பொங்கல் பண்டிகை.


 

 தை பிறந்தால் வழி பிறக்கும்

 மிழகம் போலவே வெளி மாநிலங்களிலும் வெவ்வேறு பெயரில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் `லோகிரிஎன்ற பெயரிலும் அஸ்ஸாம், மணிப்பூர் மாநிலங்களில் `போகாலி- பிஹூஎன்ற பெயரிலும் அறுவடைத் திருவிழாவாகப் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். “தை பிறந்தால் வழி பிறக்கும்என்பது தமிழ்ப் பழமொழி. இந்தப் பழமொழி எப்படி வந்தது?வயல்களில் பயிர் வளர்ந்து இருக்கும்போது, வரப்புகளில் சாய்ந்து கிடக்கும் அதனால் வரப்பில் யாரும் நடந்து செல்வது கஷ்டம். கார்த்திகை, தை மாதம் பிறக்கும்முன் அறுவடை முடிந்துவிடும் என்பதால், வரப்புகளில் எளிதில் நடந்து செல்லலாம்.அதேபோல் அறுவடை முடிந்த வயலில் வண்டிகள் போகும்; வரும் என்பதால், வண்டிப் பாதைத் தடத்தை மக்கள் – ஒற்றையடிப் பாதையாகப் பயன்படுத்துவர். இவ்வாறு புதிய, குறுக்குப் பாதை வழி பிறக்கும்.மார்கழி மாதத்தில் தெருவை அடைத்துப் பெரிய பெரிய கோலங்கள் போட்டிருப்பார்கள். கோலங்களை அழித்து விடக் கூடாது என்பதற்காகத் தெருவில் தாண்டியும், ஒதுங்கியும், ஓரமாகவும் நடக்க வேண்டியிருக்கும். தைபிறந்ததும் பெரிதாகக் கோலம் போடுவது நிறுத்தப்பட்டுவிடும். எனவே, தெருவில் எளிதாக நடக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் தைபிறந்தால் வழி பிறக்கும்என்றார்கள். இப்படியெல்லாம் சிலர் செல்கிறார்கள்.

 சூரியனின் தேர்ப்பாதை வடதிசையில் மாறும் உத்தராயண காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள். இது மிகவும் புண்ணியமான காலம் என்று புராணங்கள் சொல்கின்றன. உயர்வான இந்த மாதத்தில் பல தலங்களில் சிறப்பான பூஜைகள் குறித்த சிறு விவரம்  இதோ:

யிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் தைத் திங்கள் முதல் நாளான மகர சங்கராந்தியன்று சந்திரசேகர சுவாமி திருவீதி உற்சவம் நடைபெறும். மறுநாள் மாட்டுப் பொங்கலன்று கற்பகாம்பாள் கன்னி உற்சவமும், காலையில் அம்மனுக்குக் குளக்கரையில் அபிஷேக அலங்காரமும் ஆராதனையும் திருவீதி உற்சவமும் நடைபெறும். மாலையில் சந்திரசேகர சுவாமி பரிவேட்டை உற்சவம் நடைபெறும்.

த சப்தமி அன்று சந்திரசேகர சுவாமி ரதத்தில் எழுந்தருளி, மேலண்டைக் குளக்கரையில் தீர்த்தவாரியும், பின்னர் திருவீதி உற்சவமும் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமைகளில் கற்பகாம்பாள் பிராகார உலா நடைபெறும்.

தேவ குருவான பிரகஸ்பதி பூச நட்சத்திரத்திற்கு உரியவர். அறிவுக் கடவுள் என்று அவர் போற்றப்படுகின்றார். எனவே, பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி அமையும் மாதமான தை மாதத்தில் தைப்பூச தினத்தன்று புண்ணியத் தீர்த்தங்களில் நீராடினால், அறிவாற்றல் வளரும் என்பது ஐதிகம்.

யிலை கபாலீசுவரர் கோயிலில் தைப்பூச நாளையொட்டி முதல்நாள் சந்திரசேகர சுவாமி தெப்போற்சவமும், இரண்டாவது மூன்றாவது நாட்கள் சிங்கார வேலர் தெப்போற்சவமும் நடைபெறும்.

துரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தெப்பத்திருவிழா பன்னிரு நாட்கள் நடைபெறும். எட்டாம் நாள் வலை வீசுதலும், பத்தாம் நாளில் தீர்த்தமும், தெப்பந் தள்ளுதலும், 11-ம் நாள் கதிரறுப்பும், 12-ம் நாள் தெப்பமும் மிகச் சிறப்பாக நடைபெறும்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் ராமதீர்த்த தெப்பக் குளத்தில் தெப்பத் திருவிழாவும், கடைசி செவ்வாய்க் கிழமை பிடாரியார் பெருவிழா முதல் காப்பும், முழு நிலவு நாளன்று தேன் வழிபாடும் நடைபெறுகின்றன.

ஷ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் நடக்கும் திருத்தேர் உற்சவம். இதை வீர பூபதி உடையார் என்பவர் 1413_இல் தொடங்கி வைத்ததால், பூபதி திருநாள் என்றே பெயர்.

மயபுரம் மாரியம்மன்  தைப்பூசத்தன்று மாரியம்மன் வட திருக்காவிரிக்கு எழுந்தருளி, அண்ணனாகிய ரங்கநாதரிடமிருந்து பட்டாடை, பரிவட்டம் மற்றும் சீர்வரிசைகளைப் பெற்றுத் திரும்புகிறாள்

 பால் பொங்கட்டுமே

 

 

பால் பொங்கியாச்சா!

இந்தக் கேள்வியைக் கேட்டாலே போதும். உடனே சொல்லிவிடுவீர்கள், அன்று பொங்கல் திருநாள் என்று!அன்றைய தினம் அந்தக் கேள்வி கேட்கப்படுவது, ஆயிரமாயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது.சூரியனின் உதவியால் பயிர்கள் செழித்து நாடும் வீடும் வாழ, வழி பிறக்கிறது என்பதால், ஆதித்தனுக்கு அன்போடு நன்றி சொல்லும் நாளாகவே ஆரம்பமாகி இருக்க வேண்டும் பொங்கல் திருநாள்.உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் உயர்வான கோட்பாடு உடையவர்கள் தமிழர்கள். அந்த வகையில், தங்கள் செயல்களுக்கு உதவிடும், உறுதுணையாக இருந்திடும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆண்டுக்கு ஒரு நாளைத் தேர்வு செய்து கொண்டாடியதே மாட்டுப் பொங்கல்.தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தென் திசையில் பயணிக்கும் சூரியன், வடதிசையில் தன் தேரின் திசையை மாற்றும் நாள் ஆரம்பமாவது தை மாதத்தில்தான். ஆறுமாத காலம் ஒரு பகுதிக்கு மட்டுமே கிடைத்த சூரியனின் முழு கிரணப் பலன்கள் தைமாதம் முதல் அடுத்த பகுதிக்குக் கிடைக்க ஆரம்பிக்கும் என்பதால் தைபிறந்தால் வழிபிறக்கும் என்றார்கள். அதுமட்டுமல்ல, சுபகாரியங்களைத் தொடங்கிட உகந்த மாதமாக தைமாதம் கருதப்படுவதால், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள், புதிய பணிகள் தொடங்கப்பட்டு வாழ்வில் உயர நல் வழிபிறக்கும் என்றும் சொன்னார்கள்.சரி… இதிலே எங்கே வருகிறது பால் பொங்கல்?பயிர்கள் முளைத்தாலும் கதிர்களில் பால்பிடித்தல் நடந்தால்தான் அறுவடையில் பலன் அதிகம் கிட்டும். அதனால், செழிப்பான அறுவடை கிடைத்ததா என்று கேட்க, பால் பெருகிற்றா? என்று கேட்டார்கள்.அடுத்து, சுப நிகழ்ச்சி எதுவானாலும் முதல் செயலாக, பாலைக் காய்ச்சுவதில்தான் ஆரம்பிப்பார்கள். (கிரகப்பிரவேசம் ஞாபகம் வருகிறதா?). அதனால், உங்கள் வீட்டில் இனி சுப நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பிக்கட்டும் என்பதற்காக பால்பொங்கிற்றா? என்று கேட்டு நல்ஆசி சொன்னார்கள்.உடல் ஆரோக்யமாக உள்ளவர்க்கு முழுமையான உணவு, பால். அதனால் உங்கள் ஆரோக்யம் சிறப்பாக இருக்கட்டும் என்பதாகவும் அப்படிக் கேட்டார்கள்.சிறப்பான அறுவடைக்கு அடையாளமாக, அரிசி, பருப்பு; மகிழ்ச்சிக்கு அடையாளமான வெல்லம்; ஆரோக்யமாக இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கும்விதமாக கரும்பு; மங்களங்கள் நிறைந்திருக்கின்றன எனச் சொல்லும்விதமாக மஞ்சள் என்று எல்லாம் இடம்பிடித்து பொங்கலோ பொங்கல் எனக் குரல் எழும்பும் இடத்தில், மகிழ்ச்சியும் மங்களமும் பொங்குவதாகத்தானே அர்த்தம்? அந்த வகையில் உங்கள் வீட்டிலும் தைத் திருநாளில் பால் பொங்கட்டும்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s