தீக்கோழி


நண்பர்களே

நாம் தீக்கோழி பற்றி கேள்வி பட்டிருப்போம் ஆனால் பார்த்திருக்க மாட்டோம். . நானும் பஹ்ரைன் வரும் வரை பார்த்தது இல்லை. இங்கே வந்த பின் எனக்கு நன்கு பழக்கமான நண்பன் ஒருவன் ஷேக் வீட்டில் வேலை பார்த்து வருகிறான் அந்த வீட்டில் உள்ள தோட்டத்தில் ஆஸ்டிரிச் எனப்படும் தீக்கோழி வளர்க்கப்பட்டு வருவதாக சொன்ன அவன் என்னை அழைத்து சென்றான்.

நிச்சயமாக மிக உறுதியான ஒரு பறவை என்றே சோல்லலாம். அதன் குழைந்த கிடந்த கழுத்தை இலாவகமாக  செங்குத்தாக நிறுத்தி அது எழுப்பும் சப்தம் பயத்தைதான் கொடுத்தது.

gtotem_ostrich
அன்று தீக்கோழியின் முட்டை ஒன்றும் கிடைத்தது. என்ன ஒரு பெரிய முட்டை அதிலும் அதன் தோடுகள் முகவும் கடினமாக இருந்தது. உடைக்க முடியாததாக இருந்தது. கீழே போட்டாலும் உடையாது என்றே நினைக்கிறேன். (அப்படி போட்டு பார்க்க மனம் வரவில்லை).

பார்க்க அரிதான ஒரு பறவையையும் முட்டையையும் பார்த்த மகிழ்ச்சி எனக்கும் என் குடும்பத்துக்கும்.

ev16cayqskvxcaz2go2ocaxn0cygcadtai3ocandctmocag62p76caxpvrcacaci13yocadhtw03ca0h42bmca048tm1ca8t4rc3caphw66nca3mx3cmcaltixeccai641skcaef23m0camndwv0ca7avcsm

இவ்வகை தீக்கோழிகள் மணல் பகுதிகளான பாலைவனப்பகுதிகளில் நன்றாக வளரும். அதன் இறைச்சி மிக கடினதாக இருக்கும் ஆனால் சத்து மிக்கது. மேலும் முட்டை அதிக கொளுப்பு உள்ள ஒன்று.

இறுதியில் அம்முட்டையை ருசிக்க பயந்த என் மனைவி வேண்டாம் என சொல்ல . . என் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சக நண்பர்களிடம் கொடுத்து விட்டேன்.

அவர்கள் முட்டை உடைக்க சுத்தியல் பயன்படுத்தியதாக பிறகு சொன்னார்கள். .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s