போர் அவசியமா?


 

மும்பை தாக்குதலால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான நம் தேசம் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகள் அபரிதமானவை. இதற்கு முந்தைய தீவிரவாதிகளின் மிகப்பெரிய தாக்குதலான பாரளுமன்ற தாக்குதலின் போது அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுகொல்லப்பட்ட நிலையில் நம்மிடம் உறுதியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் தயார் நிலைப்படுத்தப்பட்ட போர் சூழல் கைவிடப்பட்டது. ஆனால் இந்த முறை உறுதியான பல ஆதாரங்கள் உள்ள நிலையில் அதுவும் அதை  பல நாட்டு தலைவர்களிடம் தந்து கலந்தாலோசித்து கொண்டிருக்கும் இந்தியாவுக்கு அமெரிக்காவும் ஒப்புதல் தரவே செய்கிறது.

 

புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஓபாமாவும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் ஒத்துழைப்போம் என பாகிஸ்தான் அதிபர் கூறியுள்ளது. அதை முழு அளவில் செயலிலும் காட்ட வேண்டும் என்றும். பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை அந்த நாட்டின் அனுமதி இல்லாமலேயே இந்தியா தாக்க அதிகாரமுள்ளதா என்று கேள்விக்கு பதிலளித்த ஓபாமா  சுதந்திரமான, இறையாண்மை கொண்ட எல்லா நாடுகளுக்கும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முழு உரிமை உண்டு.  என்றும் தெரிவித்துள்ளார். அது தவிர டெல்லியில் நம் பிரதமரை சந்தித்த இங்கிலாந்து நாட்டு பிரதமர் பிரவுன் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம், மும்பையில் நடந்த மிகக் கொடுமையான தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் காரணம். இதற்கு பாகிஸ்தான் கண்டிப்பாக பதிலளித்தாக வேண்டும் என்றார்.

 

அதே சமயத்தில் இந்தியா ஒரு போதும் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க போவதில்லை. மாறாக தீவிரவாத முகாம்களைத்தான் தாக்கும் அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சிக்கு பென்டகன் அதிகாரிகள் 3 பேர் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளனர்.

 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்க இந்திய விமானப்படை தயார்படுத்தப்பட்டது. உச்சகட்ட உஷார் நிலையில் இந்திய விமானப்படை வைக்கப்பட்டது. வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

 

 

இந்த நடவடிக்கையை இந்தியா தீவிரமாக கடைப்பிடித்திருந்தால் நிச்சயம், பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது முழு அளவிலான தாக்குதலை இந்திய விமானப்படைநடத்தியிருக்கும்.

 

ஆனால் அமெரிக்க மூத்த அதிகாரிகள் அமைதி காக்குமாறும், தாக்க வேண்டாம் எனவும் தொடர்ந்து இந்தியாவை வலியுறுத்தியதால் தனது திட்டத்தை இந்தியா நிறுத்தி வைத்தது.

 

பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கும் திட்டம் இந்தியாவிடம் இல்லை என்று புஷ் நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும் இந்தியா தாக்குவதற்குத் தயாராக இருந்தது என்று அவர்கள் கூறியுள்ளனர்

 

இந்நிலையில் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இந்தியாவிடம் இல்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே அந்தோணி கூறியுள்ளார்.

 

பங்களாதேஷ் போரில் இந்தியா பெற்ற மகத்தான வெற்றியின் 37-ம் ஆண்டு விழாவான விஜய் திவாஸ்நிகழ்ச்சியில் பேசிய அந்தோணி இதைத் தெரிவித்துள்ளார்.

 

நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

 

இந்தியாவில் நாச வேலைகள் செய்த தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தீவிரவாதிகளை மேலும் விரைந்து அழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் இப்போது விரும்புகிறோம். அப்போதுதான் இருநாட்டு உறவுகளும் மேம்படும்.

 

அதேநேரம், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் அனைவர் மீதும் முழுமையான நடவடிக்கைகயை பாகிஸ்தான் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை இயல்பாக இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் படை வீரர்கள் எப்போதும் போல் உஷாராக உள்ளனர். ஆனால் புதிதாக படை வீரர்களைக் குவிக்கவில்லை. இயல்பு நிலை நிலவுகிறது.

 

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமலில் உள்ள போர் நிறுத்தத்தை இந்தியா விலக்கிக் கொண்டதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு. இன்னமும் போர் நிறுத்தம் அமலில் உள்ளது என்றார் அந்தோணி. அதே சமயத்தில்

 

இங்கிலாந்தைச் சேர்ந்த தி டெலிகிராப் இதழ் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து உலகின் 20 அபாயகர நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

 

மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துள்ளனர்

 

இந்தப் பட்டியலில் இந்தியா தவிர பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், பாலஸ்தீனம், மெக்சிகோ, தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன.

 

அமைதியான ராணுவ நடவடிக்கையில் நம்பிக்கையில்லாத நாடாக வலம் வந்த நமக்கு இப்படி பெயர் கிடைக்குமானல் நம் நடவடிக்கை என்ன?

 

இப்படியாக தீவிரவாதத்திற்கு எதிரான போர் தொடுக்க காரணங்களும் ஆதாரங்களும் உள்ள நிலையிலும் பல நாடுகளின் ஒப்புதல் மற்றும் ஆதரவு உள்ள நிலையில் இந்தியா அமைதி காத்து வருகிறது என்றால் உலகில் இந்தியாவின் மதிப்பு இன்னும் உயரத்தான் செய்கிறது. அதே சமயத்தில் இது போன்ற இன்னொரு தாக்குதலை இனி இந்தியாவுக்குள் நடத்த விட மாட்டோம் என உறுதி பெற்று இந்திய அரசு செய்து வரும் நடவடிக்கைகளை பாராட்டாமல் இருக்க முடியாது எப்படியோ இப்படி ஒரு கருப்பு தினத்தை தந்த அந்த கொடியவர்களை ஒடுக்க வேண்டும். பொதுமக்களுடைய கருத்தும் இதுவாகத்தான் இருக்க முடியும்.

 

ஆக எல்லா தரப்பினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை வலியுறுத்தும் நிலையில் இந்தியா மட்டும் இன்னும் அமைதி காத்து வருகிறது அவ்வப்போது தயார் நிலை என்ற செய்திகள் வந்த போதிலும் அமைதி நாடான இந்தியா அமைதியான நடவடிக்கையையே எதிர்பார்க்கிறது அதற்கு முழு அளவிலான ஒத்துழைப்பை பாகிஸ்தான் செய்யும் ஆனால் அது போரை தடுக்கும் செயலாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. அதே சமயத்தில் போர் பயம் கொண்ட பாகிஸ்தான் தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருது தற்காலிகமாக தப்பும் வேலையில் தான் இருக்கிறது மாறாக இந்தியாவுக்கான முழு ஆதாரவில் இல்லை என்பதை வரும் செய்திகள் உணர்த்தியிருக்கும் நிலை இந்தியாவின் அடுத்த நிலை என்ன?

 

போர் என்பதால் நமக்கும் இழப்புகள் அதிகம் என்பதை உணர வேண்டும் அதே சமயத்தில் அடிக்கடி வரும் நோய்களுக்கு தினம் மருத்துவரை பார்ப்பதை விட தொற்றிக்கொண்ட அந்த வைரஸ்ஸை அழிக்க முற்படுவதுதான் புத்திசாலித்தனம். 60 ஆண்டுகளாக இம்சித்து வரும் இந்த காளான்களை அறுவடை செய்வது எப்போது?

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s