‘வில்லு’, ‘கஞ்சீவரம்’ ரிலீஸ்: ஷாக்கில் கோலிவுட்!


 

தலைப்பைப் படித்துவிட்டு, ஏதோ திரையரங்குகளில்தான் ரிலீசாகிவிட்டதோ என நினைத்து விடாதீர்கள்.விஜய் நடித்து பொங்கலுக்கு வரவிருக்கும் வில்லு படம்தான் முன்கூட்டியே இணையதளங்களில் வெளியாகி தமிழ் சினிமா உலகையே ஒரு குலுக்கு குலுக்கி விட்டுள்ளது!.முன்பெல்லாம் படம் வெளியான சூட்டோடு இணையதளத்தில் அதை வெளியிட்டு வந்தார்கள். விஞ்ஞானம் வளர்கிறதல்லவா… இப்போதல்லாம் படப்பிடிப்பில் இருக்கும்போதே அந்தப் படத்தை வெளியிடுவதுதான் புது ஸ்டைல்.அதன்படி இப்போது இணையத்தில் அதிரவைத்துக் கொண்டிருக்கும் படம் விஜய் நடித்து பொங்கலுக்கு வரவிருக்கும் வில்லு.


பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தைதான் பெரிதும் நம்பியுள்ளது, தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் அய்ங்கரன் நிறுவனம்.இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போதுதான் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன், பிரிண்டிங் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய காட்சிகள், 45 நிமிட நேரம் ஓடும் அளவுக்கு, இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளன.விஜய் அறிமுகமாகும் காட்சி, சண்டைக் காட்சிகள், நயன்தாராவுடன் பாடும் ஒரு பாட்டு என பல காட்சிகள் பிட்டு பிட்டாக அப்லோட் செய்யப்பட்டுள்ளன.விருதுக்காகவே ப்ரியதர்ஷன் எடுத்த கஞ்சீவரம் படமோ முழுமையாகவே இணையத்தில் கிடைக்கிறது.சிம்புவின் சிலம்பாட்டமும் இணையத் தளத்தில் சுற்றி வருகிறது.

 இது அடுத்த ஷாக்கான செய்தி

 

ஆமீர் கானும், சல்மான்கானும் முட்டிக் கொண்டு நிற்கிறார்கள். அட, இதுவாவது பரவாயில்லை… சல்மான் கானும், அவரது காதலி கத்ரீனா கைஃபும் முறுக்கிக் கொண்டு நிற்கிறார்கள்….காரணம்…சாட்சாத் நம்ம ஊர் ஆசின்தான்.பொதுவாக அமீர்கான் தன்னுடைய படங்களில் அறிமுகம் செய்யும் நடிகைகள் தன் அனுமதி இல்லாமல் வேறு படங்களில் நடிக்கவோ, பேட்டி கொடுக்கவோ கூடாது என நினைப்பவர். ஆசினுக்கும் அப்படித்தான் சொல்லி வைத்தாராம்.  


ஆனால் இதற்கு நேர்மாறாக நடந்து கொண்டார் அஸின். முதல் படம் வெளி வருவதற்கு முன்பே அவரைத் தேடி வந்த வாய்ப்புகள் அப்படி. அவற்றில் சில நல்ல வாய்ப்புகளாக அமைய அமீரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகினார். சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் காண ஆரம்பித்துவிட்டார் ஆசின்.இந்தப் பக்கம், தன்னுடன் நடிப்பவர்களையெல்லாம் தனக்கு மட்டுமே சொந்தமானவர்களாகக் கருதும் தாராள மனம் கொண்ட சல்மான். ஆசினை தனது முகாமுக்குள் வரவேற்றவர், இப்போது பார்ட்டி, பங்ஷன் எதுவாக இருந்தாலும் ஆசினையும் கூடவே அழைத்துச் செல்கிறார்.இதனால் ஆமிர்கான் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். தனது அடுத்த படத்துக்கும் ஆசினை ஒப்பந்தம் செய்ய இருந்தவர் அதற்குப் பதில் வேறு நடிகைகளைப் போட்டுவிட்டார்.இன்னொரு பக்கம் சல்மான் காதலி கத்ரீனா கைப் கோபித்துக் கொண்டுள்ளாராம். இனி சல்மான் சகவாசமே வேண்டாம் என தோழிகளிடம் புலம்பி வருகிறாராரம்.இந்த மலபார் இன்னும் என்னென்ன பூகம்பங்களுக்குக் காரணமாகப் போகிறதோ என முணுமுணுக்கிறார்கள் பாலிவுட்டில்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s