என்னதான் செய்வார்கள்


இப்போ இரண்டு மாதங்களாகத்தான் இது நடக்கிறது. என்றாலும் மனசு நிறைய இழந்ததை போல் அடிக்கடி வேதனை கொள்கிறது காரணம் என் மகன்.

மதிய உணவிற்காக வீட்டிற்கு போகும் வேளை எல்லாம் அம்மாவிடம் சண்டையிட்டு கதவை திறக்கும் மகன் இப்போதெல்லாம் இல்லை. அவனோடு சண்டை போட அம்மாவுக்கும் இயலவில்லை காரணம் அவன் வீட்டில் இல்லை என்ற குறைதான்.

அவன் எங்கே என்றுதானே கேட்கிறீர்கள்……… அதற்கு முன்

பஹ்ரைனில் குடும்பத்துடன் இருக்கிறோம் என்றபோதும் குடும்பங்களை இழந்துதானே தவிக்கிறோம் என்று எனது முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் அது எத்தனை உண்மை என்பதை கடந்த இரண்டுமாதங்களாகத்தான் உணர முடிகிறது.

இதுவரை நான் மட்டுமே வேலைக்கு சென்று வந்தேன். தான் படித்த படிப்பு சும்மாவாகிவிடக்கூடாத என்ற நிலையிலோ அல்லது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென்றோ அல்லது “சும்மா இருப்பதன்” விளைவுகள் பல என்பதாலோ இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக என் மனைவியும் வேலைக்கு போவெதென்று முடிவு செய்தார். வேலை கிடைக்க அலைய வேண்டிய அவசியமில்லை காரணம் அவர் செவிலியர் (வழக்கொழிந்த வார்த்தைகளில் இதையும் சேர்க்க வேண்டாமென்று நினைக்கின்றேன்). நல்ல ஒரு மருத்துவமனையில் வேலையும் கிடைத்து கடந்த இரண்டு மாதங்களாகத்தான் வேலைக்கு சென்று வருகிறார் (இத்தனை வருடம் ஏன் போகவில்லை என்று கேட்டால் . . பதில் தனிப்பதிவாகும் அதுவும் “மகாநதி” சினிமா போல் சோகமாக்கி விடும் என்பதால் அதை விட்டுவிடுவோம்)

சரி நானும் மனைவியும் வேலைக்கு சென்ற பிறகு மகனை யார்பார்ப்பார்கள் ஸ்கூலுக்கு அனுப்ப வரும் ஏப்ரல் வரை காத்திருக்க வேண்டும் அதுவரை எப்படி??? இருக்கவே இருக்கு பேபி சிட்டிங் ( தமிழில் குழந்தை இருக்கை) என்று தேடி அலைந்து இறுதியில் ஒரு தமிழ் குடும்பத்தின் தலைவி ஒருவர் பேபி சிட்டிங் வைத்திருப்பதாக தெரிந்து அங்கே அவனை சேர்த்தோம். அரபு தேசங்களில் இது நல்ல தொழிலாக நடக்கிறது. . வீட்டில் சும்மா இருக்கும் மனைவிமார் பேபி சிட்டிங் துவங்கி குழந்தை ஒன்றுக்கு சுமார் 30 தினார் (இந்திய ரூபாயில் 4000 ரூபாய்) வசூலிக்கிறார்கள். சும்மாவும் இல்லை நன்றாக கவனிக்கவும் செய்கிறார்கள்.

இப்படி பேபி சிட்டிங் ஒன்றில் குழந்தையை விட அவனை காலையிலே அதுவும் இந்த குளிர் நேரத்தில் (காலையில் 8 டிகிரி இருக்கும்) பாவம் குழந்தை மிகவும் சிரமப்பட்டு எழுந்து அழுது கொண்டே அங்கே செல்லும் காட்சி என்னை தினமும் கண்ணீர் சிந்த வைக்கிறது. காலையில் போகும் அவனை மாலையில் 6 மணிக்குத்தான் அழைத்து வரமுடிகிறது. என்ன செய்ய எங்கள் வேலை நேரம் அப்படி.

பணம் சம்பாதிக்க என்னென்ன செய்ய வேண்டியுள்ளது பார்த்தீர்களா? . இதுவே நம் தேசம நம் ஊராக இருந்தால் நம் குழந்தை பிரிவு என்பதை உணராமல் பாட்டியுடனோ தாத்தாவுடனோ அத்தையுடனோ மாமாவுடனோ சித்தியுடனோ விளையாடிக்கொண்டிருப்பான். இங்கே தனியே இல்லை என்றாலும் புதிய மனிதர்களோடு எப்படி அவனால் இயல்பாக இருக்க முடியும்.

அப்பா வந்து அழைத்து போகும் அந்த ஆறுமணிக்காக காலை 8 மணிமுதலே காத்திருப்பதை தவிர அவனால் என்ன செய்ய முடியும்.

ஊரிலோ உறவுகள் பெருமை கொள்கிறார்கள் குடும்பமாக இருக்கிறான் என்று . . இங்கே நாம் அனுபவிக்கும் சில பல கஷ்டங்கள் யாருக்கு தெரியும்.

நீங்கள் கேட்கலாம் ஸ்கூலுக்கு போனபிறகு இப்படித்தானே என்று . . உண்மைதான். இருந்தாலும் ஸ்கூலுக்கும் பேபி சிட்டிங்க்கும் உள்ள வித்தியாசம் தெரியும் தானே

இதற்காகவாவது எத்தனை விரைவில் இங்கிருந்து ஊருக்கு போக முடியுமோ அத்தனை வேகம் போகவேண்டும் . . .

இது என் நிலை மட்டும் என்பதல்ல . .

நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் நிலையும் இதுதான் . .

மாறிவரும் உலகுக்கு ஈடு கொடுக்க பணம் தேவை அதை அடைய உழைக்க வேண்டியுள்ளது. இரண்டு கை தட்டினாலே சத்தம் வரும் .  . நம் சத்தம் நமக்கு கேட்க நாம் படும்பாட்டில் இப்படி பட்ட சிரமங்கள் வரத்தான் செய்யும் அதையும் கடந்துதான் போகவேண்டும் . . இல்லாது என்னதான் செய்யமுடியும் நம்மால்  .

(இப்பதிவை எழுத நீண்ட நாட்களாக நினைத்த போதிலும் இதை எழுத செய்தது நண்பி குந்தவையின் பதிவே . . . குந்தவைக்கு நன்றி)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s