நிதிப் பிரச்சினை-தடுமாறும் சினிமா


 

 

 

லகப் பொருளாதார நெருக்கடியால் பல வங்கிகள், நிறுவனங்கள் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் நிலையில் இந்தித் திரையுலகமான பாலிவுட்டும் நிதிப் பிரச்சினையில் சிக்கி தகிக்க ஆரம்பித்திருக்கிறது.

 

பல பெரும் பட்ஜெட் படங்களை நிறுத்தி வைக்கவும், பட்ஜெட்டை சுருக்கவும் பாலிவுட் தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

பொருளாதார நெருக்கடியால், விநியோகஸ்தர்கள்தான் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் முகேஷ் பட் கூறுகிறார்.

 

படம் எடுத்து முடித்தாலும் கூட, அதை வாங்குவோரைக் கண்டுபிடிப்பது சிரமமாகி விட்டது. மேலும் போட்ட பணம் திரும்ப வருமா என்பதிலும் உத்தரவாதம் இல்லை. பொருளாதார வீழ்ச்சியால் தற்போது தயாரிப்பில் இருக்கும் 9 சதவீத படங்கள் அப்படியே நின்று போயுள்ளன

 

இந்த அவல நிலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிப்புத் துறைக்குள் கால் எடுத்து வைத்ததுதான் என்கிறார் முகேஷ் பட். அவர்கள்தான் இந்த அளவுக்கு இன்டஸ்ட்ரி பெரும் சிக்கலை சந்திக்க முக்கிய காரணம்.

 

நடிகர், நடிகையருக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பளத்தை பெருமளவில் உயர்த்தியதால், தயாரிப்பாளர்களுக்குத்தான் இப்போது அவதி.

 

40 கோடி, 50 கோடி என டாப் கியரில் போய்க் கொண்டிருந்த பல இந்தி நடிகர்களின் சம்பளத்தை தடாலடியாகக் குறைத்துள்ளன கார்ப்பரேட் நிறுவனங்கள்.

 

ரூ.70 கோடி வாங்குவதாகக் கூறப்பட்ட அக்ஷய் குமாரின் சம்பளத்தை 10 கோடியாகக் குறைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். மற்ற நடிகர்களின் தம்பளமும் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

இதே நிலை கோலிவுட்டியிலும் நடைமுறைக்கு வருகிறது.

உச்ச நடிகராகத் திகழும் ரஜினிகாந்த் மட்டும் இதில் விதிவிலக்கு. தொடர்ந்து படங்கள் நடிக்காததாலும், அவரது படத்தில் பெரும்பாலும் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் ரஜினிக்கு சம்பளம் பேசப்படுவதாலும் அவர் மட்டும் விதி விலக்காகிறார்.

 

ஆனால் மற்ற நடிகர்கள் அனைவருக்குமே சம்பளத்தைக் குறைத்தே தீர வேண்டிய நிலை.

 

கமல், விஜய், அஜீத், சூர்யா, விஷால், சிம்பு, தனுஷ், ஜெயம்ரவி, பரத் போன்றோர் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ளனர்.

 

இவர்களில் கமல்ஹாசனும் இப்போது சம்பளமாக எதையும பேசிக் கொள்வதில்லை. ரஜினி வழியில் அவரும் லாபத்தில் பங்கு கேட்க ஆரம்பித்துவிட்டார். அல்லது முதல் பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரித்து வெளியீடு வரை கொண்டு வந்து தரும் பொறுப்பை மட்டும் ஏற்கிறார்.

 

சமீபத்தில் அவர் இயக்கவிருந்த புதுப்படம் மர்மயோகிக்கு கமலஹாசன் ரூ.100 கோடிக்கு பட்ஜெட் கொடுத்துள்ளார். பொருளாதார சரிவு காரணமாக இப் படத்தின் தயாரிப்பு செலவைக் குறைக்குமாறு பிரமீடு சாய்மீரா நிறுவனத்தை கமலஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்

 

நடிகைகளில் நயன்தாரா, திரிஷா,ஸ்ரேயா, பிரியாமணி, பாவனா, சந்தியா, நமீதா போன்ற நாயகிகள் அதிக சம்பளம் பெறுகிறார்கள். இயக்குனர் லிங்குசாமி படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ரூ.1.20 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

 

இந்த அதிகபட்ச சம்பள உயர்வுக்குக் காரணம் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகைதான் என்கிறார்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்

இப்படி நிதிபிரட்சனையில் சினிமா தவித்து கொண்டிருக்கும் சமயம் அது மணிரத்னத்தின் அசோகவனத்தையும் பாதித்துள்ளது

 

ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் தயாரிக்கும் பிரமாண்டப் படம்தான் அசோகவனம். மணிரத்தினம் இப்படத்தை தமிழ் மற்றும் இந்தியில் இயக்கி வருகிறார்.

 

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரியா மணி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு கேரளாவில் நடந்து கொண்டிருக்கிறது.

 

இப்படத்தை ரூ. 120 கோடியில் தயாரிக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்த பட்ஜெட்டைக் குறைத்துக் கொள்ளுமாறு ரிலையன்ஸ் நிறுவனம், மணிரத்தினத்தை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளதாம்.

 

அந்தக் கடிதத்தில், படத் தயாரிப்புச் செலவில் பாதியைக் குறைத்துக் கொள்ள முயற்சியுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

 

மேலும், தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையின் பின்னணியில் இப்படத்திற்கு பெரிய அளவில் வர்த்தகம் இருக்க வாய்ப்பில்லை. எனவே செலைவைக் குறைத்தே ஆக வேண்டும் எனவும் ரிலையன்ஸ் பிக் பிக்சர்கள் கூறியுள்ளதாம்.

 

இதனால் ஒன்று செலவைக் குறைக்க வேண்டும் அல்லது வேறு தயாரிப்பாளரை நாட வேண்டும் என்ற நிலைக்கு மணிரத்தினம் தள்ளப்பட்டுள்ளார்.

 

கேரளாவில் விறுவிறுப்பாக ஷூட்டிங் போய்க்கொண்டுள்ள நிலையில், செலவைக் குறைக்குமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளதால் அப்செட் ஆகியுள்ளாராம் மணி.

 

இதுமட்டுமல்லாமல், சேரன் நடித்து இயக்கவிருந்த ஆட்டோகிராப்௨, ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த சிங்கம், பாசிலின் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பதாக இருந்த புதிய படம் ஆகியவற்றையும் ரிலையன்ஸ் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாம்.

 

இப்படி நிதி நெருக்கடி என்ற பூதத்தால் மாட்டிகொண்டுள்ள சினிமா உலகம் மீள வேண்டுமானல் அது கடை பிடிக்க வேண்டியவைகள் ஏராளம் அவற்றில் சில

 

நடிகர்களுக்கு கதை செய்யும் படம் செய்யும் கேவலமான பழக்கத்தை இயக்குனர்கள் கைவிட வேண்டும். மாறாக கதை செய்து அதற்கேற்ப நடிகர்களை அதில் நடிக்க வைக்கும் போது அவசியமில்லாத சம்பளம் பிரட்சனை வருவதில்லை.

 

இயல்பான காட்சிக்கு கூட அயல்நாடுகளுக்கு பறக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும்.

 

சினிமா என்ற ஊடகத்தின் தூண்களான இயக்குனர்கள் தங்களுக்குள்ள மரியாதைய இழக்காமல் இருக்க வேண்டும்.

 

இன்னைக்கு வந்த நடிகர் எல்லாம் சினிமா உலகமே தன்னைத்தான் நம்பியுள்ளது என்ற நினைப்பை தூர எறிந்து தானும் சினிமா உலகில் ஒரு பணிக்காரன் என்ற எண்ணத்தில் வேலை செய்ய வேண்டும்

 

கதைக்கு தேவையான பட்ஜெட் என்பது போய் பட்ஜெட்டுக்கான கதைகள் அதிகரித்துள்ள நிலையில் அது குறைந்து கதைக்கான பட்ஜெட் மட்டும் போதுமானதாக மாறினால் சினிமா உலகம் பாதுகாக்கப்படும் அதை நம்பி வாழும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வும் பாதுகாக்கப்படும்.

 

 

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s