சகோதர பாசம்


நான் என் பள்ளி மேல்படிப்பை முடித்த பின் மேற்படிப்பிற்காக நாகர்கோவிலிற்கு தினமும் சென்று வந்த காலம் அது. அம்மாவுக்கு கர்ப்பப்பை நீக்கிய அறுவை சிகிச்சை நடந்திருந்த நேரம் என்பதால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. அதற்காக வீட்டை கவனிக்கும் பொறுப்பு என் முதல் தங்கை ரீனாவிடம் ஓப்படைக்கப்பட்டது. அவள் பத்தாம்வகுப்போடு நிறுத்தப்பட்டு வீட்டை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.

அன்று அவளுக்கோ இல்லை எனக்கோ அதன் விளைவுகள் தெரிய நியாமில்லை மேலும் நல்லா படிக்கவில்லை என்றாலும் சுமாராக படிக்கும் ஒரு மாணவியின் படிப்பை நிறுத்திய அன்று என்னால் எதுவும் செய்ய முடியாத நிலைக்காக இப்பதிவை வாசிக்கும் அனைத்த நண்பர்களிடமும் நான் என் மன்னிப்பை கேட்டு கொள்கிறேன். ஆனாலும் சிறுவயதில் குடும்ப நிர்வாக எற்றெடுத்த என் தங்கை இன்று ஒரு பெரும் குடும்பத்தை நிர்வகிக்கும் திறமையுடன் உள்ளாள் என்பது எனக்கு பெருமை தரக்கூடியது அல்லவா.

சரி விசயத்திற்கு வருவோம். . நான் படித்தது சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் என்பதால் அதுவும் அஞ்சல் வழிக்கல்வி என்பதாலும் ஒரு ஆடிட்டரிடம் என்னை சேர்த்துவிட்டார் எங்கள் ஆசிரியரும் மாமாவுமாகிய சில்வெஸ்டின் சார். ஆகவே ஆடிட்டரிடம் பாடம் படிக்க குறிப்புகள் எடுக்க என காலை 6 மணிக்கு அவர் அலுவலகத்திற்கு போகவேண்டும் 6 மணிமுதல் 9 மணிவரைதான் வகுப்பு.

நாகர்கோவிலை 6 மணிக்கு அடைய வேண்டுமென்றால் எனது ஊரிலிருந்து காலை முதல் பேருந்திற்கு புறப்படுவதே சரியானதாக இருக்கும்.  அப்பேருந்து புறப்படும் சமயம் காலை 5 மணி. இப்படிபட்ட சமயத்திலும் என் தங்கை காலை 4 மணிக்கே எழுந்து எனக்கான காலை உணவை தயார் செய்வாள். சில நேரங்களில் 5 மணிக்கு சாப்பிட ஒரு மாதிரி இருக்கும் என்பதால் அச்சமயங்களில் இரண்டு முட்டைகள் அவித்து உப்பு மற்றும் நல்லமிளகு பொடியிட்டு சாப்பிடத்தருவாள். இப்படியாக ஒரு வருடங்கள் என்னை அம்மாவாக கவனித்த அவள் மற்ற நேரங்களில் எப்போதும் என்னோடு சண்டை போடுவாள் காரணம் என் அடுத்த தங்கை ரீஜின்

இளையவள் என்பதாலோ என்னவோ அவளுக்கு நான் அதிக செல்லம் கொடுத்திருந்தேன். அதனாலே அவள் ரீனாவுடன் அடிக்கடி சண்டையிடுவதும், குற்றம் யார் பக்கம் இருந்தாலும் நான் ரீனாவைத்தான் சத்தமிடுவேன் என்பதாலும் அவளுக்கு என் மீது கோபம் இருக்கும் ஆனாலும் அன்பு குறைவதில்லை. இன்றும் அப்படித்தான் இருக்கிறாள். இருவருக்கு சண்டை அதிகம் வரும் ஆனாலும் மனதுக்குள் இருக்கும் அன்பு மறைவதில்லை இல்லையா.

எனக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. மாறாக சினிமா பார்க்க என்றாலும் இல்லை கன்யாகுமரி பீச்சுக்கு என்றாலும் நாங்கள் மூவருமாக சென்று வந்த நிகழ்வுகள் ஏராளம்.

இன்று எல்லாரும் திருமணம் முடிந்து தனித்தனி குடும்பங்களாகிவிட்டோம். இளைய தங்கையோடு அடிக்கடி தொலைபேசியில் பேசினாலும் எங்கள் பேச்சு ரீனாவை பற்றித்தான் இருக்கும் அவளுக்கு இன்றும் தொலைபேசினால் சண்டைதான் வரும். எதையாவது சொல்லி சண்டை போடுவாள். ஆனாலும் தங்கையை பார்க்கும் போது அண்ணன் போன் பேசினான என்றும் எப்படி இருக்கிறான் என்றும் கேட்க தவறுவதில்லை அவள்.

நான் அவளை பற்றி அதிக சண்டைகளை சொல்வதைப்போல அவளும் என்னைப்பற்றி இப்படித்தான் சொல்வாள் ஆனாலும் மனதில் உள்ள அன்பின் அளவு இன்றும் குறையாமலிருக்கிறது.

ஒருமுறை முக்குத்தி வேண்டுமென்று அம்மாவிடம் கேட்ட ரீனாவுக்கு என் முதல் சம்பளத்தில் ஒரு தங்க மூக்குத்தி வாங்கி வந்தேன். அதை அணிவிக்க ஒரு அம்மணி வந்திருந்தாள் அவள் சில ஆயுதங்களோடு வந்து மூக்கு குத்த லேசாக இரத்தம் எட்டி பார்க்க என் தங்கை அழ . . நம்ப மாட்டீர்கள் நான் விட்ட சத்தத்தில் மூக்கு குத்த வந்தவளையும் காணோம் மூக்குத்தியையும் காணோம் (நான் தான் கோவத்தில் வெளியே எறிந்தேன்)  இது என் பாசத்திற்கு உதாரணம் என்றால். அவளின் பாசத்திற்கு உதாரணமாக சொல்ல ஒன்றல்ல இரண்டல்ல சம்பவங்கள்

அவள் திருமண சமயத்தில் நான் சவூதியில் இருந்தேன் என் முதல் லீவில் ஊருக்கு வந்ததும் அவள் என்னிடம் கதறியழுதது இன்றும் நியாபகம் இருக்கிறது. 

இன்றும் எனக்காக தன் புகுந்தவீட்டில் உள்ளவர்களோடு கருத்து வெறுபாடு கொண்டிருக்கிறாள். . ஏன் அவள் கணவனிடமே சண்டையிட்ட நிகழ்வுகளும் உண்டு. அவர் எனக்கு மிக நெருக்கமானவர் என்பதால் பிரட்சனைகள் வருவதில்லை.

இன்று வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் எங்கள் மனசின் மூலமாக தினமும் சந்தித்து கொண்டிருக்கிறோம்.

முதல் மச்சான் சவூதியில் இருக்கிறார். அடுத்தவர் சவூதியில் இருந்தார் இப்போ கப்பலுக்கு போக இருக்கிறார்.

மீண்டும் நாங்கள் மூவருமாக பழைய சம்பவங்களை போல இருக்க முடியாது என்றபோதிலும் குடும்பமாக மீண்டும் சில பல இடங்களுக்கு போக வேண்டுமென்ற ஆசை உண்டு. . . .

எல்லாரும் ஒன்றாக சேரும் நாள் வரவேண்டும். .விரைவிலே நேரமும் சமயமும் ஒன்றாகும். . .

Advertisements

4 comments on “சகோதர பாசம்

 1. ரஜோலன், இந்த பதிவை படித்தவுடன் எனக்கு என்னுடய அண்ணாவும் அக்காவும் தான் நினைவுக்கு வந்தார்கள். பள்ளிக்கூட நாட்களில் நாங்கள் மூணு பேரும் தான் தோழர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிக்கொண்டே இருப்போம், எங்கம்மா கூட சில நேரம் அலுத்து கொள்வார்கள், அப்படி என்ன தான் விடிய விடிய பேசுவீர்கள் என்று.
  அப்பவே எங்களுக்கு டிவி எல்லாம் பார்க்க பிடிக்காது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொட்டை மாடியில் போய் கதை பேசிக்கொண்டே இருப்போம். இப்போது அதை எல்லாம் நினைத்தால், ஏதோ கனவு மாதிரி இருக்கின்றது.

 2. நிச்சயாமாக தோழி

  நட்புடன் இருக்கும் சகோதர பாசத்திற்கு ஈடாக எதை காட்ட முடியும்

 3. Hi Rajolan,
  We are also three but three sister..many called us ‘mupperunth theviyar” ..we used to be so friendly and looked very much similar if not same!!! We three discussed everything down the sky !

  Now we all are in three different countries and it’s just disgusting to know we are grown up..I wish the time didn’t fleet like this..sorry for posting this in tamil…

  cheers,
  janu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s