மீண்டும் சில வார்த்தைகளுடன்


 

சென்ற பதிவில் நான் சுட்டிகாட்டிய சில வார்த்தைகள் தவிர புதியதாக சில வார்த்தைகள் என் சிந்தனையில் கிடைத்தன அவற்றை பகிர்ந்து கொள்ள இதோ

வெரசல

வேகம் என்ற வார்த்தைக்கு பதிலாக பண்டைய தமிழகம் பயன்படுத்திய வார்த்தைதான் இது. குதிரையில் பயணம் செய்யும் தமிழர்கள் வெகமாக குதிரைஓட்டுவதை வெரசல் வெரசல என்று குறிப்பிடுகின்றனர். வெரசல் என்பதற்கு பொருள் என்ன என்றால் வேகம் என்பதே. இன்று நீங்கள் பயணம் செய்யும் காரின் ஓட்டுனரிடம் வெரசல போ என்று சொன்னால் எப்படி இருக்கும் சற்று சிந்தித்து பாருங்க.

இன்றும் சில தென் தமிழகத்தில் வயது முதிர்ந்த சிலர் இவ்வார்த்தையை உபயோகப்படுத்து கின்றனர். ஆயினும் இது வழக்கொழிந்து இறக்கும் தருவாயில் உள்ள ஒரு வார்த்தையாகும் அதிலும் வெரசல இவ்வார்த்தை அழிந்தும் விட்டது எனலாம்

ஓர்மை

அடுத்த வார்த்தை இது, எங்கள் ஊரில் சில வயது முதிர்ந்த தாத்தாக்கள் நான் சிறு வயதாக இருந்த போது பல நேரங்களில் “ஓர்மையா வாங்கிட்டுவா” என்று கடைக்கு அனுப்பும் போது சொல்ல கேட்டிருக்கிறேன்

ஆனால் இன்று நம் அடுத்த தலைமுறையினரிடம் சொல்லிப்பாருங்கள் அவர்கள் நம்மை கர்கால மனிதர்களைப்போல் பார்ப்பார்கள் என்பதே உண்மை என்ன செய்ய நம் தமிழ் செத்து கொண்டிருக்கிறது

சரி இனி அதற்கான விளக்கமும் பொருளும், ஞாபகம் என்பதுதான் இவ்வார்த்தையின் பொருள். ஓர்மை என்றால் ஓரு விசயத்தில் மையல் கொண்டிருக்க வேண்டும் என்பதை குறிப்பதாக அமைகிறது. அதாவது ஒரு விசயத்தை மையப்படுத்துதால் என்றால் ஞாபகத்தில் வைத்திருத்தல் என்பதாக பொருள் கொள்ளலாம். ஆகவே ஓர்மை என்பது ஞாபகம்

ஓர்மை வச்சிக்குங்க என்றால் உங்கள் ஹார்டு டிஸ்க்கில் பதிவு செய்க என்று பொருள் (இப்ப சிலருக்கு புரியும்)

ஒரண்டு

இவ்வார்த்தை பற்றி குறிப்பிடும் போது எனக்கு சிறு வருத்தம் தோன்றுவதுண்டு. இதை சிலர் தென் தமிழகத்தின் தமிழின் வார்த்தையாக எடுத்து கொள்ளக்கூடாதே என்பதே அது. ஒரண்டு என்பதின் பொருள் வம்பு என்பதே.

ஒன்றே உண்டு என்ற கருத்தில் பேசுபவர்களைத்தான் ஒரண்டு பிடிக்கிறான் அல்லது ஒரண்டுக்கு இளுக்கிறான் என்கின்றனர். பிடிவாதம் என்ற வாக்காக இது தோன்றினாலும் பிடிவாதம் என்பதே வம்பு என்ற வார்த்தையின் மறுபதிப்பு என்பதே என் கருத்து.

ஒரண்டு பிடிக்காமல் நீங்களும் ஒரண்டு என்பது வம்பு என்று ஒத்துக்கொள்ளுங்கள்.
இன்னும் சில வார்த்தைகளுமாய் மீண்டும் வெரசல் உங்களை சந்திக்கும்வரை ஒரண்டு பிடிக்காமல் ஓர்மையில் என்னை வைத்துக்கொள்ளுங்கள்.

Advertisements

6 comments on “மீண்டும் சில வார்த்தைகளுடன்

 1. /இன்னும் சில வார்த்தைகளுமாய் மீண்டும் வெரசல் உங்களை சந்திக்கும்வரை ஒரண்டு பிடிக்காமல் ஓர்மையில் என்னை வைத்துக்கொள்ளுங்கள்./

  இன்னும் இது மாதிரி பல இடுகைகளை இட வேண்டுகின்றேன்

  வாழ்த்துகள்

 2. முரண்டு பிடிக்காதேனு சொல்வாங்களே அதுவும் ஒரண்டு-வும் ஒன்னோ? அப்பறம் ஓர்மை , வெரசல் இதெல்லாம் தூய தமிழ் வார்த்தைகள் தான்?

  வெரசலா எனபது ஒருவேளை விரைவா -என்று சொல்லும் சொல்லில் இருந்து திரிந்து இருக்குமோ! தப்பிருந்தா சாரி .. என்னை கூட சிந்திக்க வைக்கிறது மாறி எழுதி இருக்கீங்க . அதுக்கு பெரிய சபாஷ் ..!

  பிடிவாதம் எனப்டும் வம்பும் எப்படி ஒண்ணாகும் ரெஜோலன். நான் இதை பிடிவாதமா மறுக்கறேன் .. நீங்களும் பிடிவாதம் பண்ணாம ஒத்துக் கொள்ளுங்கள்..உடனே வம்புக்கு வராதீங்க ஜானுன்னு சொல்ரிடாதீங்க !! பதிவு ரொம்ப நல்ல இருந்தது. நிறைய போடுங்க.. இது போல

  அன்புத் தோழி,
  ஜானு

 3. ‘ஓர்மை’ என்பது எனக்கு தெரிந்து மலையாள வார்த்தை. இப்பவும் நாகர்கோவிலில் புழுக்கத்தில் உள்ள வார்த்தை இது. அங்கு நிறைய மலையாள கலப்படம் உண்டு.
  அர்த்தம் சரிதான்.

  ரெம்பவே சிரத்தை எடுத்து எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். நான் தொடருக்கு அழைத்தவர்கள் எல்லாரும் அருமையாக எழுதியிருக்கின்றீர்கள். எனக்கு நிஜமாகவே ரெம்ப வெட்கமாக இருக்கிறது.

 4. பிடிவாதம் எனப்டும் வம்பும் எப்படி ஒண்ணாகும் ரெஜோலன். நான் இதை பிடிவாதமா மறுக்கறேன் .. நீங்களும் பிடிவாதம் பண்ணாம ஒத்துக் கொள்ளுங்கள்..உடனே வம்புக்கு வராதீங்க ஜானுன்னு சொல்ரிடாதீங்க !!

  பாத்திங்களா ஜானு

  பிடிவாதம் பிடித்த நீங்களே வம்புக்கு வருகிறேன் என்று சொல்ல வேண்டாம் என குறிப்பிடும் போது பிடிவாதம் என்பது வம்பு என்பதின் துவக்கம் என்பதை ஒத்து கொள்ளுங்கள்
  ஆகவே பிடிவாதமும் வம்பும் நெருக்கமாக இருக்கும் வேளையிலே ஒன்றாக பார்ப்பது தவறில்லையே

 5. நண்பி குந்தவைக்கு

  மலையாள வரலாற்றை எடுத்து கொண்டால் மிகவும் சின்ன வரலாறு அது. ஏதேனும் இரண்டு நூற்றாண்டுகளை மட்டுமே கடந்துவிட்ட வரலாறு அது நாமோ . . .

  அதை விட தமிழ்தான் மலையாள மொழியின் தாய்மொழி என்பதை மறுக்க மாட்டீர்கள் எனவே அவர்கள் இன்றும் கடைபிடிக்கும் ஒரு தமிழ் வார்த்தைதான் இதுவாக இருக்கலாம்
  சரிதானே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s