வழக்கொழிந்த வார்த்தைகள்


நண்பியின் நல் எண்ணத்தில் இந்த வம்பில் மாட்டினாலும் ஓர் நல்ல காரியம் இது காரணம் வழக்கொழிந்த வார்த்தைகள் பிற்பாடு வழக்கொழிந்த மொழியாகவும் மாறும் வாய்ப்புள்ளதால் அதை மாற்றும் எண்ணமாக நமக்கு தெரிந்த சில வழக்கொழிந்த வார்த்தைகளை திரும்பவும் வழக்குக்கு கொண்டுவரும் எண்ணமாக இதை நான் கருதுகிறேன்

முதலில் நம்ம குந்தவைக்கு நன்றி.

அடுத்த நானும் இதை குறித்த என் சிறு மூளையை விரட்ட (இரண்டு நாள் தலைவலி வேற) கிடைத்த சில வார்த்தைகள்

குசுனி

இன்றும் இலங்கை தமிழர்களால் பயன்படுத்தப்படும் அழகான வார்த்தை அதாவது இன்றைய நவ நாகரீக உலகில் அடுக்களை என்று சொன்னால் கூட யாருக்கும் தெரிவதில்லை மாறாக கிச்சன் என்று தமிழ் பேசுகிறார்கள். பழைய வரலாற்று புத்தகங்களும் இலக்கியங்களும் சமையல்காரர்களை குசுனிக்காரன் என்றே அழைத்திருக்கின்றன. குசுனி என்பது இன்னும் சில பகுதிகளில் உபயோகிக்கும் வார்த்தைதான் என்றாலும் எத்தனை பேருக்கும் தெரியும் இல்லையா.

கன்னம்

கன்னம் என்பதன் பொருள் என்ன என்றால் திருட்டு என்பதாகும் அனைவருக்கு தெரியவில்லாட்டாலும் சிலருக்காவது இது தெரியும் ஆனாலும் இவ்வார்த்தை வழக்கொழிந்து இன்று சில பாட்டுகளில் உபயோகப்படுத்தப்பட்டு பின் அதுவும் மறக்கப்பட்டு விட்டது இன்றைய பொருளில் கன்னம் என்பது கண்ணுக்கும் வாயுக்கும் காதுக்கும் இடைப்பட்ட பகுதியாக பொருள் கொள்ளப்படுகிறது. கன்னம் என்பதற்கு இலக்கியங்கள் எந்த வார்த்தையை பயன்படுத்தின என்பது குறித்த சில தினங்களுக்குள் தெரிவிக்கிறேன் (இப்ப கொஞ்சம் தலைவலி)

சிரம்

சிரம் என்றால் என்ன? என்று கேள்வி கேட்டால் இன்று எத்தனை பேருக்கும் அதன் பொருள் தெரியும் ஏறக்குறைய 25 வருட இடைவெளியில் காணமல் போன சில வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

இன்றும் அரசு பேருந்துகளில் மட்டுமே காணக்கூடிய வார்த்தை ஆனாலும் பொருள் அப்பேருந்தை ஓட்டுபவருக்கும் ஓட்டுனருக்கும் தெரியுமா என்றால் சந்தேகமே.

பேருந்தில் உள்ள வார்த்தை இதுதான்
கரம் சிரம் புறம் நீட்டாதீர்

இவ்வார்த்தையில் உள்ள கரம் தெரியும் ஆனால் அடுத்து வரும் சிரம் மற்றும் புறம் என்ற வார்த்தைகளுக்கான பொருள் மறந்துவிட்டது என்பதே உண்மை இல்லையா

அவ்வார்த்தையின் பொருள் என்ன என்றால் கைகளையும் தலையையும் வெளியே நீட்டாதீர் என்பதே. அப்படியென்றால் சிரம் என்பது தலையாகவும் புறம் என்பது வெளியே என்றும் பொருள் படுகிறது. இன்றைய காலகட்ட மக்களுக்கு இதன் பொருள் தெரியுமா?

கச்சை

பெண்களுக்கான ஆடைகளில் ஒன்று இது. அய்யோ மன்னிச்சிடுங்க இன்னைக்கு பெண்களுக்கு கச்சை என்றால் என்ன என்பதும் தெரியாது கச்சை கட்டவும் தெரியாது. அதை விடுவோம் கச்சை என்பது உடை என்பதே பொருள். அதிலும் மார்பு கச்சை என்றால் இன்னும் சிறப்பாக நண்பர்களுக்கு புரியும்.

அதே சமயம் நம் தமிழ் பண்பாட்டின் சிறந்த வெளிப்பாடாகவும் இருந்த ஒரு சடங்கின் பெயரும் கச்சை இடுதல் ஆகும் அதாவது இறந்துபோன ஒருவரின் குடும்பத்தினர்கள் வெண்மையான துணியை உடுத்துதல் தமிழர் மறபு. மேலும் ஒருவர் இறப்பு என்பது திடிரென ஏற்படுவதாதலால் உடனே அத்தகைய துணியை வாங்க இயலாது என்பதாலும் இறந்த குடும்பத்தினரின் துக்கத்தில் நாமும் பங்கு கொள்கிறோம் என்பதை காட்டவும் இந்த கச்சை இடுதல் என்ற சடங்கு தமிழர்களால் பின்பற்றபட்டது. அதாவது இறந்த குடும்பத்தினருக்கு நெருக்கமான உறவுக்காரர்களால் தரப்படும் துணி என்பது பொருள்.

இச்சொல்லும் இப்போது இல்லை இச்சடங்கும் வழக்கொழிந்து போய்விட்டது. இன்னும் சில இடங்களில் தமிழர்கள் தங்கள் உறவுகளையும் உணர்வுகளையும் விடாது இதை கடைபிடிக்கின்றனர்.

ஏதோ என்னால் இயன்ற சில வார்த்தைகளை சுட்டிகாட்டியுள்ளேன் . இது ஒரு நல்ல செயல் என்பதால் இதை இன்னும் தொடரலாம என்று எண்ணுகிறேன் அதே சமயம் மூணு பேரையும் கோர்த்து விட சொல்லி இருக்கிறார் நம் தோழி . .மன்னிக்கவும் அப்படி தெரிந்த நபர் அதிகம் இல்லை என்ற காரணத்தால் என்பகுதிக்கு முற்றுப்புள்ளி . . இல்லை இல்லை நானே தொடருவேன்

Advertisements

7 comments on “வழக்கொழிந்த வார்த்தைகள்

 1. சிரம் என்றால் ‘தல’ தானே !! நீங்க அர்த்தம் சொல்லாம விட்டுடீங்க. சமீபத்த்தில் திருக்குறளை எடுத்துபடித்தேன்.. ஒரு குறளுக்கும் பொருள் விளங்க வில்லை.. தமிழே வழக்கொடிஞ்ச மொழியா போச்சு .. 😦

 2. இவ்வளவு பொறுப்பா நிறைய வார்த்தைகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. வாழ்த்துக்கள். நல்ல தகவல்.
  //ஆனாலும் பொருள் அப்பேருந்தை ஓட்டுபவருக்கும் ஓட்டுனருக்கும் தெரியுமா என்றால் சந்தேகமே
  என்று சொல்லிவிட்டு ‘சிரம்’ என்ற வார்த்தைக்கு நீங்கள் அர்த்தம் கூறவில்லையே ? ( எனக்கு தெரிந்து ‘தலை’ என்று அர்த்தம் .)

 3. ஆமா ஆமா தவறு செய்து விட்டேன் . விளக்கம் சொல்ல எழுதியவன் விளக்கம் சொல்லவில்லை என்றால் எப்படி . . .
  சிரம் என்றால் தலையேதான்

 4. //சமீபத்த்தில் திருக்குறளை எடுத்துபடித்தேன்.. ஒரு குறளுக்கும் பொருள் விளங்க வில்லை.. தமிழே வழக்கொடிஞ்ச மொழியா போச்சு .. //
  உண்மை!
  கமலா

 5. அருமை – நானும் இது பற்றிய ஆய்வில் தான் உள்ளேன் – என்னையும் கலந்து கொள்ள வேண்டுகிறேன் தோழரே , எனது மின்னஞ்சல் –

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s