நாணயம்


நீங்கள் பேருந்து பயணம் செய்யும் நேரங்களில் கவனிக்கும் பல காரியங்களில் ஒன்றாக பேருந்து நிறுத்தங்களில் கடலை அல்லது மிட்டாய் விற்கும் சிறுவர் சிறுமியோ அல்லது வயதான நபர்களையோ பார்த்திருப்பீர்கள். இந்த காரியம் அவர்களை பற்றியதுதான். அதே நேரத்தில் நம்மை பற்றியும் கூட

நான் பல நேரங்களில் கவனித்திருக்கிறேன்

பொருள் வாங்கியவர் சில்லறை பெற சமயம் இல்லாமல் போனதுண்டு. அல்லது பொருள் விற்ப்பவர் சில்லறை வாங்காமல் போவதுண்டு.

இது ஒரு சின்ன காரியமாக தெரிந்தாலும் சமீபத்தில் பார்த்த நிகழ்வு ஒன்றுதான் என்னை இப்பதிவை இங்கே எழுத வைத்தது. பேருந்தில் பயணம் செய்த இரு இளைஞர்கள் வழக்கம் போல் பேருந்து நிறுத்தத்தில் ஒரு சிறுவனிடம் கடலை வாங்கினார்கள்.

ஒரு ரூபாய் கடலைக்கு இரண்டு ரூபாய் கொடுத்து கடலை கேட்ட அந்த இளைஞனுக்கு கடலை கொடுத்து விட்டு மீதி கொடுப்பதற்குள் பேருந்து நகர்ந்து விட்டது. ஓடிப்பார்த்த சிறுவன் முடியாமை காரணமாக நின்றும் விட்டான்.

அதன் பின் அந்த இளைஞனிடம் அவன் நண்பன் கேட்டான்

“டேய் இதுக்குத்தான் முதல்லே கடலை வாங்கிட்டு காசு கொடுத்திருக்கலாம் இல்லன்னா ஒரு ரூபாய் சரியாக கொடுத்திருக்கலாமே”

அந்த இளைஞனின் பதில் இப்படி இருந்தது.

“ அது சரிதாண்டா ஆனா நாம கடலை வாங்கிட்டு காசு கொடுக்க முடியாம போச்சுன்னா அந்த சின்ன பையன் மனசு என்ன பாடு படும்  அத யோசிச்சியா”

நண்பர்களே

நம்மில் பலரும் கவனித்திராத ஒரு உலகம் இது. இங்கே யதார்த்தம் இதுதான். வேண்டுமானால் நாம் இப்படி சொல்லலாம். . படிக்க வேண்டிய வயதில் ஏன் அவன் கடலை விற்க வேண்டும் . . அக்கருத்துகளை ஒதுக்கி வைத்து விட்டு. வறுமை நோய் பிடித்த ஒரு சமுதாயம் நம்முடையது இங்கே மருந்தாக இவைதான்.

எனவே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஒரு ரூபாய் கடலைக்கு இரண்டு ரூபாய் கொடுக்க வேண்டாம். ஒரு ரூபாய் கடலையை வாங்கி விட்டு காசு கொடுக்காமல் தப்பிக்க வழி தேடாமல் இருந்தால் போதும்.

முடிந்தால் அப்படி ஒரு பேருந்து நிறுத்தத்தை கடந்து போக வாய்ப்பு கிடைத்தால் ஒரு ரூபாய்க்கு கடலை வாங்க முற்படுங்கள். உங்களுக்கு கடலையும் அச்சிறுவனுக்கு சோறும் கிடைக்க அது வழி செய்யும் . . .

Advertisements

2 comments on “நாணயம்

  1. சகோதரர் ரஜோலன் ,
    ரொம்ப அழகா இருந்தது உங்க பதிவு.. என் அப்பாவும் இப்படி தான் சொல்லுவார். அவர் எப்பவும் பேருந்து பயணங்களில் போது கடலையும், கூடவே பால் கோவா ஒன்னு கிடைக்குமே அதுவும் வாங்கி கடலைய அவர் சாப்பிட்டுட்டு பால் கோவாவை எங்களுக்கு கொண்டு வந்து தருவார். ரொம்ப பெரிய உத்தியோகத்தில் இருந்தவர். அப்படி கடலை வாங்கறதை அவரோட பல நண்பர்களே கேலியும் செய்வாங்க.. பொண்ணுங்களுக்கு காசு மிச்சம் புடிக்கிறார் என்பது போல..அவர் தான் சிரிச்சுட்டே சொல்லுவார்.. நான் கடலை வாங்கறதால ஒரு ஐம்பத்து பைசா லாபம் கூட அதை விற்கும் பையனுக்கு வரப் போவது இல்லை..ஆனால் பிச்சை எடுக்காம உழைத்து சாப்பிடனும்னு அந்த சிறுவர்கள் நினைகிறார்களே ..அதை ஊக்கு விக்கிறேன் என்பார் அவர்..

  2. இதை நான் ரெம்ப நாள் யோசித்ததுண்டு. நிறைய பேர் சிறு வியாபாரிகளிடம் அப்படி பேரம் பேசுவார்கள்….. ஆனால் பெரியக் கடைகளில், பதிக்கு பாதி லாபம் பார்ப்பவர்கள்…….. சொல்லுகிற விலையில்…. பொருட்களை வாங்குவார்கள்.
    நல்ல பதிவு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s