சூப்பர் ஸ்டார் வயது 59


 ரு தடவை சொன்னா

நூறு தடவை சொன்னமாதிரி

 நூறு தடவை சொல்லிட்டார் “ஆண்டவன் நினைத்தால் வருவேன்” அதை கேட்டு கேட்டு நிதானம் இழந்த ரசிகன் இன்று கேட்கிறான் என்னைக்கு வருவேன்னு ஒரு தடவை சொல்லுங்க என்று.

 

யாருக்கும் தான் யார் என காட்ட வேண்டிய நிர்பந்தம் இல்லை ரஜினிக்கு. அடைய வேண்டிய உயரம் அடைந்துவிட்ட பிறகு இன்னும் அடைய என்ன இருக்கிறது. திகட்ட திகட்ட வெற்றிகளை ருசித்ததுண்டு அப்பப்போ அடியும் பட்டதுண்டு ஆனாலும் ஆன்மீகம் என்ற கோட்டைக்குள் ராஜாவாகத்தான் இருக்கிறார். வெற்றிகளில் ஆட்டத்தையும் தோல்விகளில் ஒடுக்கத்தையும் கண்டதில்லை நாடு.

 

இன்று நடிகன் என்ற நிலை மீறி கோடானகோடி உள்ளங்களில் சிம்மாசனம் அமைத்து இருக்கும் ரஜினி இதை அடைந்தது எப்படி என்பதை இந்த உலகம் அறியும்.

 

ரஜினிக்கு ரசிகன் அதிகம் செய்து விட்டான் 25 ஆண்டுகால சூப்பர் ஸ்டார் பட்டம் தந்த ரசிகனுக்கு ரஜினி செய்ய விரும்பவது என்ன?

 

சினிமாக்களில் நம்பியவரை கைவிடாத ரஜினி ரசிகர்களை கைவிடமாட்டார் என்பது அவருக்கே தெரிந்த நிலையில் என்ன செய்ய போகிறார் என்ற குழப்பத்தில் மட்டும்தான் ரசிகர்கள் ஆனால் எப்படியும் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை இன்னும் அவர்களோடு ஒட்டிகொண்டிருக்கிறது

 

அதற்கான நேரம் வந்துவிட்டதாக கோடிட்டு காட்ட ஆரம்பித்து இருக்கிறார். அதன் முதல் கட்டமாக இதுவரை எதிரிகளால் கன்னட நாட்டவர் என்று விமர்சிக்கப்பட்ட இமேஜை உடைக்கும் விதமாக ரஜினியும் தமிழன் தான் என்ற செய்திகள். மாராட்டியத்திலிருந்து புலம்பொயர்ந்த போது முதலில் வந்த இடமாகத்தான் கிருஷ்னகிரி அருகே உள்ள நாச்சிகுப்பத்தை சுட்டி காட்டும் செய்தி அங்கேதான் ரஜினி பிறந்ததாகவும் பின் பணியின் நிமித்தமாக கர்நாடகா சென்றதாக வரும் செய்திகள் அவரை தமிழ் நாட்டில் பிறந்தவர் என்று சொல்லத்தொடங்கும் வேளையில் இனி அந்த தடையும் இல்லை

 

நேரம் வரட்டும் நேரம் வரட்டும் என்று மேலே கை காட்டியவரின் சமீப கால நடவடிக்கைகள் ஆச்சரியப்படுத்துகின்றன. காவேரி உண்ணாவிரதம் அதிலே பேசிய பேச்சு, இலங்கை தமிழர்களின் நிலை குறித்த கவலை மற்றும் அந்த ஆதரவு பேச்சு எல்லாமுமாக சேர்ந்து இமயமலையில் இருந்த அவரை தமிழகம் நோக்கி இளுத்து வருகிறது எனலாம் அல்லவா.

 

நடிகன் நாடாளக்கூடாது என்ற கருத்து நிலவும் அதே சமயத்தில் நாட்டை நேசிக்கும் எந்த நடிகரும் நாகரீகம் தெரிந்த எந்த நடிகரும் நாட்டை ஆளுவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை

 

நாட்டின் மீதான அக்கரையை வார்த்தைகளில் மட்டுமல்லாது செயலிலும் அடிக்கடி காட்டுபவர் ரஜினி எடுத்துக்காட்டாக நதிநீர் இணைப்புக்கு குரல் கொடுத்து ஒரு கோடி நிதியும் தருவதாக அறிவித்ததும் நினைவிருக்கலாம்.

 

நாகரீகம் பற்றி சொன்னால்

பிரபலம் கொடுத்த அதிகாரத்தை அவர் தனது எதி‌‌ரிகளின் மீது ஒருபோதும் பிரயோகித்தது இல்லை.

 

மனோரமா, மன்சூர் அலிகான், வேலு பிரபாகரன் போன்றோர் அவரை விமர்சித்த போது ர‌ஜினியின் எதிர்தாக்குதல் அரவணைப்பாகவே இருந்ததை நாடறியும்.

 

 

இன்றைய தேதியில் அவரை தவிர்த்த தமிழக அரசியல் சாத்தியமில்லை. சட்டமன்ற தேர்தலின்போது அவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடு மாற்று அரசை உருவாக்க பெ‌ரிதும் உதவியது. இதனை ர‌ஜினியின் தனிப்பட்ட வெற்றியாக சோ போன்றோர் முன்னிறுத்தினார்கள் ஆயினும் அதன் பின் வந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே ஆதரவு தெரிவித்த கட்சி தோல்வியை சந்தித்தாலும் ரஜினியின் செல்வாக்கு அசைக்கபடவில்லை. வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்ந்து பழகிவிட்ட, வெற்றியும் தோல்வியும் பழக்கப்பட்ட, தோல்விகளை வெற்றிப்படிகட்டிகளாக மாற்ற தெரிந்த ர‌ஜினிக்கு அரசியலுக்கு‌‌ரிய பொறுமையும், சாதுர்யமும் உண்டு என்பதில் ஆச்ச‌ரியமில்லை.

 

திரையில் வரும் கதாநாயக பிம்பத்தை நிஜத்திலும் பேண வேண்டிய கட்டாயம் ர‌ஜினிக்கு முன்பு வரை இருந்தது. அந்த அவஸ்தையை உடைத்தெறிந்தவர் ர‌ஜினி. தனது வழுக்கை விழுந்த தலையை பொது இடங்களில் மறைக்க ஒருபோதும் அவர் முயன்றதில்லை.
 

 

 

இப்படியாக சினிமா என்ற மாய பிம்பத்திலிருந்து விடுபட்ட அவர் மக்களோடு நெருங்கி விட்ட அவர் இனி செய்ய இருப்பது என்ன

 

ஒரு ரசிகனாக நானும் காத்திருக்கிறேன் அந்த ஒரு வார்த்தைக்காக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s