நிஜத்தை பிரிந்த நிழல்


index

ஓராண்டு ஈராண்டு அல்ல. நாற்பத்திரண்டு ஆண்டுகாலம் முதல்வர் கலைஞரின் நிழலாக அவரைப் பின்தொடர்ந்து, கலைஞரின் கண் அசைவுகளைப் புரிந்து கொண்டு அவருக்குக் காரியமாற்றிய கலைஞரின் உதவியாளர் கே.சண்முகநாதன், கலைஞரை விட்டு விலகிப் போய் விட்டார் என்ற தகவல்தான் அது. `சண்முகநாதன் தானாக முன்வந்து விலகிக் கொண்டார்என்றும், `இல்லை! விலக்கப்பட்டார்என்றும், கண், காது, மூக்கு வைத்து அவரது விலகலைச் சுற்றி பல ஹேஷ்யங்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.இந்த நாற்பத்திரண்டு ஆண்டு சேவையில் ஏற்கெனவே இரண்டு மூன்று முறை கலைஞருடன் சண்முகநாதனுக்கு `ஊடல்கள்ஏற்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் தாற்காலிக ஊடல்கள்தான். தொண்ணூறுகளில் ஏற்பட்ட ஓர் ஊடல், ஓராண்டு காலம் வரை தொடர்ந்தது. அதன்பின் கலைஞரே விரும்பி அழைத்ததையடுத்து மீண்டும் கலைஞரின் நிழலாக மாறி கடமையைத் தொடர்ந்தார் சண்முகநாதன். இந்தநிலையில்தான் இப்போது மீண்டும் ஒரு பிரிவு இந்த இருவருக்கும் இடையில்  தலைகாட்டியிருக்கிறது. `இனி இது நிரந்தரப் பிரிவு!என்பதான ஒரு நெருடலும் நின்று நிலவுகிறது.இதுபற்றி நாம் கலைஞருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம். இந்தமுறை சண்முகநாதன் மீண்டும் கலைஞரிடம் வர வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லைஎன்றவர்கள், “கலைஞரின் கடும் அதிருப்தி மற்றும் கடுமையான வார்த்தைகளுக்குப் பின்புதான் சண்முகநாதன் விலகல் கடிதம் கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் தன் மனக்குமுறலை ஆக்ரோஷமாக கொட்டித் தீர்த்திருந்த அவர், `தேவைப்பட்டால் அந்தக் கடிதத்தை அனைத்து ஊடகங்களுக்கும் தரத் தயார்என்றும் குறிப்பிட்டிருந்தாராம். இது கலைஞருக்குக் கடும் கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்த… அதன் எதிரொலிதான் இந்தப் பிரிவுஎன்றன அந்த வட்டாரங்கள்.அறிவாலய வட்டாரத்தில் நாம் பேசியபோது, இன்னொரு தகவலையும் நமக்குச் சொன்னார்கள் அவர்கள்.கலைஞருக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்ட அந்த காலகட்டத்தில் தயாநிதி மாறன் ஒருமுறை கலைஞரைப் பார்க்க வந்திருந்தார். கோபாலபுரம் வீட்டு மாடியில் கலைஞரைச் சந்திக்கவும் செய்தார். `சரி! அப்புறம் பார்க்கலாம்என தயாநிதியை அனுப்பிவைத்த கலைஞர், அதன்பின் சண்முகநாதனைக் கூப்பிட்டு, `அப்பாயிண்மெண்ட் இல்லாமல் ஏன் உள்ளே விடுகிறாய்?’ என்று கடிந்து கொண்டார். இது சண்முகநாதனைச் சற்றுக் காயப்படுத்தியது. அதன்பின் கலைஞரின் பிறந்தநாளின் போது அவருக்கு வாழ்த்துச் சொல்ல தயாநிதி மாறன் வந்தபோது, `அப்பாயிண்மெண்ட் இருக்கிறதா?’ எனக் கேட்டு, அவரை முக்கால் மணிநேரம் காக்க வைத்திருக்கிறார் சண்முகநாதன். இதனால் அந்த பிறந்தநாள் சந்தோஷமே  கெட்டுவிட்டதாக தயாநிதி மாறன் சங்கடப்பட்டிருக்கிறார். தற்போது பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று கூடிவிட்ட நிலையில் கலைஞர் குடும்பத்துப் பெண்கள் மூலம் யாரோ கலைஞரின் மனதைக் கரைத்து, திட்டமிட்டு சண்முகநாதனின் பிரிவுக்கு வழிவகுத்து விட்டார்கள். கலைஞரின் கோபம் இந்த முறை சற்றுக் கடுமையாக இருந்து சண்முகநாதனைச் சங்கடத்திற்குள்ளாக்கி இந்தப் பிரிவுக்கு வழிவகுத்து விட்டதுஎன்றன அந்த வட்டாரங்கள்.இதை மறுத்து நம்மிடம் பேசிய வேறு சில  வட்டாரங்கள், “சண்முகநாதன் ஒருபோதும் கலைஞரின் குடும்ப விஷயத்தில் தலையிட மாட்டார். தனது எல்லை எது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் நாற்பத்திரண்டு  ஆண்டுகாலம் கலைஞரிடம் அவர் பணியாற்ற முடிந்தது. ஆனால் அண்மைக்காலமாக அவரது போக்கில் கொஞ்சம் அலட்சியம் ஏற்பட்டதென்னவோ உண்மைஎன்றவர்கள், மற்றொரு தகவலையும் நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.சந்திரயான் விண்வெளித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு கலைஞர் நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தார். அதற்காக அண்ணாதுரை கலைஞருக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவிக்க முயன்றபோது, `என்ன விஷயம்?’ என்று கேட்டிருக்கிறார் சண்முகநாதன். `அய்யாவுக்கு நன்றி தெரிவிக்கஎன்று அண்ணாதுரை சொன்னபோது, `நேரில் வந்து நன்றி சொல்லுங்கள்என்றிருக்கிறார் சண்முகநாதன். அதில் அண்ணாதுரை கொஞ்சம் அப்செட்டாகியிருக்கிறார். இந்தத் தகவலை அவர் கலைஞருக்கும் தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.இந்தநிலையில் ஒரு பொதுநிகழ்ச்சியில் கலைஞரின் மனைவி ராஜாத்தி அம்மாளும்அண்ணாதுரையின் மனைவியும் சந்தித்திருக்கிறார்கள். அப்போது அண்ணாதுரையின் மனைவி மூலம் அந்தத் தகவல் ராஜாத்தி அம்மாளுக்குத் தெரியவர… அவர் அதை கலைஞருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். கலைஞர் சற்றுக் கடுமையான வார்த்தைகளை சண்முகநாதன் மீது பிரயோகித்தது இதற்காகத்தான்என்றன அந்த வட்டாரங்கள்.அடுத்ததாக நாம் விசாரித்தது. கோட்டை வட்டாரத்தில்.கோட்டையில் முதல்வரின் உதவியாளராக இருக்கும் ராஜமாணிக்கம், கலைஞருக்குத் தான் மட்டுமே நெருக்கமாக இருக்க என்ற முனைப்பில் இருக்கிறார். அதற்குத் தடைக்கல்லாக இருந்தவர் சண்முகநாதன்தான். நடிகை நந்தினி வீட்டில் வேலைபார்த்த சிறுமி மீது பாலியல் பலாத்காரம் நடந்தபோது, அந்த விஷயத்தை சாஃப்டாக ஹேண்டில் செய்யும்படி டெல்லியில் இருந்து முதல்வருக்கு போன் வந்திருக்கிறது. அதை உடனே கவனிக்கும்படி கலைஞர், சண்முகநாதனுக்குச் சொல்லியும், அதை அவர் சீரியஸாக எடுத்துக் கொள்ளாததால் விஷயம் சீரியஸாகி விட்டது. இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்கிய ராஜமாணிக்கம் அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சண்முகநாதனைக் கவிழ்த்து விட்டார்என்றன அந்த வட்டாரங்கள்.இதுபற்றி அதிகாரிகள் தரப்பிடம் நாம் பேசியபோது, “இவை எல்லாமே தவறான தகவல்கள்என்ற அவர்கள், “சண்முகநாதனின் மனைவி தற்போது உடல்நலக் குறைவாக இருக்கிறார். பிள்ளைகளுக்குத் திருமணமாகி வெளியூர்களில் இருப்பதால் மனைவியை முழுக்க முழுக்க அருகிலிருந்து கவனிக்கும் பொறுப்பு சண்முகநாதனின் தோளில் விழுந்திருக்கிறது. கலைஞரின் உதவியாளர் பொறுப்பில் இருந்து அவர் விலக இதுதான் காரணம். தற்போது வீட்டைப் பூட்டி விட்டு சொந்த ஊரான தஞ்சைக்கு அவர் போய் விட்டார்என்றன அந்த வட்டாரங்கள். தேனாம்பேட்டை சொக்கலிங்கம் நகரிலுள்ள சண்முகநாதனின் வீட்டை நேரில் பார்த்து அதை நாம் உறுதிப்படுத்திக் கொண்டோம்.கலைஞரின் மேடைப் பேச்சுகளை சண்முகநாதன் அளவுக்கு யாரும் சுருக்கெழுத்தில் அப்படியே எடுத்து விட முடியாது. கலைஞரின் பேச்சுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துத் தருவது முதல், கலைஞரின் உடல்நிலைக்கேற்ப வேளாவேளைக்கு சீரகத் தண்ணீர் மற்றும் சுக்குத் தண்ணீர் போன்றவற்றை சூழல் பார்த்துக் கொடுக்கும் சண்முகநாதனுக்கு கலைஞரின் அத்தனை மூடும் அத்துப்படி. சண்முகநாதனின் இடத்தில் இனி இன்னொருவரை வைத்துப் பார்ப்பது கஷ்டம்தான்என்ற அமைச்சர் ஒருவர், “கடந்த புதனன்று சண்முகநாதன் விலகல் கடிதம் கொடுத்து மறுநாளும் கோபாலபுரம் வந்து எஞ்சியுள்ள வேலைகளைக் கவனித்தார். தான் விலகப் போவது தெரிந்தும் கலைஞர் குடும்பத்துப் பெண்கள் உள்பட யாரும் வந்து தன்னிடம் `என்ன? ஏது?’ என்று கேட்காதது அவரை ரொம்பவே வருத்தமடைய வைத்து விட்டது. இது இந்த விலகல் முடிவில் அவரை இன்னும் உறுதியாக்கி விட்டதுஎன்றார் அவர்.இந்தநிலையில் சண்முகநாதனின் சேவை அவசியம் தேவை என்று அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமியும், ஸ்டாலினும் அவரை மீண்டும் அழைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே சில முறை தளர்ந்த சண்முகநாதனின் முறுக்கு இந்த முறையும் தளருமா? என்பது தெரியாது. அவர் மீண்டும் கலைஞரின் நிழலாவாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. என்றாலும் ஆக வேண்டும் என்பதே பலரது விருப்பம்!

 

 

 

 

 

 

 

 

 

 

நன்றி; குமுதம் ரிப்போர்ட்டர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s