அமெரிக்க அதிபர் மீது காலணி வீச்சு


 

ராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார்.

பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார்

 

அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார். ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார்.

முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது. 2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.

இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சில வீரர்கள், நிருபரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை பேச விடாமல் மடக்கிப் பிடித்தபடி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ஈராக் 21 ம் நூற்றாண்டின் துயரம் என்று சொன்னால் மிகையாகாது. பலவிதமான குழப்பங்களும் கொடுமைகளும் இருந்ததுதான் என்றாலும் அவை எல்லாம் ஒரு எரிமலை போல் பதுங்கியே இருந்தது காரணம் சதாம் ஹுசைன். பல முகங்களாக அறியப்பட்ட சதாம் அதிபராக இருந்த காலத்தை விட  மிக கோரமான விளைவுகளை தற்போதைய ஈராக் சந்திக்கும் போது அந்த மக்களுடைய வாழ்க்கை பொருளாதார வளர்ச்சி எல்லாம் பாதிக்கப்படத்தான் செய்தது.

 

எந்த ஒரு நாடு எடுக்கும் நடவடிக்கையும் எல்லோரையும் திருப்திப்படுத்த இயலாது. அதேபோலத்தான், வளைகுடாவில் அமெரிக்காவின் தலையீடு தேவையாயிருந்தாலும், அது சரிவர திட்டமிடப்படவில்லை என்பதே சரி.

 

 

அது சதாமோ அல்லது அமெரிக்க பலத்துடன் ஆட்சி செய்யும் தற்போதைய அரசோ எதுவாக இருக்கட்டும் குறைந்த பட்சம் குடிமக்கள் அமைதியுடன் வாழ வழி செய்ய வேண்டும்.

 

இச்சம்பவம் அமெரிக்கா மற்றும் புஷ் மீது மத்திய கிழக்கு பிரதேச மக்களின் கோபத்தின் பிரதிபலிப்பாக எடுத்து கொண்டாலும் சம்பவம் கண்டிக்கத்தக்கதே. அதுவும் உலகின் முதல் குடிமகன் என்றழைக்கப்படும் அமெரிக்க அதிபர் மீது இத்தகைய செயல் என்பது மிக வன்மையாக கண்டிக்கபட வேண்டியதாகும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s