இளைஞர்களின் வெற்றி

இளைஞர்களின் வெற்றி

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் . . .

வரும் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் எல்லா வளங்களை தர வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்

 

கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு இராஜாக்கமங்கலம் துறையில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் வரிசையில் நமது ஊரின் வெண்லில்லி விளையாட்டு குழுவின் கால்பந்தாட்ட அணியும் கலந்து கொண்டது.

முதல் போட்டியாக மறவன் குடியிருப்பு அணியுடன் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளுமே கடுமையான போராட்டம் செய்த போதிலும் கோல் ஒன்றும் அடிக்காமல் சமநிலையில் இருக்க, இறுதியாக “டைப்ரைக்கர்” என்ற முறையில் நமது ஊர் அணி வெற்றி பெற்றது.

அடுத்த சுற்று ஆட்டத்தில் பட்டசாலியன் விளை அணியுடன் விளையாடியது, மிக சிறப்பாக நடந்த இந்த விளையாட்டிலும் இறுதி வரை கோல் அடிக்க முடியாமல் இரு அணிகளும் திணற இறுதியில் ”டைப்ரைக்கர்” என்ற முறையில் இதிலும் வெற்றி பெற்றது.

அரைஇறுதி போட்டியில் இராஜாக்கமங்கலம் பி அணியினருடன், மோதியது நமது அணி, மிக சிறப்பாக ஆடிய நமது அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் அரைஇறுதியிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதி போட்டியில் இராஜாக்கமங்கலம் துறை முதல் நிலை அணியுடன் மோதிய நமது அணி துவக்கமுதலே மிக சிறப்பாக விளையாடியது (ஏற்கனவே இரண்டு போட்டிகள் விளையாடிய போதிலும்) முதல் இடைவேளைக்கு முன்பாகவே முதல் கோலை அடித்து வெற்றிக்கு முதல் மணி அடித்த்து நமது அணி, அதை தொடர்ந்து இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கடும் போட்டியில் விளையாட, இரண்டாவது பாதி துவங்கிய 10 நிமிடங்களுக்குள் இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தது நமது அணி, இரண்டாவது கோலை தம்பி கிரீதன் மிக சிறப்பாக அடித்தார்.

அதன் பிறகு இராஜாக்கமங்கலம் துறை அணி பரபரப்பாக விளையாடி கோல் அடிக்க முனைய அந்த முயற்சிக்கு இறுதியில் வெற்றியும் கிடைத்தது அணியின் முதல் கோலை அடிக்க, ஆட்டம் இன்னும் சூடு பிடித்தது. இராஜாக்கமங்கலம் அணியினர் இரண்டாவது கோலை அடிக்க மிக ஆக்ரோசமாக விளையாட, நமது அணியோ தடுப்பாட்ட முறையில் அமைதி காத்தது, இதற்கிடையே மூன்றாவது கோல் அடிக்கும் வாய்ப்பு வந்து போனது . இதற்குள் ஆட்டம் முடிவுக்கு வர இரண்டுக்கு ஒன்று என்றளவில் ஆட்டம் நிறைவு பெற்றது. நமது அணி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.

நமது அணி வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். அவர்களுக்கு எனது மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.