சூர்யா `அயன்’க்குத் தயார்


 

pg6

சூர்யா `அயன்க்குத் தயார். இயல்பான ஆக்ஷனில், தமன்னாவுடனான காதலும் களைகட்டும்என்று புன்னகைக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.`அயன்எதிர்பார்ப்பில் இருக்கிறதே. அதன் கதை-யென்ன? சூர்யாவை எப்படி மாற்றியிருக்கிறீர்கள?

சிந்தாதிரிப்பேட்டை, சௌகார்பேட்டை, தண்டையார் பேட்டை மாதிரியான ஏரியாவுல இருக்கிற மக்களின் படம். அந்த மக்களில் ஒருவனான இருபத்துமூன்று வயது வாலிபனின் வாழ்க்கை, அவன் வைக்கிற ஒவ்வொரு அடியும் பரமபதம் மாதிரி. அவன் வைக்கிற அடியில பாம்பு இருக்குமா, ஏணி இருக்குமான்னு தெரியாது. இந்த நிமிஷம் சந்தோஷமாக வாழ வேண்டுமென நினைக்கிற சூர்யா. பிதாமகனுக்குப் பிறகு சூர்யா நடிச்ச படங்கள்ல ஒரு இறுக்கமான, மனதுக்குள்ளே ஏதோ வைத்திருக்கிற கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அந்த ஃபீலிங் அயனுக்கு வேண்டாம் எனச் சொன்னேன். `வாரணம் ஆயிரம்படத்தில் அப்பாவாக நடித்து-விட்டு, `அயனுக்கு வருவார். கொஞ்சம் அந்த ஃபீல் இருக்கும். உடனே எங்கேயாவது ரவுண்ட் அடித்து-விட்டு வருவார். பிறகு `நச்னு அயனாக இருப்-பார். இரண்டே நாட்களில் சூர்யா முழு அவதாரம் எடுத்தார்.

பொதுவாகவே நம்முடைய ஒளிப்-பதிவாளர்கள் உலக சினிமா பற்றிப் பேசுகிற சீரியஸான ஆட்கள். இவர்களிலிருந்து வந்திருக்கும் நீங்கள் இயக்குநரானதும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் சமாசாரங்களுக்கு உட்படுகிறீர்களா
காலை வைத்ததும் தரை அதிர்வது, திரும்பினால் புயல் வீசுவது… இதிலெல்லாம் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஈடுபாடு இல்லை. என் இயக்கத்தில் இதெல்லாம் நிச்சயம் இருக்காது. கதை அனுமதிக்கிற பிரமாண்டமும், பாடல்களில் ரசிக்கக்கூடிய ஃபேண்ட-ஸியும் இருப்பதில் தவறில்லை என நினைக்கிறேன். `அயன்இந்த வகைப் படங்களில் ஒன்றாக இருக்கும்.

?

நம்முடைய சினிமாவில் ஒளிப்பதிவு உலகத் தரத்தில் இருப்பதாக நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நம்மைவிட ஹிந்தியில் தூள் கிளப்புகிறார்கள். நல்ல ஒளிப்பதிவாளர்கள் இருந்தும் நம்மால் ஏன் உலகத் தரத்தைத் தொடமுடியவில்லை
உலகத் தரத்தில் நம்முடைய ஒளிப்பதிவாளர்-களின் திறமை இருப்பது உண்மைதான். ஹாலிவுட் படங்கள் பல நூறு கோடி பட்ஜெட்டில் தயாராகும் படங்கள். அதனால் அவற்றை விட்டுவிடுங்கள். ஈரானியப் படங்கள், ஜப்பானியப் படங்கள், ஐரோப்பியப் படங்-களைப் போல நல்ல தரத்துடன் நம்முடைய படங்கள் இருக்கிறது. நம்மிடம் உள்ள ஒரே குறை ஒரே படத்தில் அம்மா – அப்பா பாசம், காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன், ஐந்து விதமான ஐந்து பாடல்கள், பாடல்களில் தனித்தனி காஸ்ட்யூம், பேக்-கிரவுண்ட் என இப்படி ஒரே படத்தில் இவ்வளவு விதவிதமான சமாசாரங்கள் இருக்க-வேண்டுமென நினைக்கிறோம். இதனால் ஒரு ஒளிப்பதிவாளர் எந்த ஸ்டைலில் முடிவு பண்ண முடியும்? தனி தீம் இல்லாமல்  ஒரு படத்தின் ஸ்டைல் இதுதான் என முடிவு பண்ண முடியாமல் போய் விடுகிறது.

?

ஹிந்தியில் வெளியில் வெளிவரும் நல்ல படங்களை மட்டுமே நாம் இங்கு பார்க்கிறோம். எல்லா படங்களையும் இங்கு வெளியிடுவதில்லை. தமிழ் சினிமா தலைநிமிர்ந்து நிற்கிறது. சந்தோஷப்-படுங்கள் சார்என்று உற்சாகமாய் சொல்வது நமக்கும் பெருமையாகத்தான் இருக்கிறது. தமிழ் ரசிகர்களே பெருமை கொள்ளுங்கள்..

 

 

குமுதத்திற்கு நன்றி

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s