கிறிஸ்துமஸ் அறியாத விசயங்கள்


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்களின் துயர் துடைக்க, இறைவன் மண்ணில் அவதரித்தார். பல அற்புதங்களை நிகழ்த்தினார். தம்மை சிலுவையில் அறைந்தபாவிகளையும் கருணை கூர்ந்து மன்னித்தார். இறந்த 3-ம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்து விண்ணுலும் ஏகினார். அவர் தான் இயேசு கிறிஸ்து.

இயேசு, கிறிஸ்தவர்களின் கடவுள். ஆனாலும் அவருக்கு சாதி மத பேதம் கிடையாது. இன்றும் பலர் சாதி மத பேதமின்றி இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமசை கொண்டாடி வருகிறார்கள்.

கிறிஸ்துமஸ் விழாவைப் பற்றிய சில தகவல்களும், அதன் பின்னணி நிகழ்வுகளையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

கிறிஸ்துமஸ் என்பது உலகம் முழுதும் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது.

இயேசு அவதரித்த நாளே கிறிஸ்துமஸ். இயேசு கிறிஸ்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். இயேசு, டிசம்பர் மாதம் 25-ம் தேதிதான்பிறந்தாரா என்பது குறித்து சில சந்தேகங்களும் நிலவுகிறது. அவர் டிசம்பர் 25-ம் தேதிதான் பிறந்தார் என்பது குறித்து நிச்சயமாக யாரும் உறுதியாககூறுவதில்லை.

பண்டைய காலத்தில் டிசம்பர் மாதம் 25-ம் தேதி பெகன்கள் எனப்படும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், விருந்துண்டு கேளிக்கைகளில் ஈடுபடும்நாளாக b-jesusஇருந்ததால், அன்றைய தினம் விடுமுறை தினமாக இருந்தது. அவர்கள் இயேசுவையும் நம்புவதில்லை.

3-வது நூற்றாண்டின் போது ரோம் நகர பிஷப்பாக டெலஸ்போரஸ் என்பவர் இருந்தபோது டிசம்பர் 25-ம் தேதியை கிறிஸ்துவின் பிறந்தநாளாக கொண்டாடமுடிவு செய்யப்பட்டது. இது நடைபெற்றது கி.பி. 127 ஆண்டுக்கும் கி.பி. 139-ம் இடைப்பட்ட பகுதியில் என்பது குறிப்பிடத்தக்கது,

இயேசுவின் பிறந்த நாள் குறித்து பல் வேறு கருத்துக்கள், மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவந்த நிலையில், ரோம் நகர சர்ச் டிசம்பர் மாதம் 25-ம் தேதியை கிறிஸ்து பிறந்ததினமாக கொண்டாடுவது என முடிவு செய்தது. இந்த முடிவு கி.பி. 310-ம் ஆண்டுஎடுக்கப்பட்டது.

பல தலைமுறைகளாக கீழை நாடுகளின் சர்ச்சுகளால் இது ஒப்புக்கொள்ளப்படாமல்இருந்தாலும் 5-ம் நூற்றாண்டில்தான் உலகம் முழுவதிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முதல் கிறிஸ்துமஸ் எப்போது ?

5-ம் நூற்றாண்டில் கிறிஸ்து பிறந்த நாள் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரோம் நகரில்இயேசு பிறந்த தேதி, ஆண்டு குறித்து மீண்டும் சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால்இதற்கு முன்பே இயேசுவின் சீடரான மத்தேயுவின் போதனைகளில் இயேசு, ஹீரோட்மன்னன் காலத்தில் பெத்தலஹேமில் பிறந்தார் என கூறியிருந்தார்.

ஹீரோட் மன்னர் இறந்ததற்கும் இயேசு கிறிஸ்து பிறந்ததற்கும் இடையே சில காலஇடைவெளி இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

எங்குமே இயேசு கிறிஸ்து எந்த ஆண்டு பிறந்தார் என்பது குறிப்பிடப்படவில்லை.அவர் ஏ.யு.சி. 747-ன் மத்திய பகுதியிலோ, அல்லது ஏ.யு.சி 749-ம் ஆண்டின்இறுதியிலோ பிறந்திருக்கலாம். (ஏ.யு.சி. என்பது அன்னா உர்பிஸ் காண்டிடா,அதாவது, ரோம் நகரம் உருவானதிலிருந்து கணக்கிடப்படுவது). கி.மு. 7-ம்நூற்றாண்டுக்கும், கி.மு. 5-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இயேசுபிறந்திருக்கலாம் என்பதே சரியான கணிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பெஜன்கள் விழா மார்ச் மாதம் 25-ம் தேதி கொண்டாடப்பட்டு வந்தது. அந்த நாளைகிறிஸ்தவர்கள், கேப்ரியல் தேவதை மேரிமாதாவை வந்து பார்த்த நாளாககொண்டாடுகிறார்கள். அதனுடன் 9 மாதங்கள் சேர்த்து டிசம்பர் மாதம் 25-ம் தேதிஇயேசு கிறிஸ்து பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

தற்போது கிடைக்கும் பல தகவல்களின் படி கிறிஸ்துமஸ் முதலில் கொண்டாடப்பட்டவருடம் கி.பி. 534-ம் ஆண்டு என தெரியவந்துள்ளது.

 

இயேசுவின் தரிசனம்…

 

 

 இயேசு பிறந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் அவரைப் பார்ப்பதற்காக கிழக்கு பகுதியிலிருந்து இயேசு கிறிஸ்துவை பார்ப்பதற்காக சாஸ்திரிகள்ஜெருசலேம் நகருக்கு வந்தனர்.angels20annoucing20jesus20birth

கிழக்குப் பகுதியில் உதித்த நட்சத்திரத்தைப் பார்த்து அவர்கள் இயேசு பிறப்பை உணர்ந்தனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன், ஏரோது மன்னன்அதிசயித்தான். ஜெசருசேலம் நகர மக்களும் அதிசயித்தார்கள்.

இயேசு எங்கு பிறந்திருப்பார் என அறிய வேத ஆச்சாரியர்களைக் கூப்பிட்டு ஏரோது மன்னன் விசாரித்தான். அதற்கு அவர்கள்,பெத்தலஹேமில் பிறப்பார்என தீர்க்கதரிசிகள் கூறியதாக சொல்லவும், சாஸ்திரிகளை அழைத்து இயேசு கிறிஸ்து பிறந்திருப்பதை பார்த்து விட்டு வருமாறும், வந்து என்னிடம்சொல்லுமாறும் கூறி அனுப்பி வைத்தான்.

இதைத் தொடர்ந்து விண்ணில் தோன்றிய நட்சத்திரம் வழி காட்ட அதை தொடர்ந்து அனைவரும் சென்றனர்.

zwisemenfindjesusநட்சத்திரம் அவர்களை இயேசு பிறந்த வீட்டின் முன் இட்டுச் சென்றது. அங்கு மரியாளின் மடியில் கருணையே உருவாக தவழ்ந்து கொண்டிருந்தார் இயேசு பிரான்.குழந்தை இயேசுவையும், மரியாளையும் வணங்கி தாங்கள் கொண்டு சென்றிருந்த பொன்னையும், பொக்கிஷங்களையும் கொடுத்து மகிழ்ந்தனர்.

 

 

நாமும் இயேசு எங்கே என்று தேடி அலைகிறோம்

நம்மையும் இயேசுவிடத்திலே கொண்டு சேர்க்க இன்றும் நட்சத்திரங்கள் தோன்றுவதுண்டு அதை நாம் பின்பற்றுகிறோமா . . .

 

பின்பற்றுவோம்

இயேசுவினை தரிசிப்போம் . . .  

Advertisements

3 comments on “கிறிஸ்துமஸ் அறியாத விசயங்கள்

 1. இயேசுவைக் காண யாரும் எங்கும் செல்ல வேண்டாம்
  இக்கிருபையின் காலத்தில் நட்சத்திரத்தை பார்த்து ஏங்க
  வேண்டிய அவசியமும் இல்லை
  உன் முளு உள்ளத்தோடும் முளு ஆத்துமாவோடும்
  இயெசுவை நோக்கி ஜெபம் செய் உன்னை அவர் கண்டு
  கொள்வார்,அவர் உனக்குள் பரிசுத்த ஆவியை அனுப்புவார்.

  வின்செண்ட்.ஆ.ராபின்சன்

 2. இயேசுவைக் காண யாரும் எங்கும் செல்ல வேண்டாம்
  இக்கிருபையின் காலத்தில் நட்சத்திரத்தை பார்த்து ஏங்க
  வேண்டிய அவசியமும் இல்லை
  உன் முளு உள்ளத்தோடும் முளு ஆத்துமாவோடும்
  இயெசுவை நோக்கி ஜெபம் செய் உன்னை அவர் கண்டு
  கொள்வார்,அவர் உனக்குள் பரிசுத்த ஆவியை அனுப்புவார்.

 3. god varalam athuka ulakam aliyavenduma solunka manithan aliyavenduma god varadum thapu ilainka anna manithan en aliaya vendum valkila nan padishudu ipathan work poren ena pethavankala sathosama vashuka kuda ila nan god varamei irukalam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s