நீங்களும் ஸ்லிம் ஆகலாம்


இன்றைய உணவு பழக்கவழக்கம் பலரை குண்டாக்கிவிட்டது. எக்குத்தப்பாக எகிறிய உடம்பை குறைக்க பலர் `ஜிம்`களை நோக்கி படையெடுத்துள்ளனர். அங்கே என்ன தான் நிமிர்ந்து குனிந்தாலும் உடல் எடை குறைவது என்னவோ சிலருக்கு தான். மற்றவர்கள் காசை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 

பொதுவாக நாம் உண்ணக்கூடிய உணவில் கொழுப்பு உள்ளிட்ட சத்துகள் அடங்கியுள்ளன. அந்த சத்துகள் அதிகமாக இருக்கும்போது, அவை உடல் உழைப்பு மூலம் சரியாக செலழிக்கப்படாமல் இருந்தால் உடலில் ஆங்காங்கே தேங்கி விடுகிறது. இதன்விளைவு தான் தொப்பை உள்ளிட்ட உடல் பருமன்.

 

இன்று குழந்தைகள் கூட ஒபிசிடி என்கிற உடல் பருமன் நோயால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஓடியாட வேண்டிய வயதில், உட்கார்ந்த இடத்தில் இருந்து எழுந்திருக்கக் கூட முடியாமல் அவதிப்படும் குழந்தைகளும் நிறைய இருக்கிறார்கள்.

 

முன்பெல்லாம் வீட்டு வேலைகளை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த பெண்கள் கூட இன்று வெட்டியாய் பொழுதை போக்கி குண்டாகிக் கொண்டிருக்கிறார்கள். சில அடி தூரம் நடப்பதற்குள் கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கும் பெரிய பெண்களும் இந்த குண்டு பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

 

இப்படியே போனால் வருகிற 2030-ல் உலக அளவில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள் குண்டான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பகீர் தகவலை தருகிறது, ஒரு ஆய்வு.

 

குண்டு பெண்கள் நினைத்தால் உடலை குறைக்கலாம். ஆனால், இன்றைய குண்டு பெண்களால் அது முடியாமல் போய்விடுகிறது. இதற்கு காரணம் அவர்களது மனஉளைச்சல் தான் என்று தெரிவிக்கிறது பிரிட்டன் பல்கலைக்கழக ஆய்வு.

 

உடம்பு குண்டானதும் ஒருவித மன உளைச்சலுக்கு ஆளாகும் அவர்கள், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபட முடியாமல் திணறுகிறார்கள். ஸ்லிம் ஆக உள்ளவர்களைப் பார்த்து, நாமும் அப்படி இருந்திருக்கலாமே; இப்படி உடம்பை கெடுத்துக் கொண்டோமே என்று யோசித்து யோசித்தே பயிற்சியை தள்ளிப்போட்டு குண்டு உடம்பை இன்னும் குண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

 

சாப்பாட்டை குறைத்தால் உடம்பு குறைந்து விடும் என்பது பலரது கணக்கு. இப்படி செய்தால் உடல் எடை தான் குறையுமே தவிர, உடல் பருமன் குறையாது என்று எச்சரிக்கும் அதே ஆய்வுத் தகவல், குண்டு பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி, மற்றவர்கள் பார்வையில் படாமல் உடற்பயிற்சி செய்ய தேவையான தனிமையை ஏற்படுத்திக் கொடுத்தால் ஓரளவு பலன் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகிறது.

 

நீங்கள் குண்டான தோற்றம் கொண்டவர் என்றால், கீழ்க்கண்ட `டிப்ஸ்`களை பின்பற்றித் தான் பாருங்களேன்…

 

* கிடைத்த உணவை எல்லாம் உட்கொள்ளாமல், உங்களுக்கு பிடித்த உணவை மட்டும் சாப்பிடுங்கள். அதுவும் அளவோடு.

 

* விழாக்கள், விசேஷ நிகழ்ச்சிகளில் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்காதீர்கள். இது ஆபத்தை தான் ஏற்படுத்துமே தவிர, கொஞ்சமும் நன்மைதராது.

 

* சாப்பிடும்போது நேரம், காலம் அறிந்து சாப்பிட வேண்டும். காலை உணவை 8 – 9 மணிக்குள்ளும், மதிய உணவை 1.30 – 2.30 மணிக்குள்ளும், இரவு உணவை இரவு 9 மணிக்குள்ளும் முடித்துக் கொள்ளுங்கள். இடையில், மாலை நேரத்தில் வேண்டுமானால் ஒரு கப் காபி எடுத்துக் கொள்ளுங்கள்.

 

* சாப்பிட்டவுடன் தூக்கம் கண்ணை சொக்கும். ஆனால் தூங்கக்கூடாது.

 

* இரவு நேரத்தில் அசைவ உணவை தவிர்த்து விடுங்கள். சைவ உணவுகளை மாத்திரமே உட்கொள்ளுங்கள். 30 வயதை கடந்தவர்கள் இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற மென்மையான உணவு வகைகளை உட்கொள்வதே நல்லது.

 

* குண்டாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை வேண்டாம். என்னாலும் `ஸ்லிம்` ஆக முடியும் என்று உறுதியாக நம்புங்கள்.

 

இவற்றை பின்பற்றினால் நீங்களும் ஸ்லிம் ஆகலாம்!

 

Advertisements

One comment on “நீங்களும் ஸ்லிம் ஆகலாம்

  1. //CÁÛ\V EQ° TZeLYZeL• TXÛW hPÖef«yP‰. Geh†RTÖL Gf½V EP•ÛT hÛ\eL TXŸ `È•`LÛ[ ÚSÖef TÛPÙV|†‰·[]Ÿ. AjÚL GÁ] RÖÁ Œ–Ÿ‹‰ h‹RÖ¨• EP¥ GÛP hÛ\Y‰ GÁ]ÚYÖ pX£eh RÖÁ. U¼\YŸL· LÖÛN ®QÖefe ÙLցz£ef\ÖŸL·.

    எனக்கு இப்பிடித்தான் இந்த பதிவு தெரிகிறது.
    இது என்ன மொழிங்க?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s