என் இளைஞன் சுயநலவாதியா?


 

உழைப்பு என்பது சிறப்பானதுதான் என்றாலும்  குடும்பம் என்ற இனிமையான கூட்டுக்குள் கும்மாளம் அடிக்க வேண்டிய வயதில் குடும்பம் விட்டு, வீடு விட்டு, நாடு விட்டு, இளமையை அனுபவிக்க முடியாத வகையில் இனிமையை இழந்து, வாழ வேண்டிய வாழ்க்கையை இழந்து, உழைப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் என் இனிய தமிழ் இளைஞர்களின் தியாக உணர்வுக்கு என் தலையாய வணக்கம்

 

உழைக்கத்தான் என்றாலும் தினமும் காலையில் எழுந்து ஆற்றில் குளித்து காலை உணவுக்கு பழைய கஞ்சியும் பச்சை மிளாகாயும் சாப்பிட்டு தயிர்சாதம் கட்டி கூலி வேலைக்கு போகும் என் சகதமிழன் அனுபவிக்கும் சந்தோசம் உண்டுமா என்றால் இல்லை என்பதுதானே உண்மை.

 

இன்றைய சமுதாயம் காணும் இளைஞர்கள் குறிப்பிட்ட காலம் வரும்வரை குட்டிசுவர்களில் அமர்ந்து கன்னிகளுக்கு கணை வீசினாலும் புட்டிகளை திறந்து பார்ட்டி கொண்டாடினாலும் வயதும் பொறுப்பும் வரும் நாட்களில்

உறவுக்காக உடன் பிறப்புக்காக குடும்பத்திற்காக என சுயநலம் இல்லாமல் உழைக்கும் என் இளைஞனுக்கு இறுதியில் கிடைப்பது என்ன?

முறையான வழியில் கம்பெனி தேர்வு நடத்தி வெளிநாட்டுக்கு போகும் படித்த பட்டதாரிகளும் கணிணி துறை நண்பர்களுமே இதை குறித்து வேதனைப்படும் நிலையில் சதாரண நிலையில் முகவர்கள் வழியாக விசா பெற்று வெளிநாடுகளுக்கு குறிப்பாக அனல் கொதிக்கும் அரபு தேசங்களில் கட்டுமான பணிக்காக வரும் என் இளைஞன் அடையும் வேதனை எத்தனை வலிமையுடையாதாக இருக்கும்

 

இரண்டு வருட இடைவெளியில் கிடைக்கும் 45 நாட்கள் விடுமுறையில் திருமணம் முடித்து மனைவி என்ற உறவை உணர்ந்தும் உணராமல் வரும் அவன் வேதனை அந்த இளம் மனைவி விடும் பெருமூச்சின் வெப்பம் அந்த சூரியனையும் சுட்டுவிடும் என்பது தெரிந்ததுதானே.

 

அதே நிலையில் புது மனைவியும் வீடும் ஓட்டிக்கொண்டால் வேதனை அளவு குறையும் முட்டிகொண்டால்? இத்தனை கஷ்டங்களையும் வேதனைகளையும் தாண்டி உழைத்து உழைத்து கிடைக்கும் பணத்தையும் குடும்பத்துக்கு அனுப்பி வெறும் தொலைபேசியில் குடும்பம் நடத்தும் பலரும் வாழ்வது அந்த தொலைபேசி தருணங்களுக்காகத்தான்.. அதிலும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கிடைக்கும் அந்த விடுமுறை நாட்கள்தாம் அவர்களுக்கான நாட்கள் அதிலும் எத்தனை எத்தனை பிரட்சனைகள் சந்திக்க வேண்டி உள்ளது.

 

தனிமையில் தவிக்கும் இவர்கள் இப்படி என்றால் குடும்பத்துடன் இருக்கும் நண்பர்கள் நிலையோ கொஞ்சம் பரவாயில்லை ரகம்தானே அன்றி முழு சந்தோசம் அங்கு இருக்கும் என்பது நிஜம் அல்ல.

 

குடும்பம் என்பது கணவனும் மனைவியும் மக்களும் மட்டுமே என்ற மனநிலை இன்னும் நம் தமிழனுக்கு வந்து விடவில்லை. எனவே அவனுக்கு அம்மாவும் அப்பாவும் வேண்டும் தங்கைகளும் தம்பிகளும் வேண்டும் அக்கா அண்ணன் சித்தி சித்தப்பா என உறவுகளும் அவர்களின் விசேசங்களும் திருவிழாக்களும் சந்தோச தருணங்களும் துக்கத்தில் தோளும் வேண்டும் அவை அனைத்தையும் விட்டு தனியே வசிக்கும் எவருக்கும் அது சந்தோசமா???

 

நாட்டில் தனிக்குடித்தனம் இருப்பவர்கள் கூட வாரத்தில் ஒரு முறை இன்னும் சில வீடுகளில் தினமும் தங்கள் உறவுகளை பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அவர்களின் லாபநட்டத்தில் பங்கு கொள்ளும் சந்தோசம் இருக்கிறது. அதிகமாக அன்பு செய்ய ஒரு குழந்தையின் விசேச காரியங்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து சொல்லும் இயல்பு நாளடைவில் பாசம் என்ற பந்தத்துக்கு வேலியாக வந்து விடாதா?

 

பிரியப்பட்ட ஒரு வரை இழந்து தவிக்கும் சமயத்தில் தனியே அமர்ந்து அழும் அந்த சூழ்நிலை எத்தனை மோசமானது. 

 

இதில் இன்னும் வேதனை என்ன என்றால் அடுத்த தலைமுறைக்கான படிப்பினைகள் இவையாக இருந்துவிட்டால் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் அவர்களுக்கு குடும்பம் என்றால் என்ன என்று தெரியுமா? உறவுகள் பழகுமா? பயமாக இருக்கிறது.

 

பழையன போல் எல்லாம் இருக்க வேண்டும் என்று பிரியப்படுபவனல்ல நான் புதியதை வரவேற்ப்பதோடு மட்டுமல்லாது புதியனதான் நல்லது மாற்றங்கள்தான் வளர்ச்சிக்கு நல்லது என சிந்திப்பவன் நான். ஆனால் மாற்றம் என்பது எதில் வேண்டும் என்பதில்தான் பிரட்சனை.

 

குடும்பம் என்பதிலோ சமூகம் என்பதிலோ மாற்றம் தேவையில்லாதது உன் வளர்ச்சியில் வேண்டும் மாற்றம். அத்தகைய மாற்றம் வெளிநாட்டில் வாழும் என் தமிழ் இளைஞனால் ஏற்படும் போது அவன் இழந்து தவிக்கும் அத்தனை சந்தோசங்களையும் அவனுக்கு கிடைக்கும் அந்த 45 நாள் விடுமுறையில் கிடைக்க முயற்சிக்க வேண்டியது அந்த குடும்பமே. .

 

வீடுகட்டும் பணியாகட்டும் செலவுகணக்காகட்டும் குடும்ப பிரட்சனையாகட்டும் எதுவானாலும் மனது கலங்க கூடிய அளவில் இல்லாது பார்க்க வேண்டியது குடும்பத்தின் கடமை அல்லவா.

 

எனவே விடுமுறையில் வரும் அவனுக்கு எந்த விதத்திலும் சிறு மனத்தாங்கல் வராத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது மனைவியும் குடும்பமுமே அதை சரியாக கடைபிடித்தால் அவனுக்கு அடுத்த இரண்டு வருடங்களுக்கு அந்த நினைவுகள் புத்துணர்ச்சி தந்து கொண்டிருக்கும். அந்த புத்துணர்ச்சியோடு அவன் இன்னும் உங்களுக்காக உழைக்க முடியும்.

 

சந்தோசத்தை அடகு வைத்து சம்பாதிக்கும் மகனுக்கு தம்பிக்கு அண்ணனுக்கு கணவனுக்கு அவன் தரும் பணத்தால் சந்தோசத்தை மீட்டு கொடுக்க வேண்டியது குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையல்லவா. .

 

கடமையை இதயத்திலும் அன்பை முகத்திலும் வைத்து காத்திருங்கள் அவன் வருகைக்காய். . . .

Advertisements

One comment on “என் இளைஞன் சுயநலவாதியா?

  1. //சந்தோசத்தை அடகு வைத்து சம்பாதிக்கும் மகனுக்கு தம்பிக்கு அண்ணனுக்கு கணவனுக்கு அவன் தரும் பணத்தால் சந்தோசத்தை மீட்டு கொடுக்க வேண்டியது குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையல்லவா. .

    வெளி நாட்டில் வாழும் நிறைய பேர் ஆசையுடன் ஊருக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்புவதை நானும் பார்த்துக்கிறேன். நல்ல பதிவு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s