வெட்கமா இல்லையா?


 

ஒரு பக்கம் தமிழன் கொத்து கொத்தாக செத்து கொண்டிருக்கிறான். நாம் கணிணியிலிருந்து கொண்டு எல்லா தளங்களிலும் இன்றைய செய்தி என்ன என்றும்

தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளில் என்ன புதிது என்றும் பார்த்து கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சிகளும் தங்கள் சார்ந்துள்ள அமைப்பையோ கட்சிகளையோ சார்ந்த சாதகமான செய்திகளை வெளியுடுகின்றன.

இலங்கையிலிருந்து வரும் சில செய்திகளும் சரி அங்கிருந்து எழுதும் சில பக்கங்களிலும் சரி பயந்து மறைந்து மறந்து செய்திகளை பதிப்பதை பார்க்கும் போது மனசு அடிக்கின்றது.

இலங்கையின் தமிழ் சார்பான பெண் அமைச்சர் ஒருவர் குறிப்பிடும் போது எம்பெண்கள் சிங்கள பெண்களைப்போல் ஜாக்கெட்டும் பைகளும் அணிந்து அவர்களைப்போல் வாழப்பழகி கொண்டார்கள் என்கிறார். .நம் அடையாளங்கள் அழிந்து கொண்டிருக்கும் நேரத்திலும் நாம் நம்மை பாதுகாத்து கொள்ளத்தான் முயற்சிக்கிறோம் இல்லையா

அதிலும் என் பார்வையில் சுயநலமில்லை என்றே தோன்றுகிறது ஆயினும் சிலர் நினைக்ககூடும் தமிழகத்தின் செயல்பாட்டில் சுயநலமோ என்று. அது தவறு என்பதை நான் மட்டும் சுட்டிகாட்டினால் எப்படி. திருமாவளவன் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வெற்றியடைந்ததோ இல்லை தோல்வியோ. அதைகுறித்த பல்வேறு தலைவர்களின் கருத்துக்களும் குற்றச்சாட்டங்களும் அந்த உண்ணாவிரதத்தின் நோக்கத்தை கெடுக்கும் விதமாகவே அமைந்தது என்றால் மறுக்க முடியுமா?

எது எப்படியோ ராமதாஸோ திருமாவளவனோ நெடுமாறனோ நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது ஆயினும் தலைவர்கள் என்ற இடத்தில் இருப்பதால் மட்டுமல்லாது தமிழர்கள் என்ற நிலையில் அவர்கள் எடுத்த முயற்சி அபரிதமானது.

முதல்வர் கருணாநிதியும் தன்னால் இயன்றளவுக்கான முயற்சிகளை மேற்கொள்ளத்தான் செய்கிறார். ஏதோ பதவிக்காக அலைகிறவர் என்று சிலர் சொன்னாலும் அவர் பதவியில் இல்லாத காலம் அதிகம் என்பதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்பதே என் கருத்து.

எது எப்படி இருந்தாலும் செத்து மடியும் தமிழர்களை தங்கள் சுய இலாபத்துக்கு பயன் படுத்தும் யாரும் , யாரும் தமிழ் வரலாற்றில் சுட்டி காட்டப்படுவார்கள் என்பது உண்மை.

உன் சகோதரன் செத்து கொண்டிருக்கும் வேளையில் தன் எதிர்ப்பை காட்ட பயப்படும் (அச்சமில்லை அச்சமில்லை என்று பாடிய பாரதி பிறந்த தமிழ்நாடு) தமிழர்களே இன்று தூங்கும் முன் ஒரு நிமிடம் யேசியுங்கள் நாம் தமிழன் தானா என்று. .

நியாத்திற்காக மரணத்தை சந்திக்க அஞ்சாதவன் தமிழன்,
தவறான தீர்ப்பிற்காக மரணத்தை தளுவியவன் தமிழன்,

இப்படி பெருமை கொண்ட தமிழனே நியாயம் என்ற ஒன்று உணடுமானால் நீ உன் உடன்பிறப்பை காக்க வேண்டியது அவசியமாகிறது.

எந்த காலகட்டத்திலும் வன்முறையோ போரோ தீர்வு தந்ததில்லை மாறாக பேசவேண்டும் . உள் ஒன்றும் வெளியே ஒன்றும் இல்லாமல் பேச வேண்டும் . இறந்த போன தமிழனை நினைத்து வாழும் தமிழனை நினைத்து பேச வேண்டும் பேச்சு ஒன்றே தீர்வாகும் அதுவே நிரந்தரமாகும். . .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s