உலகின் மிகப்பெரிய ஏமாற்று வேலை


 

பலர் பலரை ஏமாற்றுகிற சமயத்தில் இப்பதிவு பலருக்கும் ஆறுதலாக இருக்கும் என்ற எண்ணத்தில் . . .

உலகில் மிகப்பழமையும் பெரியதுமான ஏமாற்றம் எது என்று கேட்டால் அது ஆண்கள் பெண்களை ஏமாற்றியதுதான் என்பதே என் கருத்து.

பெண்களுக்குகாக படைக்கப்பட்ட ஒரு உதவு ஜீவிதான் ஆண் என்பதுதான் உண்மையாக இருக்க வேண்டும் காரணம். இந்தியா தான் உலகின் பழமையான நாடு. பழமையான கலாச்சாரம் எல்லாம் கொண்டது எனவே இந்தியாதான் உலகின் மிகப்பழமையான பிரதேசம். அப்படி எடுத்து கொண்டால் இந்தியாவின் ஆறுகளின் பெயர்கள் பெண் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது காரணம் பெண்கள்தான் “பவராக” இருந்திருக்க வேண்டும் . நிலத்திற்கும் பெண்ணின் பெயர் ஆகாயத்திற்கும் பெண்ணின் பெயர். நிலவுக்கும் பெண்ணின் பெயர். என பெண்களின் ஆளுமை அதிகம்.

இந்த நிலையில் எந்த நூற்றாண்டில் ஆண்கள் பெண்களை ஏமாற்றி “பவரை” கைப்பற்றினார்கள் என்பது எனக்குத்தெரியவில்லை.

மாறாக பெண்கள் வீட்டில் இருக்கவும் ஆண்கள் அவர்களுக்காக உழைக்க வேண்டிய வெளியில் போவதும் பார்க்கும் போது பெண்களிடம் ஆண்கள் அடங்கி இருந்ததாகத்தான் தெரிகிறது. சிங்கங்களை போல. . . சிங்கத்தில் பெண் சிங்கம் தான் வீரம் மிக்கது. ஆண் சிங்கம் பெண் சிங்கத்திற்க்கு அடிமை பட்டது இன்று வரை. ஆனால் மனிதன் மாறிவிட்டான்.

உடலுறவிலும் பெண்களுக்கு சுகம் கொடுக்க படைக்க பட்டவன் தான் ஆண். இதிலும் ஆண்கள் பெண்களை ஏமாற்றி விட்டனர்.

ராமன் நல்லவன் எனத்தெரிந்தாலும் தன் தங்கையின் பேச்சை தட்டமுடியாமல்தான் சீதையை தூக்க முற்ப்பட்டான் ராவணன். இதிலிருத்து பெண்கள் அன்று வரை நல்ல பவரோடுதான் இருந்திருக்கிறார்கள்.

பெண்கள் தேவைகளை நிறைவேற்ற இயலாமல் போனால் அந்த ஆண்மகனை வெறுத்து ஒதுக்கும் வழக்கும் முன்பு இருந்ததும் இதை காட்டுகிறது.

இன்று போல் அல்லாமல் உணவு தயாரிகிய பின் ஆண்களை பெண்கள் அழைப்பார்கள் அப்போதுதான் ஆணுக்கு உணவு. அதற்கு முன்பாக யாரும் வந்து உணவு கேட்டதாக வரலாறு இல்லை.

இப்படி உழைப்பு முதல் பல காரியங்களையும் பெண்களுக்காக செய்த ஆண் கண்டிப்பாக அடிமையான வாழ்க்கைதான் நடத்தி இருக்க வேண்டும் அது பிற்காலத்தில் . .

ஆண்கள் கூடி குழுமி ஏதேதோ ஏற்பாடுகள் செய்து பெண்களை “ஏமாற்றி” அடிமையாக்கி விட்டனர் என்பது என்கருத்து.

வீட்டையும் நிர்வகித்து கொண்டு இன்னும் பல துறைகளில் முன்னேறிக்கொண்டிருக்கும் பெண்களின் உடல்தகுதியும் உள்ள தகுதியும் ஆண்களுக்கு உண்டா???????

இதோ மீண்டும் பெண்கள் தங்கள் பழைய “பவரை” அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.  அதை விட்டு விடக்கூடாது என்ற முயற்சியில் ஆண்களும் இருக்கிறார்கள் இந்த போட்டியில் வெல்லப்போவது யார்??????????.

Advertisements

4 comments on “உலகின் மிகப்பெரிய ஏமாற்று வேலை

 1. சகோதரர் ரஜோலன்
  ..இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.. இப்டியா அத்தர் பல்டி அடிப்பீங்க..நம்ம புவனேஷ் தம்பி மாறி கலக்குவீங்கன்னு பார்த்தால்..same sideகோல் போடறீங்க.. ஹா ஹா ..தேங்க்ஸ்..

  நாம் எல்லோரும் ஒரு தொடர் போல இதை எழுதலாம்.. அந்த அளவு பல விஷயங்கள் இருக்கு.. பெண்கள் உடல் அளவில் ரொம்ப வீக் ..அவங்களை பாதுகாக்கிறவர்கள் என்றுமே ஆண்கள் தான்.. பெண்களை ஷக்தி என்று சொல்லி கொண்டாடுவது நம்ம கலாசாரம் தானே.. அதோட ஆணை திருப்தி பண்ண தானே கடவுள் பெண்ணை படைத்து இருக்கிறார்.. நம்ம பைபிளும் அதை தானே சொல்லுது..ஆணின் விலா எலும்பில் இருந்து பெண்ணை உருவாக்கியதாக..

  ரஜோலன் .. நீங்க இதை விருவு பண்ணி பொறுமையா ரிசர்ச் பண்ணி ஒரு நல்ல தொடரா எழுதலாம் ..
  உங்களிடம் இருந்து இது போல ( இதே போலன்னு சொல்ல வரலை .. 🙂 ) நிறைய எதிர் பார்க்கும்

  அன்புடன்
  ஜானு

 2. இது அந்தர் பல்டி அல்ல . . . .சகோதரி

  இங்கேதான் நமக்கான இடைவெளி உள்ளது. உங்கள் கருத்து வேறு எனது கருத்து வேறு. . .

  நீங்கள் இல்லை என்று சொல்லி நெகடிவ் காட்டுகிறீர்கள் நான் இருக்கு என்று சொல்லி பாஸிடிவ் காட்டுகிறேன்.

 3. //இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.. இப்டியா அத்தர் பல்டி அடிப்பீங்க..நம்ம புவனேஷ் தம்பி மாறி கலக்குவீங்கன்னு பார்த்தால்..same sideகோல் போடறீங்க.. ஹா ஹா ..தேங்க்ஸ்..

  // இதை நான் ஜஸ்ட் பார் பன் ..லைட்டர் சென்ஸில் சொன்னது ரஜோலன்.. நீங்க ரொம்ப சீரியஸ் டைபோ.. எனி வே நோ ஹர்ட் பீலிங்க்ஸ்..

  சியர்ஸ்,
  ஜானு

 4. சீரியஸ் டைப்பெல்லாம் இல்ல

  எனக்கும் நீங்க சொன்ன விதம் பிடிச்சிருந்தது.

  எனக்கு பல்டி அடிக்க தெரியாது அதான் அப்படி

  மேலும் . . உங்கள் பக்க பதிவு போல் நான் நிஜத்தில் இருக்க முடியாது இல்லையா. உங்கள் பதிவு எனக்கு கொஞ்சம் அதிகமாக தெரிந்த காரணத்தாலே அப்படி எழுத நேர்ந்தது. நானும் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள் பத்தியோ அல்லது பெண் முன்னேற்றம் பற்றியோ அதிகம் எழுத விரும்புகிறேன் . . . இதையும் பல்டி என்றால் அப்படியேதான் . . தெரியாம பல்டி அடிக்கும்போது கீழே விழாமல் இருக்க நீங்க பிடிக்க மாட்டீங்களா என்ன???

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s