சில நகைச்சுவைகள் 3


நானும் என் மனைவியும் அதிக ஹியுமர் சென்ஸ் எனப்படும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் அப்படித்தான் ஒரு நாள் கடைவீதியில் போய்ட்டு இருக்கும் போது என் மனைவியின் உறவினர் ஒருவர் வேகமாக போய்ட்டு இருந்தார் உடனே நான் அவகிட்ட எங்க இப்படி போறாருன்னு கேட்டதுக்கு அவள் என்னிடம்

அவர் அப்படித்தான் , “எப்ப கோயிலுக்கு போனாலும் பாய்ந்து பாய்ந்துதான் போவார்”..னு சொல்ல எனக்கு ஆச்சர்யமா போச்சு
ஏன்? கேட்டேன் அதுக்கு அவள் சொன்னாள்
”ஏன்னா அவர்தான் பக்திமான் ஆச்சேன்னு” என்ன செய்ய என் தலை விதி.

இப்படி கடித்த என் மனைவி எங்க டெல்லி மாமாவ பத்தி இப்படி கேட்டா … “உங்க மாமா டெல்லியில் என்னவா இருக்காரு..?” ன்னு பதிலுக்கு நானும் கடிக்க வேண்டாமா அதனால “அங்கேயும் எங்க மாமாவாதான் இருக்காரு” ன்னு கடிச்சேன்

இந்த பெண்களுக்கு அடுத்த வீட்டு கதைன்னா உயிராச்சே என் மனைவியும் விடுவாளா என்னங்க உங்களுக்கு விசயம் தெரியுமா நம்மா எதிர்வீட்டு கலா இருக்காளே அவளுக்கும் அவ மாமியாருக்கும் இன்னைக்கு காலையிலே பயங்கர சண்டைன்னா எதுக்குன்னு கேட்டா அவ மாமி காலையிலே “இன்னையிலிருந்து சண்டையே போடவேண்டாம்னு” சொன்னாளாம் அதுக்கு இவ நாளையிலிருந்து சண்டை போட வேண்டாம்னு சொல்ல அதுவே பெரிய சண்டையா போச்சு. .

இதாவது பராவயில்லைம்மா இன்னைக்கு நம்ம ஆபிஸுக்கு டீ கொண்டுவருவானே அவன் கடையிலே பயங்கர சண்டை என்னன்னு விசாரிச்சா அவன் கடையில் உள்ள டெலிபோன்ல ஒருத்தன் நாலு கால் பண்ணிட்டு ஒரு ரூபாயை கொடுத்திருக்கான் நாலு காலுக்கு நாலு ரூபாய் கேட்டா அதுக்கு அவன் நாலு கால் ஒன்னுதானேன்னு சண்டை போட்டுருக்கான் என்னத்த சொல்ல

அதவிடுங்க இங்க பாத்தீங்களா நம்ம கல்யாண நாள் அதுமா நான் என் கல்யாண புடவை கட்டிகிட்டு கோயிலுக்கு போகும்போது நம்ம அடுத்த வீட்டு சுதா “ என்ன ஜெமி இது உன் கல்யாண புடவையான்னா” நானும் பதிலுக்கு “ ஆமா பாத்தியா நான் இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். . . நீ” ன்னு கேட்டேன். அதுக்கு அவ தெனாவட்டா சொல்றா “பாத்திரமா வச்சிருக்கேன்” னு

சரி சரி கடிக்கிற சாக்குல கல்யாண நாள நியாகபடுத்திட்டாளே சினிமாவுக்கு கூட்டிட்டு போனேன். டிக்கெட் எடுத்து உள்ளே போனா “சி ரோ” வேண்டாங்கன்னா ஏம்மான்னு கேட்டேன் அதுக்கு சொன்னா பாருங்க ஒரு பதில் “ சி ரோல இருந்து படம் பாத்தா படம் தெரியாதுங்க” என்னடா இது வம்பா போச்சுன்னு விபரம் கேட்டா “அதான் முன்னாடி பீ ரோ இருக்குதுல்லன்னு. என்ன செய்ய . .

அவளவிட படம் பயங்கர கடி அதனால் என் மனைவிகிட்ட ஒரு ஜோக் சொன்னேன் அது இதுதான்

ஒரு சர்தார்ஜி ஒரு நாள் கடை வீதிக்கு சென்று இருந்தார். அவருடன் அவரது 2 வயது பெண்ணும் சென்று இருந்தார். அப்போது அவர் குழந்தை, தனது எடையய் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. மேலும் ஒரு ரூபாய் நாணையத்தையும் தானே போடுவேன் என்று பிடிவாதம் பிடித்தது. ஆனால் குழந்தைக்கு உயரம் இல்லாததால் அந்த குழந்தையால் நாணையத்தை போட முடியவில்லை. அதை பார்த்த நம்ம சர்த்தார்ஜி குழந்தையை தூக்கி பிடித்து கொண்டார். குழந்தையும் நாணையத்தை போட்டது.
உடனே ஒரு கார்டு வந்து விழுந்தது.
எடை 0 என்று.

மீண்டும் சந்திக்கிறேன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s