தமிழ் சினிமாவும் இலக்கணமும் பகுதி 1


இலக்கணம் என்பது எப்போதும் மாறாதது, யாராலும் மாற்றவும் இயலாதது  மாற்றினாலும் ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதே சரி.. . இலக்கியங்கள், வாழ்க்கை, கலாச்சாரம் என அனைத்து பகுதிகளிலும் இலக்கணம் என்பது முக்கியமாக இருக்கும் நேரம் நம் தமிழ் சினிமாவிலும் சில இலக்கணங்கள் அழியாமல், அழிக்க இயலாமல் உள்ளன. அவற்றை பற்றி பார்ப்போமா. . .

யாரப்பா அது ரெஜோலனுக்கு வேலையே இல்லையா ன்னு கத்துறது.. அதுசரி அது யாரா இருந்தாலும் நாம் நம் மக்களை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமே என்றுதான் அதே சமயத்தில் நல்ல பதிவாக இது அமைய வேண்டும் என்ற ஆசையில்லாத காரணத்தாலும் தான் இந்த பதிவு. . முடிந்தா ரசிங்க இல்லண்ணா விட்டுடுங்க..

முதல்ல நாம பார்க்க இருப்பது நமது சினிமாக்களின் கிளைமேக்ஸ் எனப்படும் இறுதி காட்சி.

தெரியாமல் கேட்கிறேன் சினிமாவில் இறுதி காட்சி என்பது கண்டிப்பாக சண்டைகாட்சியாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? இறுதி காட்சியில் சண்டையில்லாத சில சினிமாக்கள் வெற்றி பெறத்தான் செய்தது ஆனாலும் மாறாத இலக்கணம் போல இது நிச்சயமான ஒன்று. அதிலும் வித்தியாசமான சிந்தனைகளுக்கு இடம் தரும் என்பதால் வித்தியாசமான சண்டைகாட்சி அமைக்கப்படுகிறது அதிலும் குண்டுகள் வெடிப்பதாகட்டும் துப்பாக்கி சுடுவதாகட்டும் இல்லை அடியாட்களுடன் கதாநாயகன் மோதுவதாகட்டும் எத்தனை சினிமாவில் பார்த்தாலும் இன்றும் நம் சினிமா இயக்குனர்கள் இதிலே ஆர்வம் காட்டுகிறார்கள். (அதனால்தானோ என்னவோ மும்பையில் நடந்த 3 நாள் போராட்டத்தை மக்கள் அத்தனை சீக்கிரம் மறந்தும் விட்டார்கள்)

அது மட்டும் இல்லாமல் சினிமா துவங்கிய 15 நிமிடங்களுக்குள் வில்லன் வந்துவிடுவார் ஆனால் இறுதி காட்சி வரை பொறுமையாக இருந்து கடைசி காட்சியில் மட்டும் கதாநாயகனோடு தன் எல்லா அடியாட்கள் வழியாக மோதுவார். (ஏம்பா இதையாவது மாத்த கூடாதா)

அதிலும் அந்த இறுதிகாட்சி சமயத்தில் கதாநாயகன் வில்லனை பிடித்து விடுவார் உடனே எதுவும் செய்யாமல் குறைந்த அளவு 10 நிமிடத்திற்காவது பேசுவார் அது முடிந்ததும் வழக்கம்போல வில்லன் தப்ப முயற்சிக்க அல்லது அம்மாவோ தங்கையோ வில்லனின் பிடியில் இருப்பது தெரியவர இறுதி காட்சி ஆரம்பமாகும்.

இதை எல்லாம் விட கொடுமை என்ன வென்றால் இறுதி காட்சி வரை சண்டையே போடாமல் தெம்பாக இருக்கும் வில்லனும் படம் துவக்கமுதலே சண்டைகள் பல போட்டு எக்ஸ்பீரியன் பெற்ற கதாநாயகனும் மோதும் போது கதாநாயகன் தான் அடிபடுவார் அதிலும் ரத்தம் சொட்ட மயக்கமடையும்வரை அடிபட்டு கிடப்பார். அதன் பின் கதாநாயகியின் சத்தமோ, இல்லை ஏதேனும் சிறுவனின் சத்தமோ, இல்லை பின்னனி பாட்டோ கேட்டு எழுந்து அடிக்க துவங்குவார் பாருங்கள் வில்லனோடு நாமும் காலி அந்த இடத்தில்.

மேலும் கிளைமேக்ஸ் காட்சிகளில் வில்லன் வீட்டிற்கோ அல்லது வில்லன் இருக்கும் இடத்திற்கோ நம்ம கதாநாயகன் வரும் வழியை பார்த்தால் அசந்து விடுவீர்கள். ஓட்டை பிரித்து கொண்டு வருவார். இல்லையென்றால் சுவரை உடைத்தபடி வருவார். இனியாவது யாரவது கதவிருக்கும் பக்கத்தை தெளிவாக காட்டி கொடுங்கள்.

அதிலும் கிளைமேக்ஸில் இந்த கதாநாயகர்கள் ஸ்கீரினை பார்த்து பேசும் கலாச்சாரம் வேறு வந்து விட்டதா அய்யோ படத்தின் வில்லனோடு சேர்ந்து நம்மையும் திட்டுவார் பாருங்க. நமக்கே கோபம் வரும் வில்லனுக்கு வராத . .அதிலும் அதுக்கும் விசிலடிக்கும் கூட்டம் இருக்கே என்ன செய்ய. . .

இப்படி பல இலக்கணங்களை கொண்ட சினிமா கிளைமேக்ஸ் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றி நடை போடுகிறது ஆண்டுக்கு 100 சினிமா என்றால் கூட 30 ஆண்டுக்கு 30,000 சினிமாக்கள் இந்த கிளைமேக்ஸில் வந்திருக்க வேண்டும் தமிழனின் நிலை எப்படி..

அதே நேரத்தில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும் நம் தமிழ் சினிமாவில் இப்படி இலக்கணங்களை மீறி அமைத்த கிளைமேக்ஸ் உள்ள சினிமாவும் உண்டு அவை வெற்றி பெற்றும் இருக்கிறது ஆனாலும் அதை பின்பற்ற நம் கதாநாயகர்களோ இல்லை இயக்குனர்களோ தயாரில்லை. .

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் கூட்டமாக பொதுமக்கள் நின்று கொண்டிருக்க போலிஸ் அதிகாரிகளும் சூழ்ந்து நிற்க வில்லனும் கதாநாயகனும் சண்டையிடும் கிளைமேக்ஸை பார்த்து கி(ல்)லி பிடித்து விசில் அடிக்க போகிறோம்..

மீண்டும் சந்திக்கும்வரை . . . . . . . .

Advertisements

One comment on “தமிழ் சினிமாவும் இலக்கணமும் பகுதி 1

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s