தமிழ் சினிமாவும் இலக்கணமும் – 2


 

போன பதிவில் நாம் பார்த்த கிளைமேக்ஸ் அலட்டல்களுக்கு அப்புறம் நம் தமிழ் சினிமாவில் அதிக அளவில் அமைக்கப்படும் காட்சி. அம்மா செண்டிமெண்ட்.

பெண் ரசிகர்களை கவர்ந்திளுக்கு வைக்கப்படும் இக்காட்சியில் பெரும்பாலும் கதாநாயகன் அம்மா பிள்ளையாக இருப்பான் கூடவே ஒரு தங்கையும் இருப்பாள் அல்லது இரண்டு மூன்று என வில்லன்களை பொறுத்தது அது. (கற்பழிக்கவோ அல்லது கொலை செய்யவோ அல்லது கல்யாணம் பண்ணி கொடுமை செய்யவோ)

மேலும் அம்மா கண்டிப்பாக விதவையாகத்தான் இருக்க வேண்டும். அம்மா செண்டிமெண்ட் படத்தில் அம்மாவும் அப்பாவும் இருந்ததாக எனக்கு நியாபகம் இல்லை.

மேலும் சினிமா முழுவதும் அமைதி காக்கும் அந்த அம்மா இறுதி காட்சி வந்துவிட்டது என்றால் (இப்பதான் இவங்களுக்கு வேலை) சீறிப்பாய்வதும் வில்லனை புரட்டி எடுக்க மகனை ஏவி விடுவதும் வழக்கம். .

மேலும் முதல் பாதிவரை அம்மாவும் மகனும் மிகவும் அன்பாகவும் மகிழ்சியோடும் வாழ்க்கை நடத்துவார்கள். பின்பாதி மிக சோகமாகவும் சண்டை பழிவாங்கல் என்றும் அமையும்.

அம்மா செண்டிமெண்ட் மற்றும் சண்டை காட்சிகளும் உடன்பிறந்தவை காரணம். முன்பாதி செண்டிமெண்ட் என்றால் பின்பாதி சண்டைதானே.

கண்டிப்பாக அம்மா பற்றிய ஒரு பாட்டு இருக்க வேண்டும். அதை ஹிட்டாக்க வேண்டிய கடமை அந்த மியுசிக் டைரக்டருக்கு உண்டு.

மேலும் அம்மாவை பிடித்து வைத்து வில்லன்கள் வெள்ளை புடவையில் கலர் ஊற்றுவதும் (விதவைக்கோலத்தை மாற்ற) இல்லையென்றால் ஏதாவது ஒரு வகையில் அவமானப்படுத்துவது. (பின் அதே நிலையில் படம் முடியும் வரை அந்த அம்மா வருவார்கள்). எங்க இருந்துதான் யோசிப்பாங்களோ

அம்மா என்ற புனித உறவை பல சந்தர்ப்பங்களை காட்டி கெடுக்க முயற்சிப்பதே இந்த இயக்குனர்களின் வேலையா போச்சு.

சமீபத்தில் அம்மா செண்டிமெண்ட் ஆக ஒரு படம் வந்தது. அம்மா தன் கடமையை முடித்து வைத்து இறந்தும் விடுவாள் அதன் பிறகே ஏறக்குறைய படம் துவங்கும். ஆனாலும் சினிமா அம்மா செண்டிமெண்ட் தான். டைட்டிலே அப்படித்தான் இருந்தது.இப்படி கண்ணியமாக மதிப்பு மிக்க அம்மாக்களை இனி வரும் சினிமாவில் கதாபாத்திரங்களாக படையுங்கள்

இல்லாமல் போனால் நடிக்கும் நடிகர்களாவது அம்மா என்ற கதாபாத்திரத்தை கண்ணியமாக நடத்தும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்யுங்கள். .

வெள்ளைப்புடவையில் கலரும், நெற்றியில் பச்சையும், பைத்தியமாக்கியும் விளையாடும் விளையாட்டை இனியாவது நிறுத்த வேண்டுமென்று வன்மையாக கேட்டுகொள்கிறேன். . .

இன்னும் தொடருவேன்

Advertisements

One comment on “தமிழ் சினிமாவும் இலக்கணமும் – 2

  1. நான் பார்த்த அம்மா செண்டிமெண்ட் உள்ள திரைப் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது 4 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ராம் திரைப் படம் தான். அற்புதமாக காட்டி இருப்பார்கள் அம்மா – மகன் உறவை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s