத்த எல்லா பாடல்களுமே எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் இளைய சமுதாயத்தை பித்து பிடிக்க வைத்தது என்பது உண்மை.

பேட்ட ராப் பாடல் இன்று வேண்டுமான வித்தியாசமாக தெரியலாம் ஆனால் அந்த காலகட்டத்தில் அனைவராலும் (பின்னாடி நானும்) கேட்டு ரசித்த பாடல்தான். இப்படி பட்ட ராப் மாதிரிகளான அல்லது வேகமான இசையில் மேல்நாட்டு தாக்கத்தோடு ரஹ்மான் இசையமைத்தது நன்றாக இருந்தது,

அதே சமயத்தில் என்னைப்போல ஆட்களையும் புயல் அசைக்க தவறவில்லை. “என் மேல் விழுந்த மழைத்துளியே (மே மாதம்), தொட தொட மலர்வதென்ன பூவே (இந்திரா), நாளை உலகம் இல்லையென்றால் (லவ் பேர்ட்ஸ்), சுத்தி சுத்தி வந்தீக (படையப்பா), என் வீட்டுத்தோட்டத்தில் (ஜெண்டில்மேன்) இப்படியான பாட்டுகளால் என்னையும் கட்டிப்போட்டது அந்த புயல்.

arrahman

இன்று இசை என்ற பயணத்தில் பல கட்டங்களை தாண்டி ஆஸ்கார் வரை செ(வெ)ல்ல
இருக்கும் புயலின் இசை பலவித பரிணாமங்களை காட்டியதுண்டு. ஆயினும் அன்று மண்ணோடு வாசம் வீசும் “ போறாளே பொன்னுத்தாயும்”  “கத்தாள காட்டுவழி கள்ளிப்பட்டி ரூட்டுவழியும்” தாண்டி அவரின் வளர்ச்சி வடக்கே சென்று பின் இந்தியாவின் வெளியேயும் சென்றபிறகு மண்சார்ந்த பாடல்கள் அதிகம் தரவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும் இசையில் இதிகாசம் படைக்கும் தமிழன் இன்னும் தன் எல்கைகளை விரிக்க வாழ்த்துகிறேன்.

எல்லா மனங்களையும் விருது பெற்று மகிழ்விக்கும் ரஹ்மான் எப்போதும் இல்லாவிட்டாலும் அவ்வப்போதாவது “ எப்போது பெண்ணானேன்” “மருதாணி” (சக்கரகட்டி) வகை பாடல்களையும் தரவேண்டும் என்ற விண்ணப்பத்தில் இந்த பதிவை நிறைவு செய்கிறென்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s