குதூகலத் தாத்தா…


 

கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர் கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ்தான். குழந்தைகளுக்கு குதூகலம் தருபவர் இந்தகிறிஸ்துமஸ் தாத்தா.

கிறிஸ்துமஸ் தாத்தாவின் வெண்தாடி, குலுங்கும் தொப்பை, விடைத்த மூக்கு, அவர் அணிந்துள்ள உடைகள் குழந்தைகளுக்கு வேடிக்கை அளிப்பவை. 72812652_70ac1290e8உடலின்பல பகுதிகளில் மறைத்து வைத்திருக்கும் இனிப்புகளை குழந்தைகளுக்கு அள்ளித் தந்து அவர்களை உற்சாகப்படுத்துபவர். எந்தக குழந்தையும் அவரிடம்ஏமாந்ததில்லை.

இந்தத் தாத்தா எப்படி உருவானார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லாவிட்டால் தொடர்ந்து படியுங்கள்.

முதன் முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டவர் செயின்ட் நிக்கோலஸ். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில். 4-ம்நூற்றாண்டைச் சேர்ந்த நிக்கோலஸ், பிஷப் பதவியில் இருந்தவர்.

குழந்தைகளிடம் அதிகம் பிரியம் கொண்டவர். அவரது கருணை உள்ளமும், தயாளகுணமும், குழந்தைகளிடம் கொண்டிருந்த பிரியமும் அவரை குழந்தைகளிடையேபிரபலமாக்கியது. அனைத்து குழந்தைகளும் அவரை நேசித்தனர்.

மறுமலர்ச்சி காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலங்களிலும் நிக்கோலஸ் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார். ஆனால் அவற்றில் ஒன்றில்கூட அவர் சாண்டாகிளாஸ் என அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதுள்ள குழந்தைகளுக்கு, 100 வருடங்களுக்கு முந்தைய சாண்டா கிளாஸ் தாத்தா குறித்து தெரியாது. அவரது அன்றைய உருவம் வித்தியாசமானது.அன்றும், இன்றும் மாறாதிருப்பது அவரது நீண்ட வெள்ளை தாடி மட்டும்தான்.

இப்போது வருவது போல் கிறிஸ்துமஸ்துக்கு முதல் நாளன்று பின்னிரவில் கிறிஸ்துமஸ் தாத்தா வருவதில்லை. டிசம்பர் 6-ம் தேதி இரவே வந்து கிறிஸ்துமஸ்பரிசுகளை கொடுப்பார்.

பழங்கள், சாக்லேட்டுகள், சிறு பொம்கைள் சிறு பொருட்களே பரிசாக வழங்கப்படும்.

16-ம் நூற்றாண்டில் சிலுவைப் போர் நடந்த போது செயின்ட் நிக்கோலஸ் ஐரோப்பியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். டச்சுக்காரர்கள் மட்டும் செயின்ட்நிக்கோலசின் பழக்கங்களை பின்பற்றி வந்தனர்.

மாலுமிகளை கப்பல் விபத்திலிருந்து காப்பாற்றியவர் செயின்ட் நிக்கோலஸ். டச்சுநாட்டிலிருந்து அமெரிக்கா வந்த கப்பலை விபத்திலிருந்து காப்பாற்றியவர் செயின்ட்நிக்கோலஸ். இதையொட்டி நியூயார்க் நகரில் கட்டப்பட்டுள்ள சர்ச்சுக்கு அவரதுபெயர் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காதான் சாண்டாகிளாஸை பிரபலப்படுத்தியது. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தகேலிச் சித்தரக்காரர் தாமஸ் நாஸ்ட் என்பவரால் உருவாக்கப்பட்டவர் சாண்டாகிளாஸ்.1863-ம் ஆண்டு முதல் 1886-ம் ஆண்டுவரை கிறிஸ்துமஸ் பற்றிய படங்களைஹார்பர் என்ற வார இதழில் தாமஸ் தாமஸ் நாஸ்ட் வரைந்திருந்தார்.

இந்த படங்கள் 20 ஆண்டுகள்வரை பிரபலமாக இருந்தன. பின் சாண்டாகிளாசின்உருவம் தற்போது இருப்பது போல் சிறிது சிறிதாக குழந்தைகளை கவரும் வகையில்வித்தியாசமாக உருவாக்கப்பட்டது.

சாண்டாகிளாஸ் குண்டானவராக, வெள்ளைதாடியுடன், தொந்தி விழுந்த வயிறுடன்,பல வண்ண உடை அணிந்து வேடிக்கையானவராக சித்தரிக்கப்பட்டார்.

சாண்டாகிளாஸ் குறித்து டாக்டர் மூர் எழுதிய புகழ் பெற்ற கவிதை இன்னும்அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளது. நாஸ்ட் வரைந்த ஓவியங்களும் சாண்டாஎவ்வாறு வருடம் முழுவதும், பொம்மைகள் வடிவமைப்பது, குழந்தைகளின்பழக்கவழக்கங்கள் குறித்தும், அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்குவது குறித்துமேசெலவழித்தார் என விளக்குகிறது.

சான்டாகிளாசின் பெயரில் இன்றும் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் நாளின்போதுபரிசுகள் வழங்கி குழந்தைகளை மகிழ்விக்கும் பழக்கம் தொடர்ந்து வருகிறது.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s