பள்ளிக்கூட நினைவுகள்


ப்போ நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம் அதுவும் இறுதி தேர்வு நெருங்கி இருந்தபடியால் எங்கள் ஊரை சேர்ந்த  பத்தாம் வகுப்பு  மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இரவு உணவிற்கு பிறகு பள்ளிக்கு வந்து அங்கே படித்து தூங்கி வந்தோம். அப்போது ஒரு நாள் இரவில் எங்கள் ஊரில் சினிமா போட்டார்கள் அதாவது திரை கட்டி புரைஜெக்டரை வாடகைக்கு எடுத்து சினிமா காட்டுவார்கள் இதை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே நாங்களும் சினிமாவுக்கு செல்ல முடிவு செய்தோம் நான் என நண்பர்கள் ஜெரோம், மார்சல், குமார் மற்றும் பென்னி என அனைவரும் திருட்டுதனமாக பள்ளியை விட்டு வெளியேறினோம். சினிமா கண்டு திரும்பினால் பள்ளியில் எங்கள் பங்குத்தந்தையிடம் மாட்டிக்கொண்டோம் பங்குத்தந்தை எங்களை உள்ளே விடவில்லை மணியோ இரவு 1 ஐ தாண்டிவிட்டது வீட்டிற்கும் போகமுடியாது எனவே ஊருக்கும் ஒரு ரவுண்ட் அடித்தோம் அதன்பின் எங்கள் புது பள்ளி கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் இருந்த ஆற்றுமணிலில் படுத்து தூங்கிவிட்டு காலையில் வீட்டிற்கு போனோம். மறுநாள் வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்து வந்து மன்னிப்பு கேட்டு மீண்டும் இரவு படிக்க வந்தோம்.

 

 

பின் ஒருநாள் ஒரு சம்பவம் அதாவது இரவு படிப்பில் இரண்டு ஷிப்ட்களாக பிரிந்து படிப்போம் எப்படி என்றால். ஒரு குழு தூங்கும் நேரம் மற்ற குழு படிக்கும் அவர்கள் தூங்கும் போது அடுத்த குழு படிக்க துவங்கும் இப்படி. அன்றும் அப்படித்தான் ஒரு குழு தூங்கி கொண்டிருந்த நேரம் (தூங்குவது என்றால் பள்ளி கூட பென்ஞ்தான் கட்டில்) பென்ஞ்சில் ஓர முழுமைக்கும் மெழுகுதிரி ஏற்றி வைத்துவிட்டு லைட்டை அணைத்து விட்டோம் சிந்தித்து பாருங்கள் இரவு நேரம் பென்ஞ் முழுவதும் மெழுகுதிரி நடுவில் தூங்கிய படியே நண்பன். அந்த நேரம் பார்த்து பங்குத்தந்தை எங்களை விசிட் செய்ய வர எல்லாரும் ஓடி ஒளிய இந்த கோலத்தை பார்த்த பங்குத்தந்தை அலறியே விட்டார். (பின் எல்லாரும் மன்னிப்பு கடிதம் கொடுத்தது தனிக்கதை)

 

 

மற்றொருநாள் திடீரென பங்குத்தந்தை எங்கள் அனைவரையும் வரச்சொன்னார். மணி இரவு 11 ஐ தாண்டி இருந்தது. அச்சமயங்களில் எங்கள் ஆலயத்திற்கு முன்பாக நிறைய மாடுகள் தூங்குவது வழக்கம் மாடு வைத்திருப்போர் அதை கண்டும்காணமல் விட. பங்குத்தந்தை சொல்லியும் கேட்கவில்லை எனவே அவர் எங்களுக்கு அதனை விரட்டும் வேலையை தந்தார். அந்த மாடுகளை விரட்ட அடைபட்ட எங்களை அனுப்பியதும் மிக சந்தோசமாக மாடுகளை விரட்டி விளையாடி விட்டு வர மறுநாள் பங்குத்தந்தையிடம் ஏகப்பட்ட புகார்கள். பள்ளியில் படிக்கும் பையன்கள் இரவு ஊர் முழுமைக்கும் ரவுண்ட் அடித்து தூக்கத்தை கெடுப்பதாக. பங்குத்தந்தை அதற்குரிய விளக்கத்தை அளித்தார் அதுமுதல் இன்று வரை மாடுகள் அந்த இடத்தில் தூங்குவது இல்லை.

 

 

ஒரு முறை இப்படித்தான் சினிமா பார்க்க போன எங்களுக்கு எங்கள் ஊரின் விலக்கில் சிறுபிரட்சனை என்று கேள்விப்பட்டு அங்கு போனோம் போகும் வழியில் எங்கள் ஊரின் கடைசி பேருந்து வந்து கொண்டிருந்தது அதன் வெளிச்சம் எங்கள் மேல் விழ நாங்கள் வண்டியை பார்க்க ஏதோ பணி நிமித்தமாக வெளியூர் போன எங்கள் பங்குத்தந்தை அந்த பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அவ்வளவுதான் எல்லாரும் வேலி ஓரத்தில் ஒளியத்துவங்கினோம். எப்படியும் பார்த்திருப்பார் இனி பள்ளிக்கு திரும்ப வாய்ப்பில்லை எனவே மீண்டும் ஆற்றுமணல் படுக்கைதான்.

 

என் நண்பர்கள் பலரும் பணி நிமித்தமாக பல பாகங்களில் இருந்தாலும் நினைவுகள் எப்போதும் எங்களை சேர்த்தே வைத்திருக்கிறது.

 

இன்னும் நினைவுகளுடன் . . .

 

 

 

 

 

Advertisements

6 comments on “பள்ளிக்கூட நினைவுகள்

  1. உங்கல் பள்ளி நாட்களை நல்ல enjoy பண்ணியிருக்கிறீர்கள். உங்கள் பங்குதந்தை தான் பாவம். உங்களிடம் மல்லு கட்டவே சரியாக இருந்திருக்கும். நாங்களும் இப்படி நிறைய சேட்டை பண்ணியிருந்தாலும், இப்போது ஊருக்கு சென்றுபார்க்கும் போது வருத்தமாகத்தான் இருக்கும். முன்னால் மாதிரி யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.

    உங்கள் வலையின் background colour-ஐ மாற்றினால் நன்றாகயிருக்கும்.

  2. முடிந்தால் உங்கள் வலையின் background color ஐ கொஞ்சம் மாற்றுங்கள். கருப்பு கலர் கண்ணை மிரட்டுகிறது.

  3. மாற்றம் செய்தாகிவிட்டது இப்போ எப்படி இருக்கிறது என்பதை தெரியப்படுத்துங்கள் நண்பி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s