எந்திரன் கைமாறியது ஏன்?


நீங்கள் தலைப்பில் படித்த விஷயம்தான் லேட்டஸ்ட் கோடம்பாக்கம் பரபரப்பு.

`எந்திரன்படத்தைப் பொறுத்தவரை அதன் தயாரிப்பின் பின்னணியில்  நடந்து கொண்டிருக்கும் பரபரப்பான மினிட்ஸ் என்ன? களத்தில் குதித்தோம். 

பொழுதுபோக்கு உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஈராஸ், ஐங்கரன் நிறுவனத்துடன் கைகோர்த்துப் படத் தயாரிப்பில் இறங்கியது.  இதற்குக் காரணம் இன்று வெளியாகும் பெரும்பாலான படங்களின் எஃப்.எம்.எஸ். (ஃபாரின், மலேஷியா, சிங்கப்பூர் என்பதன் சுருக்கம்) எனப்படும் வெளிநாடுகளில் திரையிடும் உரிமை, தொலைக்காட்சி உரிமை மற்றும் தற்போதைய ட்ரெண்டான டி.வி.டி.க்கள் செல்ஃபோனில் டவுன் லோட் செய்யும் டிஜிட்டல் உரிமைகளும் ஐங்கரன் வசம் இருப்பதுதான்என்கிறார் தமிழ் சினிமாவின் வியாபார செய்திகளை வெளியிடும் `தமிழ்நாடு எண்டர்டெயின்மெண்ட்டின் ராமானுஜம்.

இதனாலேயே சுமார் இரண்டாயிரம் கோடி வரை ஈராஸ், ஐங்கரன் மூலமாக முதலீடு செய்ததாக கிசுகிசுக்கிறார்கள். இந்நிலையில்தான் `எந்திரன்படத் தயாரிப்பில் இறங்கின இந்நிறுவனங்கள். உலகம் முழுவதுமே பொருளாதார மந்த நிலையில் தள்ளாட, ஈராஸ் நிறுவனம் ஐங்கரன் இதுவரை தயாரித்த படங்களுக்கான செலவு விவரங்களைப் பற்றிய விளக்கங்களைக் கேட்டதாம். இந்தச் சூழ்நிலையில் உருவான சில சிக்கலான விஷயங்களால்தான் ஈராஸ், ஐங்கரனுடனான கூட்டுத் தயாரிப்பிலிருந்து விலக முடிவெடுத்ததாம்.

`எந்திரன்படத் தயாரிப்பைப் பொறுத்தவரை நூற்றி இருபது கோடி பட்ஜெட் என்று முதலில் சொல்லப்பட்டது. ஷங்கரை பொறுத்தவரையில் படத்தின் பட்ஜெட் எவ்வளவு? படம் எப்பொழுது முடிவடையும்? என்ற இரு முக்கியமான கேள்விகளைக் கேட்கக் கூடாதாம் என்ற ரீதியில் தமிழ் சினிமாவில் ஒரு கிசுகிசு வலம் வந்தபடிதான் உள்ளது. ஒரு ஷெட்யூலுக்கு இவ்வளவு பணம் வேண்டுமென்று கேட்டால், அந்த தொகையை தயாரிப்பு நிறுவனம் கொடுத்துவிட வேண்டுமாம். பிறகு அதை நிர்வகிப்பது ஷங்கரின் தனி புரொடக்ஷன் டீம்தானாம். ஈராஸ் விலகிய பின்னர் ஐங்கரன் நிறுவனம் இந்த வகையில் இருபத்தியாறு கோடி வரை செலவழித்திருக்கிறதாம்.

இந்நிலையில்தான் `எந்திரனை‘  நாமே அண்டர்டேக் செய்தால் என்ன? என்ற ரீதியில் ரஜினியும், ஷங்கரும் ஒரு கட்டத்தில் யோசித்ததாகவும் சொல்கிறார்கள். அதேநேரம் அவ்வாறு அண்டர்டேக் செய்தால் தயாரிப்புக்காக பணத்தை முதலீடு செய்வதுடன், படம் முடிந்தபின் வியாபாரம் செய்யும் வரை அந்த டென்ஷனான வேலைகளை நம் தலையில் போட்டுக் கொண்டால் நினைத்த மாதிரி படமெடுக்க முடியாது. அதனால் வேறு தயாரிப்பாளரை அணுகலாம் என இருவரும்  முடிவெடுத்தார்களாம்.

இதற்குப் பிறகே சன்பிக்சர்ஸுடன் கைகோர்த்திருக்கிறார்கள். `எந்திரனைசன்பிக்சர்ஸ் வாங்க முற்பட்டதற்குப் பின்னணியில் சன் டி.வி.க்கும் ஐங்கரனுக்கும் இடையிலான தொழில் போட்டியும் ஒரு காரணமாம். கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டபோது லண்டனிலும், வெளிநாடுகளிலும் அதை ஒளிபரப்பு செய்ய ஐங்கரன் உதவியது. அதனாலேயே தடாலடியாக எந்திரனை கைமாற்ற சன்பிக்சர்ஸ் தரப்பிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டதாம். இந்த முயற்சி மளமளவென அரங்கேற `எந்திரன்கைமாறிய விஷயம் அதுபற்றிய செய்தி வெளிவரும் வரை ஐங்கரன் நிறுவனத்திற்கே தெரியாது என்றும் ஒரு ஷாக்கான கிசுகிசு உலாவருகிறது.

எந்திரனை கைமாற்றும் விஷயம் தொடர்பாக பேச ஐங்கரன் கருணாமூர்த்தியை தொடர்பு கொள்ள ரஜினியும், ஷங்கரும் முயன்றிருக்கிறார்களாம். லண்டனில் தனது உறவினர் திருமணத்திற்காக சென்ற கருணா, படத் தயாரிப்பிற்கான பணத்தைக் கேட்கிறார்கள் என போனில் பேசவே இல்லையாம். திருமணம் முடிந்த பிறகு கருணாமூர்த்தி ஷங்கரையும், ரஜினியையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்ய இவர்கள் போனை எடுக்கவே இல்லையாம். இதனால்தான் எந்திரன் கைமாறியது கருணாமூர்த்திக்கு தெரியாமலே போனதாம்.

அதே நேரம் எந்திரன் கைமாறிய விஷயத்தில் சின்ன சிக்கலும் இருப்பதாக முணுமுணுக்கிறார்கள். பொதுவாகவே ஒரு படத்தைத் தயாரிக்கும்போது அப்படத்தின் நெகட்டிவ் உரிமை, லேப் லெட்டர் டைட்டில் உரிமை ஆகியன தயாரிப்பாளரின் பெயரில்தான் இருக்கும். இதை வைத்தே படத்தை வெளியிட முடியும். இவையாவும்   ஐங்கரன் நிறுவனத்தின் பெயரில்தான் உள்ளதாம்.  அதே போல் ஐங்கரனிலிருந்து என்.ஓ.சி.  தரப்படவில்லையாம். அதற்கு முதல் தயாரிப்பாளர் இதுவரை செய்த செலவுகளை செட்டில் செய்த பிறகே இந்த என்.ஓ.சி. வழங்கப்படுவது வழக்கம்.

 `என்னுடைய சுயநலத்திற்காக நான் எந்த முடிவும் எடுக்கமாட்டேன்என்று ரஜினியும், ஷங்கரும் இந்த விஷயத்தில் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை என்பதும் ஹைலைட்டான விஷயம். அதே நேரம் சன் பிக்சர்ஸ் சார்பில் இதுவரை ஐங்கரன் செலவு செய்த பணத்தை முழுமையாக செட்டில் செய்ய பேசி வருகிறார்கள். இதற்கு காரணம் `எந்திரன்சன் பிக்சர்ஸின் நேரடி தயாரிப்பில் வெளிவரும் முதல் படமாக இருக்க வேண்டும் என்ற ஐடியாதானாம். ஆனால் ஐங்கரன் நிறுவனமோ தாங்கள் செய்த செலவுடன் சில கோடிகளை சேர்த்து லாபம் கேட்கிறதாம். இதனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டேயிருக்கிறதாம்.

அடுத்தது என்ன? வெயிட் அண்ட் ஸி..

 

நன்றி: குமுதம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s