ஜனவரி 21


பணியாற்ற அலுவலகமோ இருக்கையோ இல்லாத நிலையிலும் இந்தியாவின் தேசிய புலனாய்வுத்துறை தலைவராக ராஜூ இன்று பொறுப்பேற்று கொள்கிறார். 59 வயதாகும் இவர் ராஜீவ் கொலைவழக்கை விசாரித்தவர். அடுத்த வருடம் ஜனவரி 31ல் இவர் பொறுப்பேற்ப்பார்.

வழக்குகள் பல தொடரப்பட்டாலும் அசராத வீரர்கள் நம் அரசியல்வாதிகள். தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய விண்ணப்பம் செய்வதும் அது தள்ளுபபடி ஆவதும் அல்லது வழக்கு தள்ளுபடி ஆவதும் வழக்கமாக கண்டுகொண்டிருக்கும் நமக்கு இதுவரை வழக்கு தீர்ந்து தீர்ப்பாகி தண்டனை பெற்ற அரசியல்வாதியை காணமுடியவில்லை. இதோ இப்போதும் அப்படித்தான் வரி ஏய்ப்பு வழக்கில் தன்னை விலக்க கோரி ஜெயலலிதா தொடுத்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.

இதுவரை இல்லாத வகையில் இலங்கை பிரட்சனையில் இப்போது மாணவர்கள் ஈடுபடும் நிலை உருவாகி உள்ளது. அப்பாவித்தமிழர்களை காப்பாற்ற இந்திய தமிழன் என்ன செய்ய போகிறான்

குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடிக்க முடியும் என்ற தோற்றமுள்ள விமலா ராமன் தன் சினிமா வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள கவர்ச்சி என்ற மாயையை நம்பி அதுதான் நல்லது என்ற அறிக்கை விட வைத்துள்ளது இன்றைய அவருடைய நிலை. விமலா ராமன் கவர்ச்சியாக நடித்தால் பார்ப்பது யார்??

அமெரிக்காவில் வரலாற்று மாற்றம் ஏற்ப்படுத்திய ஓபமா இன்று பதவி ஏற்கிறார். பதவி ஏற்ப்பு விழாவில் ஆறு மதங்களை கொண்ட மத குருமார்கள் முன்னிலையில் பதவி ஏற்பு விழா. சிறப்பானது நம் தமிழ் பெண் ஒருவரும் அந்த குருமார்கள் கூட்டத்தில்.

பிரபாகரன் நாட்டை விட்டு தப்பி ஓடியிருக்கலாம் அவர் இலங்கையில் இல்லை என்ற நிலையில் ஒரு பாங்கரையும் காட்டி விளையாடுகிறது இலங்கை அதே நிலையில் பிரபாகரனை விரைவில் பிடிப்போம் என்கிறது அதே இலங்கை . . நிச்சயமாக என்னவோ நடக்க இருக்கிறது என்பது மட்டும் உண்மை, இந்த நிலையில் இன்று வெளியான ஒரு செய்தி இன்னும் நகைக்க கூடியதாக இருக்கிறது அதாவது பிரபாகரனை பிடிக்க இராணுவம் தனிப்படை அமைத்துள்ளதாம் விரைவில் பிடிப்பார்களாம். என்ன செய்ய. . . இனி இலங்கைக்கு அமைதி கிடைக்க இறைவனை வேண்டுவோம்

பலவகைகளில் மக்களுக்கு தொண்டாற்றிய மாபெரும் தலைவி விஜயசாந்தி தன் கட்சியை கலைத்து மக்களுக்கு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறார். இவர் கட்சி நடத்தி சாதித்ததை விட கட்சியை கலைத்ததுதான் மக்கள் மனதில்

கடந்த சில நாட்களாக அதிக காற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்ப்பட்டதால் கன்னியாகுமரி பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விவேகானந்தர் பாறைக்கான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

மலோகான் குண்டுவெடிப்பில் கர்னல் ஒருவருக்கும் தொடர்பு என்ற செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்க கூடியதாக அமைகிறது அது மட்டுமில்லாது குண்டுகள் வரவளைத்து கொடுத்து குண்டு வெடிப்புக்கு மிக முக்கிய பல உதவிகளை செய்து வந்துள்ளார் எனவும் சொல்லும் குற்றப்பத்திரிக்கை நம்பிக்கை தரும் அதே வேளையில் நாட்டை துண்டாக்க கர்னலே முயன்றுள்ள நிலையில் நம் நாடு இன்னும் பாதுகாப்பானதுதானா??

பலரும் பலவகையான தளங்களை அமைத்து இருந்தாலும் தட்ஸ் தமிழின் ஒரு சேவை என் மனதை தொட்டது காரணம் பிரியதர்ஷினி என்ற சிறுமியின் உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செலவை ஏற்று தன் பார்வையாளர்கள் மூலமாக தன்னால் இயன்ற பண உதவியை செய்தமைக்கு ஒரு சல்யூட். . .

இன்று கூடும் சட்டசபையில் பல பிரட்சனைகள் வெடிக்கும் என்ற போதிலும் இலங்கை குறித்த பிரட்சனைகளுக்கு நல்ல பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ராமதாஸ் திருமாவளவன் வரிசையில் நாமும் நம் இலங்கை தமிழனும் . . .

பார்ப்போம் நல்லதாக விடியுமா …?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s