ஐயோ!..வன்னியில் 4 லட்சம் தமிழர்கள் படும் பாடு!


கிளிநொச்சி: வடக்கு இலங்கையில் தமிழர்களை வீடுகளை விட்டு வெளியேற்றி அகதிகளாக்கி, காடுகள்-ரோடுகளில் அலையவிட்டு, பட்டினி போட்டு, தாக்குதலும் நடத்தி, காயமடைந்தவர்களுக்கும் நோய்வாய் பட்டவர்களுக்கும் மருததுவ வசதிகள் கிடைத்துவிடாதபடி தடுத்து, குழந்தைகளின் கல்வியையும் முடக்கி அந்த இனத்தையே சமூக-பொருளாதார-உடல் நிலை என்ற தளத்தில் வைத்து ஒடுக்கி, பூண்டோடு அழிக்கும் மாபெரும் சதித் திட்டத்தை இலங்கை அரசு அரங்கேற்றி வருவதாகத் தெரிகிறது.

உணவுக்கும், இருப்பிடத்துக்கும் அலையவிட்டு அவர்களை மனரீதியிலும் ஒடுக்கும் பெரும் பாதகச் செயல் அங்கு நடந்து வருகிறது.

வன்னியில் இலங்கை ராணுவம் நடத்தி வரும் பயங்கர தாக்குதல்களில் இதுவரை 352 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள், பெண்கள் ஆவர்.

கடந்த நான்கு வாரங்களுக்கு முன் பள்ளிகள், அகதி முகாம்கள், மருத்துவமனைகள் இலங்கை ராணுவம் கண்மூடித் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானங்களும் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன.

மேலும் இடம் பெயர்ந்த அகதி மக்களுக்கான உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் உணவு வினியோகத்தையும் இலங்கை ராணுவம் தடுத்து வருகிறது. இதன்மூலம் இந்தப் பகுதி தமிழர்களை பட்டினி போட்டு கொல்லும் நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் கடந்த 15.01.2009ம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த ஒரு வார காலமாக அங்கு உணவு வினியோகம் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இப்போது சுமார் 4 லட்சம் மக்கள் இலங்கைப் படையினரின் தாக்குதலால் முடங்கியுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உணவு இருப்பு தீர்ந்து விட்டது. மேலும் உணவு கெண்டு செல்லும் பாதையையும் அரசு மூடியுள்ளது.

இதனால் வன்னியின் இயல்பு நிலை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 4,00,000க்கும் அதிகமான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டுப் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வன்னியில் மட்டும் ராணுவ நடவடிக்கையில் இதுவரை 352 பேர் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளிச் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆவர்.

புதுக்குடியிருப்பு, விசுவமடு, தர்மபரம், முல்லைத் தீவு ஆகியவற்றின் பரப்பு 400 சதுர கி.மீ. இங்கு மொத்த ஜனத் தொகை 3,86,000. இதில் சில ஆயிரம் பேரைத்தவிர மற்ற அனைவரும் இடம் பெயர்ந்துவிட்டனர்.

இலங்கைப் படைகளின் கண்மூடித்தனமான தொடர் தாக்குதல்களால் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் முழுமையாக இடம் பெயர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குறுகிய நிலப் பரப்பிற்குள் சென்றுள்ளனர்.

400 சதுர கிமீ நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 3.7 லட்சம் மக்கள் வீதியோரங்கள், மர நிழல்கள், காடுகள், வயல் நிலங்களில் வசித்து வருகின்றனர். இவர்களிற்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. உணவு, குடிநீர், மருத்துவ வசதி, தற்காலிகக் குடிசை வசதிகள் கூட இல்லை.

மேலும் இந்த மக்கள் கூடியிருக்கும் இடங்கள், பள்ளிகள், கோயில்கள் ஆகியவற்றையும் இலங்கை விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

மழை, வெள்ளம், மலேரியா, பாம்புகள் என பலவகையான சி்க்கல்களுக்கு இடையே இந்த மக்கள் வசிக்கின்றனர்.

வன்னியின் அனைத்து விவசாய நிலங்களையும் ராணுவம் கைப்பற்றிவிட்டது. அதன் உரிமையாளர்களான தமிழர்களை விரட்டியடித்துவிட்டது.

இதனால் விவசாய உற்பத்தி, கால்நடைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மீன் பிடிப்பதைக் கூட கடற்படை தடுத்து வருகிறது.

இடம்பெயர்ந்த மக்களுக்கான உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படும் உணவு வினியோகத்தையும் ராணுவம் தடுக்கிறது.

வன்னியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் செயற்பாடும்
மேலும் விமான தாக்குதல், ராக்கெட் தாக்குதல் காரணமாக வன்னியில் உள்ள 10க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும் மூடப்பட்டுள்ளன.
மூடப்பட்டுவிட்டன.

எஞ்சியிருக்கும் வன்னியின் மிகப் பெரிய மருத்துவமனைகளான கிளிநொச்சி, முல்லைத் தீவு மருத்துவமனைகள் இடம்பெயர்ந்து தற்போது விசுவமடு மற்றும் உடையார்கட்டு பள்ளிகளில் தான் இயங்குகின்றன.

மொத்தம் 3.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட வன்னியில் 2 தாற்காலிகமாக மற்றும் ஒரு நிரந்தி்ர மருத்துவமனைகள் மட்டும் அவ்வபோது இயங்குகின்றன.

இதில் மொத்தே 10 மருத்துவர்களும், 30 செவிலிகளும் மட்டும் உள்ளனர். மொத்தப் படுக்கைகள் 250 இருந்தாலும் அவசர சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு படுக்கை தான் உள்ளது.

தற்போது ராணுவ நடவடிக்கையால் காயமடைவோர் எண்ணிககை அதிகரித்து வருவதால் இந்த மருத்துவமனைகளும் கூட ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த மருத்துவமனைகளுக்கு இலங்கை அரசு கடந்த 6 மாதமாக மருந்துகளையும் அனுப்பவில்லை.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வன்னியிலிருந்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மருத்துவமனைகளுக்கு ற்கு நோயாளிகளை எடுத்துச் செல்வது வழக்கம்.

தற்போது அவையும் அரசால் நிறுத்தப்பட்டுள்ளதால், போதிய மருத்துவ வசதி இன்றி நோயாளிகள் இறக்கும் நிலையில் உள்ளனர்.

வன்னியில் 4 லட்சம் மக்களுக்கான போக்குவரத்து, தொலைத் தொடர்பு, வங்கிச் சேவை, பள்ளிகள், உணவு வினியோக மையங்கள், வியாபார நிலையங்கள் அனைத்தும் ராணுவ நடவடிக்கையால் மூடப்பட்டுள்ளன அல்லது நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் சர்வதேச தொண்டு நிறுவனங்களையும், ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனத்தையும் வன்னியிலிருந்து இலங்கை அரசு வெளியேற்றிவிட்டது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இடம்பெயர்ந்த மக்களிற்கான நலன்களைக் கவனித்து வந்த 15க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பணி முடக்கப்பட்டுவிட்டது.

யுனிசெப், கேர், ஆக்ஸ்பேம், சேவ் த சில்ரன் போன்ற அமைப்புக்களும் வெளியேறிய நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் சிறுவர்களின் கல்வி, சுகாதாரத் திட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் மட்டும் பதிவு செய்யப்பட்ட 60,056 குடும்பங்கள் உணவு அல்லாத நிவாரணத்தினை (தமிழ்நாட்டு மக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள்) ஒரு முறை பெற்றுள்ளனர். அதன்பின்பு எதுவும் வழங்கப்படவில்லை

இதன்மூலம் தமிழர்களை வீடுகளை விட்டு வெளியேற்றி அகதிகளாக்கி, காடுகள்-ரோடுகளில் அலையவிட்டு, பட்டினி போட்டு, தாக்குதலும் நடத்தி, காயமடைந்தவர்களுக்கும் நோய்வாய் பட்டவர்களுக்கும் மருததுவ வசதிகள் கிடைத்துவிடாதபடி தடுத்து, குழந்தைகளின் கல்வியையும் முடக்கி அந்த இனத்தையே சமூக-பொருளாதார-உடல் நிலை என்ற தளத்தில் வைத்து ஒடுக்கி, பூண்டோடு அழிக்கும் மாபெரும் சதித் திட்டத்தை இலங்கை அரசு அரங்கேற்றி வருவதாகத் தெரிகிறது.

உணவுக்கும், இருப்பிடத்துக்கும் அலையவிட்டு அவர்களை மனரீதியிலும் ஒடுக்கும் பெரும் பாதகச் செயல் அங்கு நடந்து வருகிறது.

புலிகளைத் தாக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களை மேலே சொன்ன வழிகளில் அழித்துக் கொண்டிருக்கிறது இலங்கை.

இதைத் தடுக்க சில குறைந்தபட்ச நடவடிக்கைகளில் உலக சமுதாயம் இறங்க வேண்டியது அவசியம்.

1. பொதுமக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பொது நிர்வாக அலுவலகங்கள் மீதான வான்வழித் தாக்குதல்களையும் ராக்கெட் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துதல்.

2. ஐ.நா மற்றும் சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்களை இடம் பெயர்ந்தவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட அனுமதித்தல்.

3. வன்னியையொட்டிய சோதனைச் சாவடிகளைத் திறப்பதன் மூலம் காயப்பட்ட பொதுமக்களை வெளி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதித்தல்.

4. உணவு, மருந்து, தற்காலிக குடில்கள், எரிபொருள், அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வன்னிப் பிரதேசத்தை சென்றடைய அனுமதித்தல் ஆகியவையே.

இறுதியானதும் மிக முக்கியமானதுமான விஷயம், போர் நிறுத்தத்தை அமலாக்கி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயலுதல்.

இதை முன்னின்று செய்ய வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு. அதைச் செய்ய வைக்க வேண்டிய பொறுப்பு தமிழக தலைவர்களுக்கு உண்டு.

Advertisements

One comment on “ஐயோ!..வன்னியில் 4 லட்சம் தமிழர்கள் படும் பாடு!

  1. மிகவும் கவலையாக இருக்கிறது ரஜோலன். ஏதேனும் செய்ய வெண்டும் என்றிருக்கிறது .. ஆனால் என்ன என்று தெரியவில்லை. யோசித்து எதாவது செய்யலாம்.. உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் சொல்லுங்கள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s