விவாகரத்து ஏன்?


நேற்று விடுமுறை என்பதால் நானும் என் மனைவிக்கு உதவியாக சமயலறையில் சின்ன சின்ன வேலைகளை செய்து கொடுத்து கொண்டிருந்தேன். அப்போது என் தலைமுடி அதிகம் வளந்திருப்பதாக சொன்ன என் மனைவி அதை வெட்டிக்க போகும் படி கூற பதிலாக நான் என் மீசையையும் எடுக்கலாம் என்று இருக்கிறேன் என்றேன்.படாரென மீசையை எடுத்திட்டீங்கன்னா டைவர்ஸ் பண்ணிடுவேன் என்றாள் என் மனைவி

இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை இன்றைய சமூகத்தில் நடக்ககூடிய சதாரணவிசயம் தான் இது இல்லையா. விவாகரத்து என்பது என்ன காரணத்திற்காக அல்லது எதனால் என்பது குறித்த முழுமையான அறிவில்லாமையா அல்லது விவாகரத்து என்பது ஃபேஷானா என்ற குழப்பநிலைதான் இன்றைய சமூகத்தின் நிலை. இது குறித்த பல கட்டுரைகள் படித்திருந்தாலும் என் கருத்தை உங்களுக்காக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

மற்ற மேலை நாடுகளையோ கீழை நாடுகளையோ நாம் எடுத்து கொள்ள வேண்டாம். நம் கலாச்சாரமிக்க வரலாறுமிக்க தழிகத்தின் நிலையை வைத்தே விவரிக்கலாம் என்று நினைக்கிறேன்.

முந்தைய காலகட்டத்தில் நம் சமூகம் என்பது நல்ல பல பழக்கவழக்கங்களை கொண்டிருந்தது அது இன்னும் கடைபிடிக்க படுகின்றன என்பதில் உடன்படுபவன் நான். இல்லை அதில் மாற்றம் வந்துவிட்டது என்று கூச்சல் போடும் கூட்டத்தில் நான் இல்லை.

மாற்றம் என்பது தேவையாகிறது. மாறுதல் என்பது அவசியமாகிறது. மாற்றம் ஏற்ப்பட்டது குற்றமல்ல மாறாதது தான் குற்றம் என்பேன் நான்.

பெண்கள் என்று வீட்டு நிர்வாகத்திலிருந்து நாட்டின் நிர்வாகம் வரை வளர்ந்தார்களோ அன்றே மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் மாறினார்கள் சமூகம் மாறியது நாம் வளர்ந்தோம் இன்னும் வளர்கிறோம். ஆனால் இங்கேதான் குளறுபடி இருக்கிறது. பெண்கள் வளர்ச்சி என எதை நினைத்தார்களோ அதை அவர்கள் சரிவர செய்தார்களா என்ற கேள்விக்கு விடை தேடும் போது. என்ன பதிலை நான் சொல்ல.

முந்தைய காலகட்டத்தில் மறைமுகமாக நிர்வாகம் செய்த அவர்கள் இன்று நேரடியாக நிர்வாகத்தில் வரும் போது அதை சகித்து கொள்ள இயலாமல் நிற்கிறார்கள் ஆண்கள். மாற்றம் வளர்ச்சியில் மட்டும் வரவில்லை மாறாக எல்லா விசயங்களிலும் மாற்றங்களை புகுத்த நினைத்தனர் பெண்கள் அதனாலே இத்தனை குழப்பமும். எல்லாத்திலும் மாற்றம் ஏற்றக்கொள்ள கூடியது அல்ல. மாறவேண்டியவற்றில் மாற்றம் வேண்டும். வளர்ச்சி வேண்டும்.

இப்படி எல்லா விசயங்களிலும் மாற்றத்தை எதிர்பார்த்த பெண்கள் மாறாமல் இன்னும் ஒரே இடத்தில் நிற்கும் ஆண்களை வெறுக்க நினைக்கின்றனர். இங்கேதான் ஆண் பெண் உறவில் விரிசல் விளைகிறது. பெண் மாறும்போது ஆண் மாறாமல் இருந்தால் அங்கே பிரட்சனை வருகிறது.

வேலைக்கு சென்ற ஆண் இரவு பத்துமணி தாண்டி வரும்போது அங்கே கோபப்படுவது ஆண் தானே. ஏன் லேட் என மனைவி கேட்டால் என்ன ஒரு எரிச்சல் மனுசன் ஓவர்டைம் அது இதுன்னு தலைவலில வீட்டுக்கு வந்த இங்கே அடுத்த தலைவலி என்று கோபப்படுகிறான் அதே சமயம் 6 மணிக்கு வர வேண்டிய மனைவி 8 மணிக்கு வந்தால் என்ன ஆகும் அங்கே சற்று யோசித்து பாருங்கள். இங்கேதான் வித்தியாசம் பெண் மாறிவிட்டாள் அவள் இப்போது ஏன் லேட் என கேட்பதில்லை மாறாக புரிந்து கொண்டாள். அந்த தலைவலிக்கான மருந்தாக இருக்க முயற்சிக்கிறாள்.ஆனால் ஆண் தன் சிந்தனைகளை பல திசைகளுக்கு அனுப்புகிறான்

முன்பு பெண்கள் வளராத போதும் இப்போது வளர்ந்து விட்ட போதும் குடும்பம் என்ற கூட்டில் முக்கிய பங்கு அவர்களுக்குத்தான். (சில கெட்ட பெண்களை என் கருத்துகளில் சம்மந்தபடுத்தாதீர்கள். அதேசதவிகிதம் கெட்ட ஆண்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கு அல்ல இந்த கட்டுரை) எனவே மாற்றம் அவர்களை மாற்றாது. மாறாமல் இருக்கும் ஆண்கள் மாற வேண்டும்.

என் தந்தைதான் சம்பாதித்தார் கடல்கடந்து சவூதி அரேபியாவுக்கு சென்று பணம் உண்டாக்கினார். ஆனால் அதுவரை சராசரிக்கும் கீழே வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் குடும்பத்தை இன்று எங்கள் ஊரில் சொல்லக்கூடிய குடும்பத்தில் ஒன்றாக மாற்றியமைத்தது எங்கள் அம்மாதான். ஒரு ரூபாயையும் வீணாக செலவு செய்ததில்லை என் அம்மா. அதுபோல் பணம் குறித்த எந்த கேள்வியும் கேட்டதில்லை எங்கள் அப்பா. நானும் இரண்டு தங்கைகளும் நன்றாகவே வளர்ந்தோம் நல்ல இடங்களில் திருமணம் நல்ல துணை என எங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையக்காரணம் எங்கள் அம்மாதான். அவர்கள் தந்த படிப்பினையில் பிள்ளைகளும் திறம்பட குடும்பத்தை வழி நடத்த உதவுகிறது.

சிறப்பான குடும்பம் அமைவது மனைவி அதாவது பெண்கள் கைகளில் உள்ளது என்றாலும் அவர்களுக்கான முழு அளவிலான ஆதரவை கணவன் அதாவது ஆண்கள் தரும்போது அங்கே வளர்ச்சி என்பது மட்டுமே உண்டு.

மாறாக ஒன்றுக்கொன்று மாற்றத்தில் மாறுபாடு ஏற்படும் போது அங்கே நிச்சயம் மாற்றம் உண்டு ஆனால் அது குடும்ப மாற்றமாக அதாவது ஒரு குடும்பம் இரண்டு குடும்பமாக பிரியும் என்பதை சொல்ல விரும்புகிறேன்.

அதே சமயத்தில் மாற்றத்தில் மாறுபாடு காட்டாது ஒன்றான மாற்றமாக இருக்குமே ஆனால் அங்கே வளர்ச்சியில் என்பதில் மட்டுமே மாற்றம் ஏற்படும். அது இன்னும் உயரத்தில் உங்களை இருக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே மாற்றம் அவசியம் ஆனால் அது ஆணூம் பெண்ணும் விரும்பும் ஏற்றுக்கொள்ளும் புரிந்துகொள்ளும் மாற்றமாக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

பின் குறிப்பு: நான் மீசையை எடுக்கவில்லை

Advertisements

One comment on “விவாகரத்து ஏன்?

  1. //நான் மீசையை எடுக்கவில்லை
    மனைவி பேச்சை கேட்பவர்கள் ஒரு நாளும் கைவிடபடுவதில்லை.

    கட்டுரை ரெம்ப எளிமையாக கருத்துள்ளதாக இருந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s