கர்ப்பபை அகற்றலும் அதன் காரணமும்


முன்பு எப்பொழுதும் இல்லாத சதவிகிதத்தில் இப்பொழுது பெண்களுக்கு கர்ப்ப பை பிரட்சனைகள் அதிகமாக வருகின்ற நிலையில் அனேக பெண்களுக்கு 30 முதல் 45 க்குள் இந்த கர்ப்பை அகற்றல் என்பது நிகழ்ந்து விடுகிற சூழ்நிலையில் அதைப்பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது இதோ அது குறித்த ஒரு சிறு கட்டுரை

கர்ப்பப்பை அகற்றல் அதாவது `ஹிஸ்டணெரக்டமி‘ (Hysterectomy) என்றால் என்ன?பெண்ணின் கர்ப்பப் பையை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பெயர்தான் ஹிஸ்டரெக்டமி. சில நேரங்களில் கர்ப்பப் பையுடன் கரு முட்டைப்பையும்  கருக்குழாயும்  அகற்றப்படும். துரதிர்ஷ்டவசமாக, ஹிஸ்டரெக்டமி பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படும் சாதாரண ஆபரேஷனாகிவிட்டது. ஆனால் பெண்கள் உஷாராயிருக்க வேண்டும். வேறு  சிகிச்சைகள் இருக்கிறதா என்பதைப் பார்த்த பிறகே இந்த அறுவை சிகிச்சைக்குச் சம்மதிக்க வேண்டும். கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால்  நீங்கள் என்ன செய்ய வேண்டும்?அதிக ரத்தப்போக்கு, ஃபைப்ராய்ட்ஸ், எண்டோமெட்ரியாசிஸ் போன்ற ஆபத்தில்லாத பிரச்னைகள் இருந்தால், அவற்றுக்கு முதலில் வேறு சிகிச்சை முறைகளைத்தான் கையாள வேண்டும். பல பிரச்னைகளுக்கு இந்த அறுவை சிகிச்சையை உடனடியாக செய்ய வேண்டிய அவசியமிருக்காது. இதைப்பற்றி நிறையத் தெரிந்து கொள்ளவும் மாற்று சிகிச்சை முறைகளைப் பற்றி ஆலோசிக்கவும் உங்களுக்கு நேரமிருக்கும். ஆனால் ஒரு விஷயம். என்ன செய்ய வேண்டும் என்று  முடிவு செய்வதற்கு முன்பு உங்கள் பிரச்னை என்ன என்பதையும் அதைத் தீர்க்க உள்ள சிகிச்சை முறைகளைப் பற்றியும் நீங்கள் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.கேன்சர் போன்ற அபாயகரமான நோய் தாக்கியிருந்தால், கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை ஒரு மாற்று வழி அல்ல. அதுதான் உயிர் காக்கும் ஒரே வழி.உங்களுக்கு கர்ப்பப் பையை அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டால் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம்  உங்களது பிரச்னைக்கு வேறு சிகிச்சை முறைகள் இருக்கிறதா? என்று கேட்டறியுங்கள். மற்றொரு மருத்துவரிடமும் கருத்துக் கேட்டுப் பாருங்கள்.ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவள்.  ஒரு பெண்ணுக்கு நல்ல சிகிச்சையாக இருப்பது மற்றொரு பெண்ணுக்கு நல்ல சிகிச்சையாக இருக்காது. என் அக்காவுக்கு இந்த ஆபரேஷன்தான் செய்தார்கள் என்று உங்களுக்கும் அந்த ஆபரேஷன் செய்ய காரணம் காட்ட முடியாது.இந்த கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சைபெரிய அறுவை சிகிச்சை. சில பெண்களுக்கு இந்த அறுவை சிகிச்சையின்போது சிக்கல்கள் வர வாய்ப்பிருக்கிறது.இந்த அறுவை சிகிச்சையை எப்படிச் செய்கிறார்கள்?அடி வயிற்றை அல்லது பெண்ணுறுப்பை வெட்டுவதன் மூலம் இந்த அறுவை சிகிச்சையைச் செய்வார்கள். சில சூழ்நிலைகளில் லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. எந்த வகையான அறுவை சிகிச்சை என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் நோயை பொருத்தது. மாதவிலக்கு வந்து கொண்டிருக்கும் பெண்ணுக்கு கர்ப்பப் பையுடன் கரு முட்டைப் பைகளும் அகற்றப்பட்டால் மாதவிலக்கு நின்று மெனோபாஸ் நிலையை அடைந்து விடுவார். அதனால் பொதுவாக நாற்பத்தைந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு `ஓவரிஸ்எனப்படும் கரு முட்டைப் பைகளை அகற்றுவதில்லை. இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால் கரு முட்டைப் பைகளை அகற்றாமல் செய்ய இயலுமா என்று உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.ஏன் கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது?யூட்ரென் ஃபைப்ராய்ட்ஸ் என்பது கர்ப்பப்பை தசைகளில் வளரும் ஆபத்தில்லாத (கேன்சர் இல்லாத) கட்டிகள். கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பல நேரங்களில் இந்தக் காரணத்துக்காகத்தான் செய்யப்படுகிறது. ஃபைப்ராய்டுகள் பொதுவாக அறிகுறிகள் எதையும் காட்டுவதில்லை. அவற்றுக்கு சிகிச்சையும் தேவையில்லை. மெனோபாஸுக்குப் பிறகு அவை அப்படியே சுருங்கிவிடும். ஆனால் அதிக அளவு ரத்தப் போக்கையோ அல்லது அதன் வளர்ச்சியால் வேறு அறிகுறிகளையோ இந்த ஃபைப்ராய்டுகள் உருவாக்கினால், அப்போது கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும்.அசாதாரண ரத்தப்போக்கு: முப்பத்தைந்திலிருந்து நாற்பத்தைந்து வயதுக்குள் பெண்களின் மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் நிகழும். இது இயல்பாக கருமுட்டை உருவாகாததால் ஏற்படும். இவற்றில் பல தானாகவே சாதாரண நிலைக்குத் திரும்பிவிடும் அல்லது மருந்துகளின் மூலம் சரிப்படுத்தலாம். இதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே வழியோ முதல் வழியோ அல்ல.எண்டோமெட்ரியாஸிஸ்:   இதுவும் கர்ப்பப் பையைப் பாதிக்கும். ஆனால் ஆபத்தில்லாத ஒரு விஷயம். முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்குள் இருக்கும் பெண்களிடம் இந்தப் பிரச்னை அதிகம் இருக்கும். முக்கியமாய் அதுவரை கர்ப்பம் உண்டாகாத பெண்களிடம் கர்ப்பப் பையின் உள்தோலுக்குள் இருக்கும் எண்டோமெட்ரியல் திசுக்கள் கர்ப்பப்பைக்கு வெளியிலும் பிற உறுப்புகளிலும் வளரும்போது இந்தப் பிரச்னை வருகிறது. மாதவிலக்குக் காலங்களில் வலி அதிகமாக இருப்பது, அசாதாரண ரத்தப்போக்கு போன்றவற்றுக்கு இது காரணமாக இருக்கலாம். சில சமயங்களில் கருவுறும் தன்மையை இழப்பதற்கும் இது காரணமாக அமைகிறது. இந்த நோயை லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய இயலும். மற்ற சிகிச்சைகள் எல்லாம் பயனளிக்காமல் போகும்போதுதான் கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை இதற்கு தேவைப்படுகிறது.யூட்ரின் ப்ரோலாப்ஸ்:  கர்ப்பப்பை தன் வழக்கமான இடத்திலிருந்து நகர்ந்து கீழிறங்கும் நிலை இது. இதுவும் ஆபத்தில்லாததுதான். பலவீனமான, நீட்டிக்கப்பட்ட தசைகளும் திசுக்களும்தான் இப்படியாவதற்குக் காரணம். இதனால் சிறுநீர்ப்பை  (ஙிறீணீபீபீமீக்ஷீ) போன்ற பிற உறுப்புகளுக்குப் பாதிப்பு உண்டாகலாம். குழந்தை பிறப்பு, மெனோபாஸுக்குப் பிறகு ஏற்படும் ஈஸ்ட்ரஜன் குறைவு போன்றவையும் இந்தப் பிரச்னைக்குக் காரணமாக அமையலாம்.கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகளில் பத்து சதவீதம்தான் இடுப்புப் பகுதி உறுப்புகளில் (Pelvic organs)வரும் புற்று நோய்க்காகச் செய்யப்படுகிறது. கர்ப்பப் பையின் வாய்ப் பகுதி புற்றுநோய் (Cervical cancer)கர்ப்பப்பை உள் தோலில் வரும் புற்றுநோய் போன்றவற்றுக்காக இந்த அறுவை சிகிச்சையை அதிகம் செய்கிறார்கள். புற்று நோயின் வகையைப் பொருத்தும் அது தாக்கிய அளவுக்கு ஏற்றபடியும்  ரேடியேஷன், கீமோதெரபி போன்ற மற்ற சிசிக்சை முறைகளும் கையாளப்படுகிறது.  கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு மாற்று வழிகள் என்ன?டிரானேசமிக் ஆசிட், மெஃபெனமிக் ஆசிட் போன்ற மருந்துகள் மாதவிலக்கு ரத்தப் போக்கின் அளவைக் கணிசமாகக் குறைக்கின்றன. இதனால் கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கான தேவை குறைகிறது. ஒரு நவீன இன்ட்ராயூட்ரைன் டிவைஸ்  இருக்கிறது. அதை கர்ப்பப் பையில் வைத்தால், மருந்துகளை நேரடியாக கர்ப்பப்பையின் உள் தோலுக்குள் செலுத்தி ரத்தப் போக்கின் அளவை நன்றாகக் குறைத்துவிடுகிறது.
எண்டோமெட்ரியல் அப்லேஷன் என்ற முறையில் கர்ப்பப் பையின் உள்தோல் அழிக்கப்படுகிறது. மிக அதிக ரத்தப் போக்கின்போது இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s