இன்னும் மாறலியே


 

சமைலறையில் இருந்த பெண்கள் இன்று சமைலறையையும் கவனித்து கொண்டு மற்ற பல துறைகளையும் நிர்வகிக்க திறமை பெற்றுவிட்டார்கள் இருந்தாலும் நம் ஆண்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

பள்ளி அரசுத்தேர்வுகளின் ரிசல்ட் வரும் நேரம் மாணவிகளே பெரும்பாலும் தேர்வாகி இருப்பார்கள் மாணவர்கள் எப்போதும் தேர்வில் பிந்தங்கியே இருக்கிறார்கள். மாணவிகளுக்கு படிக்கும் வேலை என்றால் மாணவர்களோ மாணவிகளை படிக்க வேண்டிய அலைகிறார்கள். இங்கே துவங்கும் இவர்களின் “சேவை”  “எங்கே செல்லும் பாதை” வரை செல்கிறது.

மாணவிகளோ தங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சிறப்புடன் தேர்வாகி பணிக்கு செல்கிறார்கள். அப்படி தன் குடும்பத்துக்காக உழைக்கும் பெண்களுக்கு கிடைப்பது அவமானங்களும் கிண்டலும் இங்கே எழுத கூசும் பேச்சுகளும் தான். இவை 2000 முதல் 20000 வரை சம்பளம் பெறும் எல்லாருக்கும் ஒன்றுதான்.

சக பெண் ஊழியர்களை ஆண் வர்க்கம் செல்லப்பெயர் இட்டு அழைப்பது எப்படி தெரியுமா . . ஒல்லி, குண்டு, என்று அவர்களின் உடல் அழகை வைத்து ஆபாசமாக குறிப்பிடும் ஊழியர்களும் இருக்கிறார்கள்

இதைவிட கொடுமை என்ன வென்றால் வேலை முடிந்து இரவு 8 மணிக்கு மேல் பேருந்தில் செல்லும் என் அருமை தமிழச்சிகளை கேட்டுப்பாருங்கள் அவர்கள் அடையும் கொடுமைகளை கண்ணீர் வடிய தெரிவிப்பார்கள்

நான் விடுமுறையில் இருந்த ஓர் நாளில் நாகர்கோவிலில் இருந்து எனது ஊருக்கு வந்து கொண்டிருந்தேன். இரவு பேருந்தாதலால் கூட்டம் அதிகமில்லை குடும்ப சுமை பகிர்ந்துகொள்ள வேண்டி வேலைக்கு போகும் ஒரு சிலரை தவிர அவ்வேளையில் அதிக கூட்டமிருக்காது. அப்படி வேலை விட்டு திரும்பும் ஒரு 25 வயது இளம்பெண் ஒருத்தியும் இருந்தாள். பேருந்து நிறுத்தம் ஒன்றில் பேருந்து நிற்கும் நேரம் பேருந்து நிறுத்தமே வீடாக வாழும் சில தெருநாய்கள் காது கூசும் வார்த்தைகளால் அப்பெண்ணை சைகை காட்டி பேச . . எனக்கோ கோபம் ஏற முறைத்து பார்த்த  என்னையும் சில வார்த்தைகளால் அர்சித்தார்கள்.

பெண்கள் தங்கள் கட்டுகளை உடைத்து சாதிக்க வந்துவிட்டார்கள் ஆண்கள் இன்னும் குட்டிசுவர்களில் உலகை ரசித்து கொண்டிருக்கிறார்கள்.

பஹ்ரைனில் நான் பல பெண்கள் வேலைக்கு செல்வதை பார்த்திருக்கிறேன் நம்ப மாட்டீர்கள் இங்கே அத்தனை பாதுகாப்பாக அவர்கள் இருக்கிறார்கள் தனியே இரவு 10 மணிக்கு வேலை முடிந்து நடந்து வீட்டுக்கு வரும் நம் நாட்டு பெண்கள் அதிகம். இந்தியாவில் ஆட்டோவில் செல்லக்கூட பயப்படும் பெண்கள் அதிகம். 
அதற்காக இந்தியாவை குறைத்து மதிப்பிட வில்லை, நம் இளைஞனையும் குறைத்து மதிப்பிடவில்லை. பெண்கள் பல இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டி தங்களால் எதேனும் சாதிக்க முடியுமா என்று முயற்சிக்கும் வேளைகளை நம் தரம் தாழ்ந்த சிந்தனையால் சிதைக்க வேண்டுமா

உன்னால் உதவ முடியாவிட்டாலும்
உபத்திரம் செய்யாமல் இருக்க பார்
இல்லை
போட்டியாக நினைத்து
உன் திறமையை வளர்க்க முயல்

நாளை உனக்கும் துணையாக உன் வீட்டிலிருந்தும் ஒரு பெண் உழைக்க காத்திருப்பாள் என்பதை நினைவில் கொள்.

Advertisements

One comment on “இன்னும் மாறலியே

 1. Hi rajolan,

  Oru vazhiyaa ‘innum maaraliye’ vai kandu pidichchitten.. I initially thought You were about to write that one anew .. Never had a clue that that was written already…came and checked for few days to see whether it was posted in your blog .. 😀 ..

  Today innum rendu perkita dose vaanginen antha kavithaikkaaga 😦 haha ..appa thaan meendum unga commentsai paarthu theda vanthen..yen kutti moolaikkum why can’t it be already posted nu urachchithu… sorry for the late reply.. neenga link pottu irukkalaam..

  உன்னால் உதவ முடியாவிட்டாலும்
  உபத்திரம் செய்யாமல் இருக்க பார்
  இல்லை
  போட்டியாக நினைத்து
  உன் திறமையை வளர்க்க முயல்

  nice punch rajolan.. .. hope you won’t mind my tanglish..today..

  cheers
  janu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s