நாகேஷ் 75…….


இதோ தமிழ் சினிமா உலகிற்கு மீண்டும் ஒரு பேரிழப்பு.

இதுவரை தமிழ் சினிமா எத்தனையோ கலைஞர்களை கண்டுவிட்டது அவர்களில் எத்தனை பேர் நம் நினைவுகளில் நீங்காத இடம் பிடித்துள்ளனர் என்றால். மிகச்சிலரையே அதில் சேர்க்கமுடியும்.

அந்த வகையில் முன்னிலை பெருபவர் நடிகர் நாகேஷ் அவர்கள். பல பரிணாமங்களை திரையில் காட்டிய அதிசய நடிகர். இன்னும் சொல்லப்போனால் இயக்குனர் பாலச்சந்தர் வளர காரணம் நாகேஷ் என்றால் மறுத்து சொல்ல அவருக்கே முடியாது

பாலச்சந்தரும் நாகேஷும் நாணையத்தின் இருபக்கங்களாக இருந்தவர்கள். தன் சினிமா வாழ்க்கையிலும் அதை கடந்த வாழ்க்கையிலும் யாரோடும் மனது நோகும் படியான பேச்சோ செயலோ செய்ததில்லை இவர்.

தென்னிந்திய நட்சத்திரம் என்ற ஒரே காரணத்தாலே இந்திய அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட இவர். இந்தியாவே கொண்டாடும் நடிகர் கமலஹாசனால் போற்றப்படுபவர். அதுசரி திறமைசாலிகளுக்கே திறமை பற்றிய மதிப்பிருக்கும்.

இவர் செய்திராத வேடங்கள் இல்லை எனலாம்.

இன்றும் கதை சொல்லும் காட்சி என்றால் காதலிக்க நேரமில்லை என்ற சினிமாவும் நாகேஷும் நினைவுக்கு வருவதை தடுக்க முடிவதில்லை.

நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட நாகேஷ், திறமையான கதாநாயகனாக நடித்திருக்கிறார், அச்சுறுத்தும் வில்லனாக நடித்திருக்கிறார் (அபூர்வ சகோதரர்கள்) குணச்சத்திர வேடங்களில் பல படங்களில் அசத்தி இருக்கிறார்.

உறவுகள் என்றால், தம்பியாக அண்ணனாக அத்தானாக அப்பாவாக மாமாவாக சித்தப்பாவாக தாத்தாவாக மகனாக மருமகனாக என அனைத்து உறவுகளிலும் கலக்கிய இவர் எம்.ஜி.ஆர் முதல் தனுஷ் காலகட்டம் வரை நடித்த திறமை வாய்ந்தவர்.

இறுதி வரை திறமையான நடிகராக அறியப்பட்ட இவரை இந்தியா இறுதி வரை சரியான மரியாதை செய்யவில்லை என்றாலும் அதை பற்றி இவர் கவலைப்படவே இல்லை. (இந்தியா எப்போதும் நம்மவர்களை இப்படியேத்தான் நடத்துவார்கள்).

அதைக்காட்டிலும் காலங்காலமாக அழியாத அன்பையும் மதிப்பையும் தர தமிழ் மக்கள் உண்டு.

எல்லாரையும் மகிழ்வித்த வித்தகனே போய்வா . . .

அடுத்த முறை நீ பிறக்கும் போது தமிழனாக பிறக்க வேண்டும்.
உன்னை வாழ்த்த தமிழும் தயாராக இருக்கும்.

Advertisements

One comment on “நாகேஷ் 75…….

  1. சிறு வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்ததே நாகேஷின் நடிப்பை பார்த்த பிறகு தான்…. இன்னும் பழைய படங்கள் பார்க்கையில் இவருடைய நடிப்பு… அற்புதமாக இருக்கும்…

    இந்திய தேசமென்ன.. தமிழக தேசமே இவரை சரியான அளவில் உயர்த்தவில்லை என்பது தான் வருத்தப்படவேண்டிய விஷயம்..

    அன்புடன் இளங்கோவன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s