வாருங்கள் புத்தாண்டை வரவேற்ப்போம்


 

 

2008 ம்  ஆண்டு நல்ல படியாக நிறைவுபெற்று புது ஆண்டாக அதுவும் 21ம் நூற்றாண்டின் ஒற்றை இலக்க ஆண்டான இறுதி ஆண்டு ஆம் 9ம் ஆண்டான 2009 பிறக்கப்போகும் இந்த தருணத்தில் அதை வரவேற்க நாம் தயாராக வேண்டாமா? வாருங்கள் வாழ்த்துக்களுடன் தயாராவோம்

 

சரி புது வருடம் என்பது எல்லா ஜனவரி முதல் தேதியும் கொண்டாடப்படுகிறது. அதில் நமது பங்கு என்ன?

 

முதலில் நமக்கு விருப்பமானதோ விருப்பமில்லாததோ எதுவானாலும் எல்லாமும் நமக்கு நல்ல ஒரு அனுபவமாகத்தான் இருந்திருக்கும் எனவே நமது 2008க்கு ஒரு நல்ல விடை கொடுப்போம்

 

நம் முந்தைய வருடத்தில் நாம் செய்யத்தவறிய காரியங்களை இனி வரும் வருடத்தில் செய்ய வேண்டும் எனற கொள்கை வேண்டும்

 

புது வருடம் துவங்கும் வேளையில் நம் உறவினர்களிடையே அல்லது நட்பு வட்டாரம் சுற்றம் என அனைவரிடமும் சமாதானத்தில் இருக்கலாம். சண்டையோ மனத்தாங்கலோ வேண்டாமே. ஓகேவா.

 

அடுத்து வரும் வருடம் பொருளாதார சிக்கல்களை இனியும் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் நாம் நமது வீட்டின் வரவு செலவுகளில் இன்னும் கவனம் செலுத்தி சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்

 

மிக முக்கியமாக இது அழிவின் காலம் எனவே ஒருவர் அடுத்தவர்மீது அதிகப்படியான அன்பு காட்டவிட்டாலும் குறைந்த பட்ச அன்பாவது காட்டுங்கள் . .நீங்கள் கொடுப்பது உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்பதை மனதில் வைத்திருங்கள்

 

உலகத்தின் எல்லா பக்கத்திலும் வளரும் தீவிரவாதம் அல்லது தீவிரவாத்ததிற்கு எதிரான போர் என எதுவானாலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் எனவே எந்த காரனத்தை முன்னிட்டும் பொதுமக்களுக்கு பாதிப்பு வர வேண்டாம் என பிராத்திப்போம்

 

இது வரை செய்ய வேண்டியவற்றை பார்த்த நாம் இனி செய்யக்கூடாததையும் பார்க்கலாம்

 

எதுவாக இருந்தாலும் அதனால் பிறருக்கு கெடுதல் என தெரிந்தால் தயவுசெய்து அதை செய்ய வேண்டாம்

 

 

இனி புத்தாண்டை வரவேற்க நாம் தயார்

 

உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு தின வாழ்த்துக்கள்

newyear0571

எல்லா நண்பர்களும் வரும் புத்தாண்டில் நினைத்த காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றி என்பதை அடைய வாழ்த்துகிறேன்

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s