அழுகையிலும் இருக்கிறது ஆனந்தம்


 மெக்சிகோவில் உள்ள ஜீனி சமுதாய மக்கள், மரணத்தின்போது பிணத்தை வைத்துக் கொண்டு நான்கு நாட்கள் கண்டிப்பாக அழவேண்டும் என்ற கட்டுப்பாடு இன்றும் உள்ளது. இதேபோல், ஜப்பான் நாட்டிலும் அழுவதற் கென்று தனி சீசன் உள்ளது! `கிரையிங் பூம்எனப்படும் இந்த சீசனில் தியேட்டர்களில் நிறைய சோகப் படங்கள் திரையிடப்படுவதும், டெலிவிஷனில் தாய்மார்களை கண்ணீரில் நனைய வைக்கும் நாடகங்கள் காட்டப்படுவதும் மிகப் பிரபலம்.

 

தந்தையால் வஞ்சிக்கப்பட்டவர் என்பதால் தங்கள் தாய் மீது மிகுந்த பற்றுடன் இருந்தார்கள் அந்த இரண்டு மகன்களும். வாட்டிய வறுமையிலும் வயதான தங்கள் அன்னையை குறையேதுமின்றி கவனித்து வந்தனர்.

ஒரு நாம் அந்த பரிதாப ஜீவனை இயற்கை அழைத்துக் கொண்டது. மிகுந்த துயரில் ஆழ்ந்தனர். பணம் மட்டும் இருந்தால் வாண வேடிக்கை முழக்கத்துடன் அம்மா உன் இறுதி ஊர்வலத்தை நடத்தியிருப்போம்என்று பிணமான தங்கள் தாயைப் பார்த்து அவர்கள் கதறினர்.

இதைக் கேட்டதும் அந்த ஊரே கைகொட்டி சிரித்தது. கஞ்சிக்கில்லாதவர்களுக்கு ஆசையைப் பாருஎன்று பரிகாசம் செய்தனர். இறுதி ஊர்வலம் எளிமையாகத் தொடங்கியது. அவ்வளவுதான். பயங்கர இடிச்சத்தம் தொடர்ந்து காதைப் பிளந்தது. மழை கொட்டியது.

இதைக் கண்டதும் இரு சகோதரர்களும் தங்களையே மறந்து வியந்தனர். பார்த் தீர்களா, அந்த இறைவன் நடத்திய வாண வேடிக்கையை? அந்த இயற்கையே எங்கள் தாயைக் குளிப்பாட்டி மகிழ்ந்ததைக் கண்டீர் களா?” என்று அகமகிழ்ந்தனர் அவர்கள்.

 

இக்கதை மூலம் பல உண்மைகளை நாம் தெரிந்து கொண்டாலும், சிரிப்பும் அழுகையும் நம் உடலோடும் உணர்வோடும் ஒன்றிப் போனவை என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும். மரணத்திலும் வியக்கலாம்… சிரிக்கலாம், மகிழ்ச்சியிலும் (ஆனந்தக் கண்ணீரோடு) அழலாம்.

 

ஆனால், எங்கு, என்ன கோளாறு நடந்ததோ தெரியவில்லை. அழுவது ஒரு பலவீனம் என்று எல்லோராலுமே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. “20-ஆம் நூற்றாண்டு கண்ணீரற்ற நூற்றாண்டு. வேதனைகளைப் பகிர்ந்து கொண்டு அழக்கூட நேரமில்லாமல் நாம் போய்க் கொண்டிருந்தோம். அழுவதற்கு கவுரவம் வேறு பார்க்கிறோம். இதன் விளைவு 21-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிரையிங் டிப்ரஷன் மூலம் நிறைய பேர் மாண்டுபோக வாய்ப்புண்டுஎன்கிறார் பிரபல எழுத்தாளர் கன்டர் கிராஸ்.

அண்மைக்காலம் வரை பெண்கள் திருமணமாகி தங்கள் பெற்றோரைப் பிரிந்து கணவர் வீட்டுக்குச் செல்லும் போது, “இத்தனை ஆண்டுகள் உங்களுடன் இருந்தேன். திடீரென கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல கணவரோடு போகிறேன். எப்படித்தான் இப்பிரிவை தாங்கிக் கொள்ளப் போகிறேனோஎன்று கதறி அழுவார்கள். அந்த அழுகையும் இப்போது குறைந்து வருகிறது.

 

மனிதன் பிறக்கும்போதே அழுது கொண்டுதான் பிறக்கிறான். இது ஏதோ சாபம் அல்ல. பிறகுதான் அந்த பச்சிளம் குழந்தையின் சுவாசப் பைகள் விரிந்து இயங்க ஆரம்பிக்கின்றன. ஆக நம் உயிரின் இயக்கமே அழுகையில்தான் தொடங்குகிறது. சிரிப்பதால் நம் உடலுக்கு ஆயிரம் பலன்கள் என்றால், அழுவதால் நம் உடலுக்கு லட்சம் பலன்கள். அது அறிவியல் ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை.

`நன்றாக அழுபவனே நன்றாக சிரிக்கத் தெரிந்தவன்; நன்றாக சிரிப்பவனே நன்றாக அழத் தெரிந்தவன்என்பதற்கு ஜோஷ் ஷிப் என்ற 24 வயது வெளிநாட்டவரே தக்க சான்று. பச்சிளங்குழந்தையாக இருந்த போதே ஜோஷ்ஷின் தாய் இறந்து விட்டார். மாற்றாந் தாய் கையால் தினம் ஒரு சூடு அவன் உடலில். குழந்தை பசியுடன் பார்க்க, தின்று தீர்ப்பாள் அந்த மாற்றாந் தாய்.

 

பள்ளியிலும் சித்ரவதைதான். தாய் இல்லாத தறுதலை என்று ஆசிரியர்களும், மாணவர்களும் அவமான அர்ச்சனை செய்தனர். இப்படி வறுமை, கொடுமை, அவமானம் என வளர்ந்த ஜோஷ் இப்போது யார் தெரியுமா? பள்ளி, கல்லூரி, கம்பெனி என தினம் இரண்டு நிகழ்ச்சிகளில் ஒரு மணி நேரம் பேசி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு ஹியுமர் எக்ஸ்பர்ட். இவரின் ஒரு நாம் வருமானம் 45 ஆயிரம் ரூபாய்.

 

பெண்கள் ஆண்களை விட அதிகமாக அழுவது பண்டைய காலத்திலிருந்தே தொடர்ந்து வரும் விஷயம். புரோளாக்டின் ஹார்மோன் அவர்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் கண்ணீர் ரெடிமேடாக வருகிறது. ஆனால், அவர்கள் விடும் கண்ணீருக்கு சக்தி அதிகம் என்பது அனுபவஸ்தர்களுக்குத் தெரியும். ஓ மானிடா, பெண்கள் விடுவது முதலைக் கண்ணீர் அல்ல. ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் ஒரு முதலையின் அளவுக்கு சக்தி வாய்ந்ததுஎன்கிறார் பிரசாத்ம முனிவர்.

 

தாங்கள் தின்னும் உயிர்களை ஏமாற்றவும் அல்லது அவைகளை கொன்று தின்ன முடியவில்லையே என்று வருந்தவும் முதலைகள் அழுவதாகவும், இதனால்தான் முதலைக் கண்ணீர் என்ற சொற்றொடர் வந்தது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல. தண்ணீர் இல்லாத போது முதலைகளின் கண்கள் மட்டும் கசிவது போல இருக்கும். அது அழுகையல்ல என்பது விஞ்ஞான விளக்கம். யானை கூட தன் கண்களை சுத்தப்படுத்தவே ஒரு வகையான திரவத்தை வரவழைத்துக் கொள்கிறது. எது எப்படியோ மனிதன் மட்டுமே அருமையாக அழுகிறான்.

வேண்டியவரின் மரணம், எதிர்பாராத தோல்வி, பெருத்த ஏமாற்றம், தாங்க முடியாத அவமானம் இந்த நான்கும் வாழ்வில் நேரும் போது நம் உடலும், உள்ளமும் குலுங்குவது உண்மை. இது துரதிர்ஷ்டமே. ஆனால், இதில் உள்ள அதிர்ஷ்டத்தையும் பாருங்கள். எமோஷனல் டியர்ஸ் எனப்படும் கண்ணீர் இச்சமயங்களில் நம்மைக் காக்க முற்படுகிறது. நாம் அழும்போது வெளிவரும் இந்த எமோஷனல் கண்ணீரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மாங்கனிசும், ஹார்மோன்களும் வெளியேறி விடுவதால் நம் உடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. மேலும் நாம் சிந்தும் கண்ணீர் வெறும் உப்புத்தண்ணீர் அல்ல. வியுசின் என்கப்பளின் எனப்படும் மனவலி நிவாரண மருந்து அதில் உள்ளது. மொத்தத்தில், அழுகை மனித உடலின் வேஸ்ட் கேட் (தங்கத்தகாத கிருமிகம் வெளியேறும் வழி) எனப்படுகிறது.

எனவே, சிரிப்பும் அழுகையும் இரட்டைப் பிறவிகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதில் ஒரு குழந்தையை (சிரிப்பு) வரவேற்பதும், இன்னொரு குழந்தையை (அழுகை) நிராகரிப்பதும் உடல் என்கிற தாய்க்கு நல்லதல்ல.

 

 

இதை உணர்ந்துதான், மெக்சிகோவில் உள்ள ஜீனி சமுதாய மக்கள், மரணத்தின்போது பிணத்தை வைத்துக் கொண்டு நான்கு நாட்கள் கண்டிப்பாக அழவேண்டும் என்ற கட்டுப்பாடு இன்றும் உள்ளது. இதேபோல், ஜப்பான் நாட்டிலும் அழுவதற்கென்று தனி சீசன் உள்ளது! `கிரையிங் பூம்எனப்படும் இந்த சீசனில் தியேட்டர்களில் நிறைய சோகப்படங்கள் திரையிடப்படுவதும், டெலிவிஷனில் தாய்மார்களை கண்ணீரில் நனைய வைக்கும் நாடகங்கள் (நம்மூர் சீரியல்கள் போல) காட்டப்படுவதும் மிகப்பிரபலம்.

 

 

எந்தத் துயரம் நம்மைத் தாக்கினாலும், அதை நாம் `அழுவதற்கு முன், அழுவதற்கு பின்என இரண்டு கோணங்களில் பார்க்க வேண்டும். அழுவதற்கு முன், பதற்றம், பயம், விரக்தி, மயக்கம், மன அழுத்தம் போன்றவை நம் உடலையும், உள்ளத்தையும் பற்றிக் கொள்கிறது. அழுதுவிட்டால், ஏதோ மலையளவு பாரத்தை இறக்கி விட்டதாக உணர்கிறோம். எனவே, அழுகை வந்தால் கண்ணீரை அடக்க வேண்டாம்; வாரி வழங்குங்கள்.

 

1997-ல் இங்கிலாந்து இளவரசி டயானா அகால மரணமடைந்த போது உலகமே அழுதது. இங்கிலாந்து மக்கள் மீளாத்துயரில் ஆழ்ந்தனர். சில நாட்கள் கழித்து அங்கு ஒரு அதிசயம் நடந்தது. தொடர்ந்து சில நாட்கள் மனம் விட்டு அழுதவர்கள் அதற்குப்பின் தத்தம் பணியைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். வீரர்கள் என நினைத்து தங்கள் சோகத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவர்கள், ஏதோ பேய் அறைந்தது போல காணப்பட்டதுடன், டாக்டர்களை கன்சல்ட் பண்ண வேண்டிய நிலைக்கு ஆளாயினர்.

 

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தொடர்ந்து சிரித்து உயிர்விட்டவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் அழுது இறந்தவர்கள் யாரும் இல்லை. அழாததால் இறந்தவர்கள் உண்டு.

1995-ல் கூடிஸ் என்ற டெலிவிஷன் தொடரில் நடிக்கும்போது நீண்ட நேரம் சிரித்துக் கொண்டே உயிர்விட்டார், அலெக்ஸ் மிக்சல் என்ற நடிகர். ஆனால், “வலியால் துடிப்பாய், அழுவாய்என்று டாக்டர்கள் எவ்வளவோ சொல்லியும், “எனக்கு எப்போதும் அழுகை வராது. நீங்கள் ஆபரேஷனைத் தொடங்குங்கள்என்று கஷ்டப்பட்டு அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்ட தெற்கு கரோலினா நகர நோயாளி ஒருவர் கடைசியில் ஆபரேஷன் வெற்றி பெற்றதும் இறந்து விட்டார். இதை வைத்துத்தான் `ஆபரேஷன் இஸ் சக்சஸ்புல், பட் தி பேஷன்ட் இஸ் டெட்‘ (ஆபரேஷன் வெற்றி; ஆனால் நோயாளி இறந்து விட்டார்) என்ற அற்புத பழமொழி உருவாக்கியிருக்கக்கூடும்.

ஆக, `அழுதால் தொலைத்துவிடுவேன்என குழந்தைகளை மிரட்டுவதும், `அழுகிறாயே, நீயெல்லாம் ஆண்மகனா?’ எனக் கேட்பதும், `அழுமூஞ்சிஎன பரிகாசம் செய்வதும், `அழுது, அழுது வீட்டைக் குட்டிச் சுவராக்காதேஎனத் திட்டுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

 

இதற்காக அனுதினமும் ஒப்பாரி வைக்கும் எக்சர்சைஸ் செய்ய வேண்டும் என்பதில்லை. சிரிப்போ, அழுகையோ இயற்கையாக நிகழ வேண்டும்.

`அழும் வரை சிரியுங்கள், சிரிக்கும் வரை அழுங்கள்என்பதை வேதவாக்காக எடுத்துக் கொள்வோம். உடலையும், உள்ளத்தையும் சீராக வைத்துக் கொள்வோம்.

 

– குடும்பமலரிலிருந்து எடுத்து பதித்தது.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s