ஆசிட் வீசிய மாணவர்கள் சுட்டு கொலை


ஆசிட் வீசிய மாணவர்கள் சுட்டு கொலை

 

 

ஹைதாபாத்: இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டனர்.வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ககதிய இன்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் பயிலும் ஸ்வப்னிகா, பிரனீதா ஆகியோர் தங்களது டூ வீலரில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.அவர்களை பைக்கில் வந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய், ஹரிகிருஷ்ணா, ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் வழிமறித்து ஆசிட் ஊற்றிவிட்டுத் தப்பினர்.இதி்ல் இரு மாணவிகளின் முகம், உடல் வெந்துபோனது. இருவருமே மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் அதிர்ந்து போன முதல்வர் ராஜசேகர ரெட்டி மாணவர்களை உடனடியாகப் பிடிக்க உத்தரவிட்டார். போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து சிவபிரசாத் ராவ் உள்பட 4 மாணவர்களையும் கைது செய்தனர்.

இதையடுத்து மூவரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்றிரவு விசாரணைக்காக கொண்டு சென்றனர்.எந்த இடத்தில் வைத்து ஆசிட் ஊற்றினார்களோ அதே இடத்தில் வைத்து மூவரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். மூவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் சுட்டிக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்டது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி மிகுந்த அதிர்ச்சி தெரிவி்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இந்த எண்கெளன்டர் நடந்துள்ளது.

செய்திக்கு நன்றி: தட்ஸ் தமிழ்

 

 

இது தாண்டா போலிஸ்

 

முதலில் சட்டம் என்பதை புத்தகத்தோடு மட்டும் நிறுத்திவிடாமல் மனசாட்சி படி மக்களுக்காக  அச்சட்டத்தை தன்வசமாக்கிய அந்த காவல்துறைக்கு என் நன்றி.

 

என்ன நடக்கிறது

 

எப்படி முடிந்தது ஒரு மாணவன் இன்னொரு மாணவி மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்தும் அளவிற்கு அவன் மனம் மாற காரணம் எவை என்ன யார் இப்படி பல கேள்விகள்

விடை ???

 

காதல்

அது இத்தனை கொடுரமானாதா இல்லையே பின் ஏன் காதலினால் இப்படி. இப்பல்லாம் காதல் என்பது இளைஞர்கள் மத்தியில் குறைந்து இனக்கவர்ச்சி அதிகமாகிவிட்டதுதான் காரணமா??? முன்பு காதலுக்காக தியாகம் செய்த கதைகள் அதிகம் காதல் தற்கொலைகள் அதிகம் இப்போ காதல் கொலைகள் அதிகமாகிவிட்டன. மனிதன் மாறிவிட்டான் தனக்கு என்ற வட்டத்துக்குள் ஒதுங்கி விட்டான். எதுவானாலும் தனக்கு வேண்டியது கிடைக்க வேண்டும் என்ற குறுகிய வட்டத்துக்குள் இருக்கு வரை அதை அடைய அவன் எத்தகைய முடிவுகளையும் எடுக்கிறான் கிடைக்காத பட்சத்தில் இப்படி சம்பவங்கள் நடக்கின்றன.

 

இதற்கு காரணம் என்ன எவை . . .???

 

வேகம்

வாழ்க்கை வேகமாகிவிட்டது அதிக வேகத்தில். எதை என்று இல்லாமல் எதையோ தேடி மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள் ஓட்டம் நிறுத்தப்படும் போது என்ன மீதமுள்ளது என்பதை பார்க்க யார் இருக்கப்போகிறார்கள் தெரியவில்லை. ஆனாலும் வேகம் அதனால் இழந்தது எத்தனை அவர்கள் அறிவதில்லை. உறவுகளை இழந்துவிட்டார்கள். குழந்தைகள் குழந்தை தனத்தை இழந்துவிட்டது. குழந்தை வளர்ப்பு என்பது புத்தகங்களில் மட்டுமே படிக்க கூடிய குறிப்புகளாகிவிட்ட நிலையில் அவசர உலகில் வளர்க்கப்படும் குழந்தைகள் சிறிய வயதையோ வாலிப வயதையோ அடையும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் உணர முடிகிறது அல்லவா.

 

எந்த தவறுக்காக அந்த இளம் பெண்களுக்கு இந்த தண்டனை. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள் அதுவும் நிமிடத்துக்குள் முடிந்தது. இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும், வாழ்நாள் முழுவதும் சம்பவத்தின் சுவடுகளை சுமக்க வலிமை வேண்டுமே. பரிகாசமும் கிண்டலும் மிகுந்த கெட்டுப்போன சமுதாயம் அவர்களை நிம்மதியாக வாழ விடவேண்டுமே. இத்தனையும் தண்டனையில்லையா. ஒரு முறை இறப்பதை வெறுக்கும் நாம் இனி இவர்கள் தினமும் இறக்க நேரிடுமே அதை என்ன செய்யப்போகிறோம்.

 

நல்ல சமுதாயம் குற்றங்கள் இல்லாத குடும்பம் அமைய இல்லை அமைக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. சுட்டு கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பம் அடையும் வேதனை எல்லா பெற்றோரும் உணரக்கூடியதே. இது போன்ற செய்திகளை படித்து அதைப்பற்றி இரண்டு நாள் இல்லை நேரம் இல்லாத காரணத்தால் இரு நிமிடம் உச் கொட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்காமல் சற்றே சிந்தித்து அவரவர் குடும்பம் சிறக்க கவனம் வைத்தால் உங்களுக்கு சந்தோசம்.

 

இனியும் இது போன்ற செய்திகள் வராமல் இருக்க அது உதவும் . . .

 

அன்பு கோபம் கொள்ளாது

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s