பொம்மலாட்டம் – விமர்சனம்


 

நடிப்பு: நானா படேகர், அர்ஜூன், ருக்மணி, காஜல் அகர்வால், மணிவண்ணன், விவேக்

இசை: ஹிமேஷ் ரேஷம்மியா, மாண்டி

ஒளிப்பதிவு: கண்ணன், தனபால்

கதை, திரைக்கதை, இயக்கம்: பாரதிராஜா

தயாரிப்பு: பால் பாண்டியன்

 

 

பாரதிராஜாவின் சினிமா உலகளவில் வளர்ந்து அவருடைய பார்வையும் உலக சினிமாவை நோக்கி செல்கிறது என்றால் அதற்கு எடுத்துக்காட்டாக இந்த சினிமாவை சொல்லலாம். சிறந்த கலைஞனுக்கு எதுவும் எந்த வயதிலும் வகைப்படும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சிகரம்.

 

காதல் பண்பாடு கிராமம் திகில் என பல ரடுண்ட் கட்டி அடிக்கும் இயக்குனரில் இதில் மீண்டும் திரில்லர் மற்றும் சி.பி.ஐ என வேறுபட்டு இருக்கிறார். அதிலும் அவர் அமைத்திருக்கும் கிளைமாக்ஸ் மிக அற்புதம்.

 

பொம்மலாட்டத்தில் நிஜமாகவே வித்தியாசமான கதை, எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட திரைக்கதை!.

ராணா ஒரு மதிப்புக்குரிய திரைப்பட இயக்குனர். தன் மனதுக்குச் சரியானதை, தயக்கமின்றி செய்யும் துணிச்சல்காரர். எதுவும் ஒரு ஒழுங்கான கட்டமைப்புக்குள் இயங்க வேண்டும் என எதிர்பார்க்கிறவர். அதற்கு நேரெதிரான மனைவி, அதனால் வாழ்க்கை கசந்த நிலையில் கிடக்கிறது ஒரு புறம்.

 

உலக அளவில் மதிக்கப்படும் இயக்குனர் ராணா. தனது புதிய படத்தில் பந்தா செய்யும் கதாநாயகியை நீக்கிவிட்டு, ஹம்பியில் தான் பார்க்கும் த்‌ரிஷ்னாவை நடிக்க வைக்கிறார். த்‌ரிஷ்னா யார்? அவரது பூர்வீகம் எது? ராணா தவிர யாருக்கும் தெ‌ரியாது. த்‌ரிஷ்னாவிடம் ராணா காட்டும் அதிகபடியான நெருக்கம் தவறான யூகங்களுக்கு வழி வகுக்கிறது.

இந்நிலையில் த்‌ரிஷ்னாவிடம் தவறாக நடக்க முயலும் ஊர் பெ‌ரியவரும், பைனான்ஸியர் மகனும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். ராணாவின் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் இந்த கொலைகள் நிகழ்வதால் சந்தேகம் ராணா மீது விழுகிறது.

 

படப்பிடிப்பு முடிந்து த்‌ரிஷ்னாவை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நேரத்தில் ராணாவின் கார் விபத்துக்குள்ளாகிறது. ராணா சிறு காயங்களுடன் தப்பிக்க, உடன் பயணம் செய்த த்‌ரிஷ்னா உடல் கருகி இறந்து போகிறார். முதல் இரண்டு கொலைகளுக்காக ராணாவை கைது செய்து விசா‌ரிக்கிறார், சிபிஐ அதிகா‌ரியான அர்ஜூன்.

 

கொலையாளி யார் என்ற விசாரணையில் அடுத்தடுத்து சுவாரஸ்ய முடிச்சுகள் அவிழ்க்கப்படும் விதம் அடடே சொல்ல வைக்கும் புதிய உத்தி. அதேபோல, கொலைக்கான பின்னணி குறித்த இயக்குநரின் சமூகப் பார்வை இதுவரை எந்தப் படத்திலும் பார்க்காதது.

 

ராணாவாக வரும் நானா படேகர் கறாரான க்‌ரியேட்டர் வேடத்தை சிறப்பாக செய்துள்ளார். சிகரெட் புகைத்தபடி அவர் பேசும் அலட்டலில்லாத உடல்மொழி தமிழுக்கு புதுசு. படத்தின் மிகப் பெ‌ரிய ப்ளஸ், நானா படேகர். இந்த மாதிரி க்ளாஸ்நடிப்பை வேறு எந்த நடிகரிடமும் எதிர்பார்க்கவே முடியாது. அவருக்கு வாய்ஸ் கொடுத்திருக்கும் நிழல்கள் ரவி பாராட்டுகுரியவர்.

அர்ஜூனுக்கு இதில் வழக்கமான ஆக்ஷனுக்கு வாய்ப்பில்லை. ஆனாலும் நிஜமான சிபிஐ அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார். அலட்டிக் கொள்ளாத நடிப்பால்

 

இறுக்கமான முகபாவங்களுடன் த்‌ரிஷ்னா வேடத்தில் ருக்மணி கச்சிதம். நடன அசைவுகளில் ருக்மணி, அசையும் கவிதை. ஊர் பெ‌ரியவராக வரும் மணிவண்ணன் இவ‌ரிடம் செய்யும் சில்மிஷங்கள் பல படங்களில் கண்டவை.

 

கண்ணனின் காமிராவும் மாண்டியின் பின்னணி இசையும் படத்துக்கு பெரும் ப்ளஸ்கள். ஹிமேஷ் இசையில் என்னானதோ‘… பாடலில் மட்டும் பாரதிராஜா தெரிகிறார்

 

அர்ஜுன், நானா படேகர் சந்திக்கும் காட்சிகள் அனைத்தையும் சிரத்தையாக அமைத்துள்ளார், பாரதிராஜா. அர்ஜு‌ன், நானா படேகரை விசாரணை செய்யும் காட்சியை நானாவின் ஆளுமை வெளிப்படும் வகையில் அமைத்திருப்பது பாரதிராஜா இயக்கத்தில் இமயம் என்பதை காட்டுகிறது

 

மொத்தத்தில் பாதை மாறிப் போய்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இது போலவும் சினிமா வரும் என்ற நினைப்பை சில பல இயக்குனர்களுக்கு பாரதிராஜா சொல்லாமல் சொல்லி காட்டுகிறார். இனியாவது 5 பாட்டு 5 சண்டை ரசிகர்களை பார்த்து பேசுவது என்ற சீர்கெட்ட சினிமாக்கள் குறைய வேண்டும் என்பதே என் விருப்பம்.

 

பொம்மலாட்டம் . கச்சித ஆட்டம்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s