த‌மிழக‌ம் ஒரு பா‌ர்வை


 

2008ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் த‌‌மிழக‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்டசில பல மாறுத‌ல்களை செ‌ய்‌திகளாக‌ப் பா‌ர்‌க்கலா‌ம்.

ஜனவ‌ரி மாத‌ம்

தமிழ்நாட்டின் எட்டாவது மாநகராட்சியாக ஈரோடு உதய‌ம்
தமிழ்நாட்டின் எட்டாவது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு மாநகராட்சியின் முதல் மேயராக குமார் முருகேஸ் நேற்று பதவியேற்றார்.

 

 

 

 

 

கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட தர்மபுரி பேரு‌ந்து எரிப்பு வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வினர் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ உத்தரவின் அடி‌ப்படை‌யி‌ல் ‌நிறு‌த்‌தி வை‌த்து‌ள்ளதாக கோவை ‌சிறைச்சாலை அ‌திகா‌ரிக‌ள் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ற்கு தெ‌ரி‌‌வி‌த்துள்ளன‌ர்.

5,000 கோடி‌யி‌ல் கல்பாக்கத்தில் புதிதாக 2 வேக ஈனுலைகள்!
சென்னையை அடுத்து‌ள்ள கல்பாக்கத்தில் 5,000 ஆயிரம் கோடி ரூபா‌ய் செலவில் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறனுடைய 2 புதிய வேக ஈனுலைகள் அமைக்கப்படும் என்று கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பல்தேவ்ராஜ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பாலாறு பிரச்சினை : தமிழக-ஆந்திர அரசுகளை அழைத்து ம‌த்‌திய அரசு பேச்சு நடத்த வேண்டும்: உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம்!
பாலாறு அணை பிரச்சினை‌யி‌ல்‌ தமிழகஆந்திர அரசுகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசுக்கு உ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌ம் யோசனை தெரிவித்துள்ளது.

நடிகர் பாண்டியன் மரணம்!
மண்வாசனை படத்தில் அறிமுகமாகி ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிக‌ர் பாண்டியன் இன்று மதுரையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. குடல்வால் அறுவைசிகிச்சை செய்து கொண்ட பாண்டியன், சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

 

 

 

 

 

த‌மிழ‌ர்க‌ளி‌ன் ‌வீர ‌விளையா‌ட்டான ஜ‌ல்‌‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி நட‌த்த உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தடை ‌வி‌தி‌த்து உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த தடை நீக்கம்!
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ‌விளையா‌ட்டு‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌வி‌தி‌த்த தடையை மறுப‌ரி‌சீலனை செ‌ய்ய‌க் கோ‌ரி த‌மிழக அரசு ‌தா‌க்க‌ல் செ‌ய்த மனுவை ப‌ரி‌சீ‌லி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம், ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு‌ நடத்துவதற்கு விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது!

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு: ‌ஆளுன‌ர் உரையில் அறிவிப்பு!
தைத் திங்கள் முதல் நாளையே தமி‌ழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட த‌மிழக அரசு முடிவு செ‌ய்துள்ளதாக ஆளுந‌ர் உரை‌யி‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பி‌ப்ரவ‌ரி மாத‌ம்

த‌மிழக மு‌ன்னா‌ள் பேரவை‌த் தலைவ‌ர் க. ராசாரா‌ம் காலமானா‌ர்!
த‌மிழக மு‌ன்னா‌‌ள் அமை‌ச்சரு‌ம், பேரவை‌த் தலைவருமான க. ராசாரா‌ம் ‌நீ‌ண்ட நா‌ள் உட‌ல் நலக்குறை‌வி‌ன் காரணமாக செ‌ன்னை‌யி‌ல் இ‌‌ன்று த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் காலமானா‌ர்.

ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌த்து‌க்கு முத‌ல்வ‌ர் அடி‌க்க‌ல் நா‌ட்டினா‌ர்!
ரூ.1330 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட‌த்து‌க்கு முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று அடிக்கல் நாட்டினா‌ர்.

 

மா‌ர்‌ச் மாத‌ம்

எழு‌த்தாள‌ர் ‌ஸ்டெ‌ல்லா புரூ‌ஸ் த‌ற்கொலை
தமிழில் பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் எழுதியசிற‌ந்த எழு‌த்தாள‌ர் ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம்மோகன் இ‌ன்று த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

 

 

 

 

 

தமிழக அரசின் 2008-2009-ம் ஆண்டுக்கான ‌நி‌‌தி ‌நிலை அ‌றி‌க்கையை ‌நி‌தி அமை‌ச்ச‌ர் அ‌ன்பழக‌ன் இ‌ன்று ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் தாக்கல் செய்தா‌ர். அத‌ன் ‌சிற‌ப்ப‌‌ம்ச‌‌ம் வருமாறு:

ஏ‌ப்ர‌ல் 1 முத‌ல் மாநகரா‌ட்‌சி மயான‌ங்க‌ளி‌ல் இலவச உட‌ல் தகன‌ம்!
செ‌ன்னை மாநகரா‌ட்‌சி மயான‌ங்க‌ளி‌ல் ஏ‌ப்ர‌ல் 1 ஆ‌ம் தே‌தி முத‌ல் இலவசமாக உட‌ல் தகன‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌ன் கூ‌றினா‌ர்.

 

 

 

ஏ‌‌ப்ர‌ல் மாத‌ம

 

 

 

 

 

கர்நாடகாவில், தமிழ் படங்களை திரையிட்ட சினிமா தியேட்டர்களை கன்னட வெறியர்கள் தாக்கியதை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நட‌ந்து வரு‌கிறது. இதில், ரஜினிகாந்த், கம‌ல்ஹாசன் உள்பட 10 ஆயிரம் பேர் கலந்துகொ‌ண்டு‌ள்ளன‌ர்.

ஒகேன‌க்க‌ல் : ர‌ஜி‌னி, ச‌த்யரா‌ஜ், ‌விஜயகா‌ந்‌த் ஆவேச‌ம்!
ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌க்கு‌ம் க‌ர்நாடக அரசை‌க் க‌ண்‌டி‌த்து‌ம், க‌ர்நாடக‌த்‌தி‌ல் த‌மி‌ழ்‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ள் ஓடு‌ம் ‌திரையர‌ங்குக‌ள் தா‌க்க‌ப்ப‌ட்டதை எ‌தி‌ர்‌த்து‌ம் ர‌‌ஜி‌னி, ச‌த்யரா‌ஜ், ‌விஜயகா‌ந்‌த் ஆ‌கியோ‌ர் ஆவேசமாக பே‌சின‌ர்.

ஆலடி அருணா கொலை வழக்‌கி‌ல் 2 பேரு‌க்கு தூ‌‌க்கு‌த் த‌ண்டனை!
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் இர‌ண்டு பேரு‌க்கு தூ‌க்கு‌த் த‌ண்டனையு‌ம், ஒருவரு‌க்கு 3 ஆ‌ண்டு ‌சிறை த‌ண்டனையு‌ம் ‌வி‌‌தி‌த்து நெ‌ல்லை ‌‌நீ‌திம‌ன்ற‌ம் இ‌ன்று பரபர‌ப்பு ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு: பேரவையில் தீர்மானம்!
இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண சிறிலங்க அரசும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி த‌‌மிழக ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இ‌ன்று ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌‌ட்டது.

மே மாத‌ம

 

 

 

 

 

தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான தா.‌கிரு‌ட்டிண‌ன் கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழ‌கி‌ரி உ‌ள்பட 13 பேரை ‌விடுதலை செ‌ய்து ‌சி‌த்தூ‌ர் அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌ம் இ‌ன்று தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் நாம‌க்க‌ல் மாண‌வி, செ‌ங்க‌ல்ப‌ட்டு மாணவ‌ன் முத‌லிட‌ம்!
பிளஸ் 2 தேர்‌வி‌ல் நாமக்கல் மாவ‌ட்ட‌ம் ‌திரு‌ச்செ‌ங்கோ‌டை சேர்ந்த மாணவி தரணி மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த மாணவர் ராஜேஷ்குமார் ஆகியோர் தலா 1182 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

அமை‌ச்ச‌ர் பூ‌ங்கோதை ரா‌ஜினாமா!
ல‌‌ஞ்ச‌ம் பெ‌ற்ற தனது உற‌வினரை கா‌ப்பா‌ற்ற முய‌ன்றதாக கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தமது அமைச்சர் பதவியை ராஜினாமா ச‌ெ‌ய்து‌‌ள்ளா‌ர்.

ஜூ‌ன் மாத‌ம்

பு‌திய க‌ட்‌சி தொட‌ங்‌கினா‌ர் நடிக‌ர் கார்த்திக்!
நடிக‌ர் கா‌‌ர்‌த்‌தி‌க் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சிஎன்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியு‌ள்ளா‌ர்.

பா.ம.க.வுடன் கூட்டணியைத் தொடர முடியாது: தி.மு.க. முடிவு!
பாட்டாளி மக்கள் கட்சியுடனான கூட்டணியை இதற்கு மேலும் தொடர முடியாது என்று தி.மு.க. உயர் நிலைக் குழு முடிவெடுத்து அறிவித்துள்ளது
 

 

 

ஜூலை மாத‌ம

 

 

 

 

 

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று அ‌திகாலை கைது செ‌ய்தன‌ர். மேலு‌ம் அவரது ஆதரவாள‌ர்க‌ள் 15 பேரு‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

த‌மிழக கா‌‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் த‌ங்கபாலு!
த‌மிழக கா‌ங்‌‌கிர‌ஸ் தலைவராக மு‌ன்னா‌ள் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் கே.‌வி.த‌ங்கபாலு ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது கொலை முயற்சி வழக்கு!
அரசு அலுவலரைத் தாக்கியதாக அமைச்சர் சுரேஷ்ராஜன் உ‌ள்பட 6 பே‌ர் ‌மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஆக‌ஸ்‌ட் மாத‌ம

வேலூர் மாநகராட்சி உதய‌ம்
த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டதை தொட‌ர்‌ந்து வேலூர் இ‌ன்று மாநகராட்சியாக மா‌ற்ற‌‌ப்படு‌கிறது. இதனை முதலமைச்சர் கருணாநிதி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

 

 

 

 

 

10வது மாநகராட‌்‌சியாக உதயமாகு‌ம் தூத்துக்குடி மாநகராட்சியை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று தொட‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர்.

அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து எ‌ன்.கே.கே.‌பி.ராஜா ‌நீ‌க்க‌ம்!
ஆ‌ள் கட‌த்‌திய வழ‌க்‌கி‌ல் ‌சி‌க்‌‌கிய அமை‌ச்ச‌ர் எ‌ன்.கே.கே.‌பி.ராஜா, அமை‌ச்ச‌ர் ப‌த‌‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ன் பே‌ரி‌ல் ஆளுந‌ர் ப‌ர்னாலா இ‌ந்த நடவடி‌க்கையை எடு‌த்து‌ள்ளா‌‌ர்.

காங்கிரசுடன் இணைந்துள்ள தி.மு.க.வுடன் உறவு கிடையாது: தா.பா‌ண்டிய‌ன்!
தமிழக‌த்‌‌‌தி‌ல் காங்கிரசுடன் இணைந்துள்ள தி.மு.க.வுடன் உறவு கிடையாதுஎன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கூறினார்.

முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தி.மு.க.வில் இணைந்தார்!
அ.இ.அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, இன்று தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.

செ‌ப்ட‌‌ம்ப‌ர் மாத‌ம

சரவணா ஸ்டோரில் ‌‌தீ ‌விப‌த்து: 2 ஊ‌ழிய‌ர்க‌ள் பலி!
செ‌ன்னை சரவணா ‌ஸ்டோ‌‌ர்‌ஸ் பா‌‌த்‌திர‌க்கடை‌யி‌‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌தீ‌யி‌ல் ‌சி‌க்‌கி இர‌ண்டு ஊ‌ழிய‌ர்க‌ள் ப‌லியானா‌ர்க‌ள்.

 

 

 

 

 

கர்நாடக இசையிலும், திரை இசைப் பாடல்களிலும் இசை ரசிகர்களை மட்டுமின்றி பாமர மக்களையும் தனது வயலின் இசையால் மயக்கிய வயலின் சக்ரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன் காலமானார்.

அ‌ண்ணா ‌பி‌ற‌ந்தநா‌ள்: 1,405 கைதிகள் விடுதலை!
அ‌றிஞ‌ர் அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் ப‌ல்வேறு ‌சிறைக‌ளி‌ல் அடை‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்த ஆயு‌ள் க‌ை‌திக‌ள் 1,405 பே‌ர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

நடிக‌ர் வடிவே‌லு வீடு, அலுவலக‌ம் ‌மீது ம‌ர்ம கு‌ம்ப‌ல் தா‌க்குத‌ல்!
செ‌ன்னை, சா‌லி‌கிராம‌த்‌தி‌ல் உ‌ள்ள பிரபல மு‌ன்ன‌ணி நகை‌ச்சுவை நடிக‌ர் வடிவேலு‌வி‌ன் ‌வீடு ம‌ற்று‌ம் அலுவலக‌த்‌தி‌ல் நுழை‌ந்து 50 பே‌ர் கொ‌ண்ட ம‌ர்ம கு‌ம்ப‌ல் இ‌ன்று தா‌க்குத‌ல் நட‌த்‌தியது. இ‌தி‌ல் நடிக‌ர் வடிவேலு எ‌வ்‌வித காய‌மு‌‌மி‌ன்‌றி அ‌தி‌ர்‌ஷ்டவசமாக த‌ப்‌பினா‌ர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்‌கி‌ல் இ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌ம், சிறைத்துறை விதிகளுக்கு உட்பட்டு மனுவை மீண்டும் மறு பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு, நளினியை விடுதலை செய்ய முடியாது என்ற தமிழக அரசின் முந்தைய உத்தரவையு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌ம் ரத்து செய்தது

 

 

 

அ‌‌க்டோப‌ர் மாத‌ம்

பழ‌ம்பெரு‌ம் நடிக‌ர் பூ‌ர்ண‌ம் ‌வி‌ஸ்வநாத‌ன் காலமானா‌ர்!
பழ‌ம்பெரும் குண‌‌‌சி‌‌த்‌திர நடிக‌ர் பூ‌ர்ண‌ம் ‌வி‌‌ஸ்வநாத‌ன் இ‌ன்று மாலை காலமானா‌ர்.

இன்று முதல் பொது இடத்தில் புகை பிடி‌க்க தடை!
மகா‌த்மா கா‌ந்‌தி ‌பிற‌ந்தநாளான இன்று முதல் பொது இடங்களில் புகை ‌பிடி‌க்க தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌டு‌கிறது. இதையு‌ம் ‌மீ‌றி யாராவது புகை ‌பிடி‌த்தா‌ல் உடனடியாக ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

 

 

 

 

இல‌ங்கை‌‌யி‌ல் த‌மிழ‌ர்க‌ள் படுகொலை செ‌ய்ய‌ப்படுவதை‌த் தடு‌த்து ‌நிறு‌த்த கோ‌ரி ‌பிரதம‌ர் ம‌ன்மோ‌க‌ன்‌ ‌சி‌ங்கு‌க்கு லட்சக்கணக்கில் த‌ந்‌‌தி அனு‌ப்பு‌மாறு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள் விடு‌த்து‌ள்ளா‌ர்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக‌ல்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு
சென்னையில் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் செய்துவரும் வன்முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இல‌ங்கை த‌மிழ‌‌ர் ‌பிர‌ச்‌சினை: ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் ‌திரையுல‌கின‌ர் பேர‌ணி!
இல‌ங்கை‌யி‌‌ல் த‌மிழ‌ர்க‌ள் ‌மீது அ‌ந்நா‌ட்டு ராணுவ‌ம் நட‌த்‌திவரு‌ம் தா‌க்குதலை‌க் க‌ண்டி‌‌த்து ‌ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் இ‌ன்று ‌திரையுலக‌ம் சா‌ர்‌பி‌ல் ‌பிர‌ம்மா‌ண்டமான பேர‌ணி நடைபெ‌ற்றது.

விடுதலை செய்ய கோரி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நளினி மீண்டும் மனு!
ஆயுள் தண்டனை பெற்றவர்களை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்று அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ந‌ளி‌னி, த‌ன்னை ‌விடுதலை செ‌ய்ய ‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி வழ‌ங்‌கி உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று செ‌ன்னை உய‌ர்‌ நீ‌திம‌ன்‌ற‌த்த‌ி‌ல் ‌மீ‌ண்டு‌ம் மனு‌த்தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கைது!
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்துப் பேசுகையில் ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ ‌பி‌‌ரி‌வினையை தூ‌ண்டியதாகக் கூ‌‌றி அவரை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர். இதேபோல ம.‌தி.மு.க. அவை‌த் தலைவ‌ர் க‌ண்ண‌ப்பனு‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

இயக்குநர்கள் சீமான், அமீர் கைது!
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோரை தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.

நவ‌ம்ப‌ர் மாத‌ம

நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்!
இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

இலங்கை‌த் தமிழர் படுகொலையை கண்டித்து சினிமா தொழிலாளர்கள் உண்ணாவிரத‌ம்!
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்ய‌ப்படுவதை கண்டித்து தென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் (பெப்சி) இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தின‌ர்.

 

 

 

 

 

இல‌ங்கை‌‌யி‌ல் உடனடியாக‌ப் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய வ‌லியுறு‌த்‌தி ச‌ட்ட‌ப்பேரவை மு‌ன்பாக ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த பேர‌ணியாக செ‌ன்ற த‌மி‌ழீழ ‌விடுதலை ஆதரவாள‌ர் ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க் குழு‌வி‌ன் அமை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் உ‌ள்பட நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இ‌ன்று கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

த‌மிழக‌த்‌தி‌ல் பல இட‌‌ங்க‌ளி‌ல் பல‌த்த மழை பெ‌ய்தது. ஒர‌த்தநா‌ட்டி‌ல் அ‌திகப‌ட்சமாக 66 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது. அடு‌த்ததாக த‌ஞ்சாவூ‌ரி‌ல் 53 செ.‌மீ மழையு‌ம் ப‌திவா‌கியு‌ள்ளது.

டிச‌ம்ப‌ர் மாத‌ம்

 

 

 

 

 

அ‌ண்மை‌யி‌ல் உருவா‌ன ‌’நிஷாபுய‌ல் ம‌ற்று‌ம் கன மழை‌க்கு த‌மிழக‌த்‌தி‌ல் ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் எ‌‌ண்‌ணி‌க்கை 177 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளதாக த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த ‌நி‌ர்‌ப‌ந்த‌ம்: ‌பிரதம‌ரிட‌ம் வ‌லியுறு‌த்த‌ல்
இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த அ‌ந்த நா‌ட்டு அரசை ம‌த்‌திய அரசு உடனடியாக ‌நி‌ர்‌ப‌‌ந்‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கிட‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌லான அனை‌த்து‌க்க‌ட்‌சி தலைவ‌ர்க‌ள் வ‌லியு‌று‌த்‌தின‌ர்.

ம‌க்களவை தேர்தலில் கூட்டணி: ஜெயலலிதா- பிரகாஷ் காரத் அறிவிப்பு
ம‌‌க்களவை‌ தே‌‌ர்த‌லி‌ல் அ.இ.அ.‌தி.மு.க.வு‌ம் மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியு‌ம் கூ‌ட்ட‌ணி வை‌த்து போ‌ட்டி‌யிடு‌ம் எ‌ன்று ஜெயல‌லிதாவு‌ம், ‌பிரகா‌ஷ் கார‌த்து‌ம் கூ‌ட்டாக தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

திருவ‌ண்ணாமலையில் காவல‌ர்‌க‌ள் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌ம்
ஓய்வு இல்லாமல் பாதுகாப்பு பணி கொடுத்ததால்தான் காவல‌ர் சந்திரன் இறந்து ‌வி‌ட்டதாகவு‌ம், திருவள்ளூர் மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பா‌ள‌ர், காவல‌ர் சந்திரன் உடலை பார்க்க வராததை‌க் க‌ண்டி‌த்து‌ம் ‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட ‌காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று சாலை ம‌றிய‌ல் போரா‌ட்ட‌‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டன‌ர். அவ‌ர்களை ‌திருவ‌ண்ணாமலை மாவ‌ட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பா‌ள‌ர் சமாதான‌‌ம் செ‌ய்ததை‌த் தொட‌‌ர்‌ந்து ம‌றிய‌ல் கை‌விட‌ப்ப‌ட்டது.

இயக்குனர் சீமான் மீண்டும் கைது!
திண்டுக்கல் அருகே படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தபோது திரைப்பட இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டார்
 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s