ஒரு மழைநாளில்


சூரியன் தன் கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்காக அந்த அதிகாலை சோர்வை முறித்து எட்டிப்பார்த்தான், வீட்டிலிருந்து வெளிவந்த என் நாக்கின் நுனியில் இருந்த அம்மா போட்டு தந்த காப்பியின் மணம் ருசியை மீண்டும் சுவைத்தேன். வழக்கமாக தரும் முட்டையை அம்மா இன்று தரமாட்டார் காரணம் இன்று வெள்ளிக்கிழமை. எனக்கு ஓரளவிற்கு விபரம் தெரிந்த நாள் முதலே எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை சைவம்தான் உணவு. பலருக்கும் அது சகஜமானதாக இருந்தாலும். பிரியாணி வைத்தால் கூட கருவாடு கேட்கும் பரம்பரை அல்லவா நாங்கள் (எங்கள் ஊர் மக்கள் அனைவரும்). மீன் என்பது இரத்தம் போன்றது. மீன் இல்லாத சாப்பாடு எங்கள் ஊரில் இல்லை எனும் அளவிற்கு மீனோடு உறவாடுகிறோம் அப்படி ஒரு ஊரில் வெள்ளிகிழமை சைவம் என்பது சற்று கடினமானது தான். அதிலும் சில வேளைகளில் திருமண வீடுகள் வெள்ளிகிழமை வந்து விடும் அன்று திண்ணாட்டம்தான் காரணம் பிரியாணி சாப்பிட ஆசை இருக்க அதை அடக்க என் ஒரு புறம் தவிக்கும் போது திருமண வீட்டார் சாப்பிடாமல் போனால் சண்டையிடும் அளவிற்கு பேசுவார் என்ற பயமும் இருக்கவே செய்யும். இப்படி பல தடைகளையும் தாண்டி சைவத்தை அம்மா கடை பிடித்தார்கள். சரி விசயத்திற்கு வருவோம் காலை சூரியனின் கதிர்கள் உடம்பில் பட கடற்கரையில் ஓடுவது வழக்கம். ஓட்டம் என்றால் கடல் மணலில் ஓட்டம் கால்கள் புதையும் வெளிவரும் என சிக்கலான ஓட்டம். ஓடும் போதே கவனித்தேன் வானம் சற்று முறைத்து கொண்டிருந்தது. மழை வருமோ என நினைக்கையிலே வழக்கத்தை விட சற்று அதிக குளிர். இருந்தாலும் ஓட்டத்தை குளித்து சாப்பிட்டு ரெடியாகி ஒரு வழியாக பள்ளி கூடத்தை நோக்கி நடக்கத்துவங்கினேன். வழி நெடுகிலும் பல பக்கங்களிலுமாக காலையில் மலரும் பூக்களாக நீலம் வெள்ளை சீருடையில் பள்ளியை நோக்கி நடைபயின்றனர் என் வயதொத்த நண்பர்களும் சிறார்களும். எங்கள் பள்ளியின் மைதானம் வழி நுழைகையில் ரெஜோ சபதம் கேட்டு திரும்பினேன் அங்கே ஜெரோம் வந்து கொண்டிருந்தான் இருவருமாக எங்கள் வகுப்பை அடைந்ததும் ( 11ம்வகுப்பு) மிக நிதானமாக வானம் மழை சிந்த துவங்கியது. அது வேகமெடுத்து வேகமெடுத்து சட சட வென பெரு மழையாக பிடிக்க மழமழவென வெள்ளம் பள்ளியை சூழ்ந்து கொண்டது.

எல்லா வகுப்புகளிலிருந்தும் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க (எப்படியும் விடுமுறை கிடைத்துவிடும்) அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வராததால் இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர். ஆசியர்கள் தலைமையாசியரை சந்தித்து விவாதிக்க துவங்கியதால் பல வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லை மேலும் இடியும் மழையுமாக இருந்ததால் வகுப்பு எடுப்பது என்பதன் சிரமத்தை அவர்களும் அறிவார்களே.

இப்படியாக நீண்ட சமயம் வெள்ளமானது இன்னும் இன்னும் என கூட பள்ளி மைதானம் முழுமைக்கும் சராசரி 4 அடி உயரத்தை அடைந்திருந்தது. பள்ளிக்கும் சாலைக்கும் இடையே குறைந்த அளவாக 250 மீட்டர் தூரம் இருக்கும். ஒரு பக்கம் வெள்ள ஓட்டம் பள்ளியின் பின் புறம் உள்ள ஓடையில் நிறையத்துவங்கி இருந்தது. இச்சமயத்தில் தலைமையாசிரியர் விடுமுறை அறிவிக்க. அனேக மாணவ மாணவிகள் பள்ளியின் இடப்புறம் உள்ள பழைய பள்ளி வழியாக கோயில் பக்கம் வந்து வீடுகளுக்கு செல்ல துவங்கி இருந்தார்கள். அப்பகுதியில் மேடாக இருந்த காரணத்தால் அது எளிதாயிற்று எனினும் புதிய பள்ளிக்கும் பழைய பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதி கூடுதல் பள்ளம் என்பது மைனஸ்.

இந்நேரத்தில் பல குழந்தைகளின் தந்தையோ தாயோ பள்ளி மைதானத்தின் வழியாக கிட்டதட்ட மூழ்கிய நிலையில் பிள்ளைகளை கூட்டி சென்றனர். எங்கள் வகுப்பில் நானும் நண்பர்கள் சிலரும் உடனடியாக நடவடிக்கையில் இறங்க துவங்கினோம். 6ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அங்கு படித்தோம் என்பதால் 6 7 8 வகுப்பு பிள்ளைகள் அந்த மழை வெள்ளத்தை கடக்க முடியும் என்பது சிரமம். ஆதலால எங்கள் தோள்களில் தூக்கிய வண்ணம் அவர்களை சாலையில் உள்ள அவர்களின் பெற்றோரிடத்தில் சேர்க்கத்துவங்கினோம். இதற்கிடையில் புயலும் சேர்ந்து கொண்டது. குறிப்பிட்ட அதாவது 20 அடிதூரத்தில் உள்ள ஆட்களை கானமுடியாத நிலை வந்தது. எனினும் மீதம் உள்ள பிள்ளைகளை தூக்கி கொண்டு சாலையை அடைந்தோம். ஒரு நான்கைந்து முறை இப்படி செய்த பின். ஓரளவிற்கு தண்ணீரும் வற்றத்துவங்கியது. அனேக மாணவ மாணவிகளும் சாலையை அடைந்திருந்தனர். மீண்டும் பள்ளியை அடைந்த நான் எனது தங்கையை தூக்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். (அப்போது அவள் 6ம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள்). வீடு சேர்ந்ததும் குழிக்க நல்ல சுடுதண்ணீர் அம்மா தந்தார்கள் குளியல் முடிந்ததும் சூப்பரான கேழ்வரகு கூழ் (சீனி போட்டது) தந்தார்கள். மழைக்காலத்தில் கேழ்வரகு கூழ் மிக சுவையானது. அந்த புயல் மழை தீர மூன்று தினங்கள் பிடித்தது.

இன்றும் மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கும் ஒரு நிகழ்வு இது.

Advertisements

One comment on “ஒரு மழைநாளில்

  1. நல்ல அனுபவம் தான்.
    நான் ஸ்கூல் படிக்கும் போதும் அடிக்கடி மழையால் விடுமுறை கிடைக்கும்.
    மழையில் நனைந்து கொண்டு வீட்டுக்கு வருவதே தனி சுகம் தான்.

    இன்னும் கொஞ்சம் சின்ன paragraph ஆ எழுதுங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s