குடும்ப கட்டுபாடு


 

நவ நாகரீகமான இக்காலகட்டத்தில் திருமணம் ஏன்ற பந்தத்தில் நுழைகின்ற ஆண்களோ பெண்களோ நல்ல கல்வி வேலை என்று சமுதாயத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப தங்களை தயார்படுத்தி கொள்ள விரும்புகிறார்கள் அது போல் அவர்களின் எதிர்கால திட்டங்கள் பொருளாதார வளர்ச்சி குழந்தை வளர்ப்பு என அனைத்தையும் கவனத்தில் வைத்திருப்பதால் குடும்பம் என்று வரும்போது மிக கவனமாக இருக்கின்றனர். ஒரு சிலர் திருமணம் ஆன உடனே குழந்தை வேண்டாம் ஒரு வருட காலம் சென்றபின்பு பெற்றுக்கொள்ளலாம் எனவும் அடுத்த சிலர் முதல் குழந்தைக்கு அடுத்து போதிய இடைவெளி வேண்டும் எனவும் மூன்றாவது சிலர் இரண்டு பெற்றாகிவிட்டது இனி குழந்தை வேண்டாம் எனவும் நினைக்கும் பட்சத்தில் அவரவர்க்கு என வித்தியாசமான கருத்தடை முறைகள் நம் நாட்டில் பழக்கத்தில் உள்ளன அவற்றை பற்றி ஒரு சிறிய கட்டுரை.

 

 

கருத்தடை என்றால் என்ன?

 

கருத்தடை என்பது, கருத்தரிப்பதைத் தடை செய்யும் முறையாகும்.

 

கருத்தரிப்பதைத் தவிர்க்க நிறைய வழிமுறைகள் உள்ளன. அதில் சில வழிமுறைகள் மற்ற வழிமுறைகளை விடச் சிறந்தது.

 

அதில் ஹார்மோன் மருந்துகள், கருத்தடைச் சாதனங்கள், கருத்தரிப்பு நிகழக்கூடிய நாட்களில் செக்ஸைத் தவிர்ப்பது (இதைத் தான் `பாதுகாப்பான நாட்கள்என்று அழைப்பார்கள்) மற்றும் அறுவை சிகிச்சை.

 

கருத்தடை முறையில் பாதுகாப்பான பல முறைகள் வந்து இன்றைய பெண்களின் உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டது.

 

கருத்தடை முறைகளைத் தெரிந்துகொண்டு, அதில் உங்களுக்கும், உங்கள் லைஃப் ஸ்டைலுக்கும் எது சரியானதோ அதைத் தேர்ந்தெடுங்கள்.

 

கருத்தடையில் என்னென்ன வகைகள் இருக்கிறது?

 

ஹார்மோன் முறை:-

 

கருத்தடை மாத்திரைகளோ, ஊசிகளோ (வாய் வழியாக எடுத்துக் கொள்ளப்படுவது) மற்றும் ஈஸ்ட்ரோஜன் அல்லது புரோஜெஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்கள் அடங்கியது. இந்த ஹார்மோன்கள் பெண்களுடைய சினைப்பையிலிருந்து மாதாமாதம் வெளிவரும் கருமுட்டையைத் தடை செய்து விடும். தவிரவும், இந்த முறையினால் கருப்பையின் வாய்ப்பகுதியில் இருக்கும் வெள்ளைச் சளி போன்ற டிஸ்சார்ஜ் தடிமனாகி, விந்து கர்ப்பப்பைக்குள் நுழையாமல் தடை செய்துவிடும்.

 

சில நாட்கள் வரை குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட நினைக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு கருத்தடை மாத்திரைகள் மிகச் சிறந்த வழி.

 

கருத்தடை மாத்திரை சாப்பிடும் பெண்கள் அதை மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்படி தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

கருத்தடை ஊசி ஒன்று இருக்கிறது. அது 3 மாதங்களுக்கு கர்ப்பத்தைத் தடுக்கும். இதனால் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த ஊசியை எடுத்துக்கொள்ளலாம்.

 

சில கட்டுக்கதைகள்!

 

கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்கள் குண்டாகி விடுவார்கள் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் இது உண்மையல்ல. உடலில் நீர் சேர்வதால் ஒன்று அல்லது இரண்டு கிலோ மட்டும் வெயிட் போடலாம். இந்த மாத்திரையினால் கேன்சர் வருமோ என்று சில பெண்கள் தயங்குவார்கள். இது உண்மையல்ல. இதில் கவனிக்க வேண்டிய நல்ல விஷயம் என்னவென்றால், இந்த கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு வரும் ஓவேரியன் கேன்சரை வர விடாமல் தடுக்கும்.

 

ஆணுறைகள்:-

 

எச்.ஐ.வி, ஹெப்படைடிஸ் போன்ற செக்ஸ் வழியாகப் பரவும் வியாதிகளைத் தடுப்பதில் இந்த ஆணுறைகள் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் கருத்தடை விஷயத்தில் ஆணுறைகள் ஃபெயிலியர் ரேட் அதிகம். அதாவது 15%. அதனால் கர்ப்பம் ஏற்பட்டால் கவலை இல்லையென்றால் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.

 

கருத்தடைச் சாதனம்:-

 

இந்த சாதனம் ஒரு சிறிய பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டது. அதன் மேல் காப்பர் (அ) ஹார்மோன் இருக்கும். இதை கருப்பைக்குள் வைப்பார்கள். இந்த காப்பர் (அ) ஹார்மோன் கர்ப்பப்பைக்குள் இருப்பதனால் கருத் தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் கர்ப்பப்பைக்குள் நிற்க விடாது. இந்த கருத்தடைச் சாதனத்தை அதன் டைப்பைப் பொறுத்து 3 முதல் 5 வருடங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். இதன் ஃபெயிலியர் ரேட் வெறும் 3% லிருந்து 5% வரைதான். தவிர, இந்த முறை ஏற்கெனவே குழந்தை பிறந்தவர்களுக்கு மிகவும் ஏற்றது.

 

பாதுகாப்பான நாட்கள் :-

 

கருத்தடை முறையில் இந்த முறைதான் இயற்கையான ஃபேமிலி பிளானிங். இந்த முறையில் எந்த கருத்தடைச் சாதனத்தையும், கருத்தடை மாத்திரைகளையும், ஊசிகளையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. கருத்தரிப்பதைத் தடைசெய்ய வேண்டுமென்றால், பீரியட்ஸ் தொடங்கிய முதல் 7 நாட்கள் வரை உறவு கொள்ளலாம்.

 

(பீரியட்ஸ் ஆன முதல் நாளிலிருந்து கணக்கெடுத்துக் கொள்ளுங்கள்) மற்றும் அடுத்த மாத பீரியட்ஸ் வருவதற்கு முந்தைய 7 நாட்களும்தான் `பாதுகாப்பான நாட்கள்என்று அழைக்கப்படுகிறது. இந்த கருத்தடை முறை பீரியட்ஸ் ரெகுலராக இருக்கும் பெண்களுக்கு மட்டும்தான் பொருந்தும். இந்த முறையின் ஃபெயிலியர் ரேட் 25%.

 

கருத்தடை ஆபரேஷன் :-

 

இந்த கருத்தடை முறையில், விந்தணு அல்லது கருமுட்டையை எடுத்துக்கொண்டு செல்லும் கருக்குழாய்களை ஆப்ரேஷன் மூலம் மூடி விடுவார்கள். இந்த ஆப்ரேஷனைச் செய்து கொண்ட ஆணோ அல்லது பெண்ணோ பிறகு எப்போதுமே பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது.

 

வாசக்டமியில், ஆணின் விந்தணுவைக் கடத்திச் செல்லும் குழாயை சர்ஜன் வெட்டி, சீல் செய்து விடுவார். பெண்ணுக்குச் செய்யும் போது, ஓவரியிலிருந்து கருப்பைக்கு கருமுட்டையை ஏந்திச் செல்லும் கருக்குழாயை கட் செய்து, சீல் பண்ணி விடுவார். இதில் ஆணுக்குச் செய்யும் ஆப்ரேஷன் பெண்ணுக்குச் செய்யும் அறுவை சிகிச்சையைவிட சுலபமானது. இந்த சிகிச்சையினால் ஆண்மை குறையாது. இந்த கருத்தடை முறையில் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி ஃபெயிலியர் ரேட் ஒரு சதவீதத்துக்கும் கீழேதான்!

 

எமர்ஜென்சி கருத்தடை முறை!

 

பாதுகாப்பில்லாமல் உறவு கொண்டாலோ அல்லது ஆணுறை உபயோகப்படுத்தியும் அது கிழிந்து இருந்தாலோ எமர்ஜென்சி கருத்தடையான `மறுநாள் காலையில் பயன்படுத்தும் மாத்திரைகளைஎடுத்துக் கொள்ளலாம். இந்த ஹார்மோனல் மாத்திரையை உறவு கொண்ட 72 மணிநேரத்துக்குள் ஒரு மாத்திரையும், அதன் பிறகு அடுத்த 12 மணி நேரத்துக்குள் மற்றொரு மாத்திரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையைப் பற்றி உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. துரதிர்ஷ்டவசமாக இந்த கருத்தடை மாத்திரைகளை தற்போது தடை செய்து உள்ளார்கள்.

 

தம்பதிகள் கருத்தடை முறையைப் பயன்படுத்தவில்லை என்றால் ஒரு வருடத்துக்கு குழந்தைப் பிறப்பு 80% இருக்கும். கருத்தடை ஆபரேஷன் முறையைத் தவிர ஹார்மோன் முறை மருத்துவம், கருத்தடைச் சாதனம்  ஆகியவை மிக எஃபெக்ட்டிவான முறைகள். எந்த வகை கருத்தடையும் உபயோகிக்காமல், பாதுகாப்பான நாட்களை மட்டும் உபயோகித்தால் கர்ப்பம் ஆவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு!

 

எனவே நண்பர்கள் பலர் பல மாதிரியான சூழ்நிலைகளில் இருப்பீர்கள் உங்களுக்கு தேவையான முறை எது எனவும் சிறப்பானது எது எனவும் இதை படித்து தெரிந்திருப்பீர்கள். இனியும் சந்தேகம் என்றால் அருகிலுள்ள மகப்பேறு மருத்துவரை அணுகி விளக்கங்களை கேட்டுகொள்ளுங்கள்

 

 

Advertisements

One comment on “குடும்ப கட்டுபாடு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s