ஜனவரி 14


 

 

எல்லா தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்

தை முதல்நாளில் இந்திய தமிழனுக்கு பொங்கல் விழா தொலைக்காட்சி களால் இனித்தது எனலாம் அந்த அளவிற்கு தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் அமைந்தது. வீடுகளில் காலை பொங்கல் வைக்கும் சமயம் எல்லாரும் தலை காட்டிவிட்டு தொலைக்காட்சியில் புகுந்து கொண்ட காட்சிகள் பல இடங்களில்

 

தலைவர்கள் வாழ்த்துக்கள் வித்தியாசமானவை ஆட்சி பீடத்தில் இருப்போர் ஒருவிதமாகவும் எதிர்கட்சியினர் ஒருவிதமாகவும் வாழ்த்து சொல்லிம் நாகரீகம் நம் தமிழ் நாட்டுக்கு மட்டும்தான். இப்படி வாழ்த்து பெறத்தானே தமிழன்.

 

ஒருபக்க குண்டுமழைகளால் துன்புறும் தமிழனும் பொங்கல் கொண்டாட உரிமையுள்ளவன் தானே என்று சின்னபிள்ளைத்தனமாக நான் கேட்டு யாரும் கோபம் கொள்ள வேண்டாம்.

 

இனி அடுத்த செய்தி . . .தமிழ்நாட்டுக்கு இன்று பொங்கல் என்றால் கடந்த வாரத்தில் ஒரு பகுதியில் பொங்கலோ பொங்கல். . என்ன செய்ய திருமங்கலம் மட்டும் இரண்டு முறை பொங்கல் கொண்டாடுகிறது. அதிலும் வெற்றி பெற்ற கட்சிக்கு மகிழ்ச்சி தோல்வியை சந்தித்தவர்களுக்கோ இழப்பு ஒன்றுமில்லை ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் இன்னும் விமர்சனம் செய்ய தவறுவதில்லை.. மக்கள் தந்த தீர்ப்பு என ஒருவரும் வாங்கிய வெற்றி என ஒருவரும் . . . பகடைக்காய்களாக தமிழன்

 

எப்படி இருந்தாலும் தோல்வியை தழுவிய தொகுதியில் வெற்றிகனி பரித்த அல்லது வெற்றியை பெற்று தந்தது அழகிரியின் உழைப்பு என்பதில் சந்தேகம் இல்லை கட்சியில் செல்வாக்கு வழந்து வரும் அழகிரிக்கும் காத்திரு கட்டளை வரும் என கருணாநிதி கூறியிருப்பது ஸ்டாலினை யோசிக்க வைக்குமா இல்லை சுமூகமாக முடியுமா . தொடங்கிற்று அடுத்த ஆட்டம்

 

இனி அடுத்தது இந்தியாவின் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் என பெருமை கொள்ளும் விஜயும் சரி பிரபுதேவாவும் சரி இன்னும் போக்கிரிகளாக திரிந்தால் எப்படி. எது எப்படி இருந்தாலும் ஜேம்ஸ்பாண்டின் கடைசி படம் ஊத்தியது போல் இல்லாமல் இருந்தால் சரி என்கிறார் நம்ம நண்பர் ஒருவர்

 

மீனும் கடலும் போல என்று சொல்லும் அளவிற்கு அன்புமணி புகையை விடமாட்டேங்கறார். என்ன செய்ய மத்தவங்க இன்னும் விடமாட்டேங்கறாங்களே. புகையை பிடிக்காதீங்க அது நம் உடமை இல்லை என்பதை பொங்கல் போகியில் எரிக்காமல் இருங்க இல்லைன்னா உங்களை எரிக்க வேண்டி வரும்.

 

லண்டனில் இருந்து சென்னையில் நடைபெற்ற வெளிநாட்டு இந்தியர் மாநாட்டுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் அறிந்ததே அடுத்ததாகவும் ஒரு மிரட்டல் லண்டனில் இருந்து அதுவும் கோவை மதுரை திருச்சி விமான நிலையங்கள் தகர்ப்போம் என மிரட்டல். இது குறித்த விசாரணை மேற்கொள்லப்பட்டு வருகிறது.

 

அடுத்த எந்திரன் செய்தி . .எந்திரன் ரீலிஸ் ஆகும்வரை இதுபோல் ஏதேனும் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கும் இப்ப கிடைத்த செய்தி புதிய வில்லன் டேனியை பற்றியது வடக்கே நல்ல பெயர் பெற்ற இந்த வில்லன் எந்திரனின் சேர்ந்திருப்பது இன்னும் எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

 

மகிழ்ச்சியான செய்தி நம் இசைப்புயலுக்கு கிடைத்த விருது. ஆஸ்காருக்கு அடுத்த விருதான கோல்டன் குளோப் விருது சதாரணமானதும் இல்லை அதை வாங்கிய ரஹ்மானும் சாதரணவர் இல்லை சினிமா உலகத்துடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்

 

மீண்டும் சந்திக்கும்வரை

Advertisements

One comment on “ஜனவரி 14

  1. நண்பரே பொங்கல் வாழ்த்துக்கள்.
    நான் ஒரு தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். பார்த்தீர்களா?
    உங்கள் பங்களிப்பை தர மீண்டும் அழைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s