மீனவர்களை பாதுகாப்பது யார்?


 

இலங்கை கடற்படையின் வெறியாட்டம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு

 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சுட்டது. பலி 2

 

காணமல் போன மீவர் நிலை என்ன? இரண்டாவது நாளாக தேடும் படலம் தொடர்கிறது.

 

இது போன்ற செய்திகள் மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறோம் முதல் முறை கவலையாக இருந்தது இரண்டாம் முறை வருத்தப்பட்டோம் மூன்றாம் முறை கோபப்பட்டோம் நான்கு ஐந்து என இன்னும் இன்னும் . . . இனி என்ன செய்ய போகிறோம்

 

இந்திய பெருநாட்டின் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் வாழும் இந்திய குடிமக்கள்தான் கொல்லப்படுகிறார்கள். பேச வேண்டிய இந்திய அரசாங்கம். பேசுகிறது ஆம் பேசத்தான் செய்கிறார்கள் இரு நாட்டு தலைவர்களும். அடிக்கடி கூட்டங்கள் ஆலோசனைகள் அத்தனையும் முடிந்த பின் அறிக்கைகள் . .

 

“இனி இலங்கை கடற்படையினரால் இந்திய மீவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை அதற்கு உறுதியளிக்கிறோம்”

 

மீண்டும் அதே சம்பவம் தொடரும்

 

இதை பத்திரிகை மூலமாக படித்ததும் அப்படியே நம்பி கடலுக்குள் செல்லும் மீண்வன் உயிரோடு வருவது சாத்தியமானதா? இடி மின்னல் மழை ஏன் சுனாமி கூட நம் மீவர்களை அசைத்து விடுவதில்லை பயம் இல்லாத அவன் மனதில் இப்போ பயம் எட்டி பார்க்கிறது யாரைக்கண்டு சிந்தித்து பார்ப்போமா.

 

இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்துவதற்கு பல்வேறு காரணங்களை காட்டலாம். ஏன் தவறில்லை என்று கூட வாதிடலாம் இந்த வாதத்தை கண்டு மீவன் பயப்பட போவதில்லை காரணம் அவனுடம் அவன் தேசம் உண்டு என்ற எண்ணம். அது இல்லை என்று எண்ணத்தொடங்கும் போதுதான் பயம் வரும்.

 

மீன் பிடிக்க செல்லும் மீனவன் கொண்டுபோக வேண்டியவை மீன்பிடிக்க வலை, பிடித்த மீனை கொண்டுவர பெட்டிகள்  அது இல்லாது இனி அவன் போருக்கு போவது போல் போகவேண்டுமா. அது சாத்தியமாகுமா

 

இலங்கை கடற்படை செய்யும் செயல்கள் இவை என்றால் இந்திய கடற்படை என்ன செய்கிறது. விடுதலை புலிகளின் ஊடுறவலை தடுக்கும் வண்ணமாக ரோந்து பணியில் உள்ள நம் கடற்படை நம் மீவர்களை காக்க வேண்டாமா? அவர்களையும் மீறிதான் இப்படி துப்பாக்கி சூடு நடக்கிறதென்றால் எப்படி? ஏன்?

 

ராமேஸ்வரம் மற்றும் நாகை மீவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் காரணம் அப்பகுதிகள்தான் இலங்கைக்கு அருகில் உள்ளது. அதிலும் மீன் பிடிப்பதுதான் வருமானம் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட மீவ சமுதாயத்திற்கு அத்தொழிலும் செய்ய இத்தனை சிக்கல்கள் என்றால் என்ன செய்ய முடியும்

 

நம் அரசாங்கம் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது நம் மீவர்களுக்கான பாதுகாப்பு குறித்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை. 1983 முதல் 25 ஆண்டுகளாக நடந்து வரும் இக்கொடுர சம்பவம் இனியும் தொடர வேண்டுமா?

 

இனியும் இது குறித்த விவாதத்தில் விடுதலை புலிகளையோ அதற்கு உதவு செய்பவர்களையோ இந்திய அரசாங்கம் காரணம் காட்டுவது தவறு. தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்ட இயக்கத்திற்கு உதவுவது தவறானதே. இனியும் அக்காரணத்தை காட்டி மீவர்கள் மீது நடக்கும் இந்த போக்கை தட்டி களிக்க வேண்டாம். இது அடுத்தவர் பிரட்சனையோ அல்ல அடுத்த தேசத்தின் பிரட்சனையோ இல்லை நம் தேசம் நம் மக்கள் இதை தடுக்க நாம் தான் முடிவு எடுக்க வேண்டும்

 

முடிவு எடுக்குமா…….?

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s